சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, February 12, 2013

கூட்டுக் குடும்பங்கள்

சிறுவயதில் இருந்தே கூட்டுக் குடும்பங்கள் மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. எதையும் பகிர்ந்து வாழும் வாழ்க்கை என்றுமே சொர்க்கம் தான். ஆனால் எனக்கு தேவையின் காரணமாக அவ்வாறு சிறுவயதில் இருந்தே வீட்டுடன் இருக்க முடியாமல் போய் விட்டது தான் பெரும் வருத்தம்.


இன்று கூட பசுமையாக என் நினைவில் நிற்பது என் தாத்தா வீட்டு வாழ்க்கை தான். அம்மாவின் தாய் வீடு நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் என்ற கிராமத்தில் உள்ளது. அந்த ஊரில் உள்ள அனைவருமே எங்கள் சொந்தக்காரர்கள் தான். என் அப்பாவை திருமணம் செய்து கொண்டு திருவாரூர் வந்து விட்ட பிறகும் கூட அம்மாவிற்கு ஆதனூரில் தான் சனி, ஞாயிறு கழியுமாம்.

என் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விடுமுறை முழுவதும் ஆதனூரில் தான் கழியும். தாத்தாவிற்கு பிறந்த ஏழு பேர், அவர்களின் துணைகள், வாரிசுகள் என அனைவரும் கோடை விடுமுறைக்கு ஆதனூர் வந்து விடுவர்.


தாத்தா முழு நேர விவசாயி. காலையில் எழுந்து நீராகாரம் குடித்து விட்டு வயலுக்கு சென்று வேலையை துவக்கி வைத்து விட்டு வேப்பங்குச்சியில் பல் துலக்கிக் கொண்டே வீட்டுக்கு வருவார். வந்ததும் பழைய சோத்துடன் முதல்நாள் வைத்த குழம்பை சுண்டக்காய்ச்சியது, நெருப்பில் சுட்டு கருவாடு அல்லது உப்புக்கண்டம் வைத்து திருப்தியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு போய் விடுவார்.

நாங்கள் பேரப்பிள்ளைகள் அனைவரும் அது போலவே அதிகாலையில் அவருடன் எழுந்து வயலுக்கு சென்று விட்டு வயக்காட்டிலேயே காலைக்கடன்களை முடித்து விட்டு தும்பி பிடித்து விளையாடிக் கொண்டு, கொடுக்காப்புளிக்கா எடுத்து தின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருப்போம்.


தாத்தா போகலாம் என்று சத்தம் போட்டதும் அவருடனே வீட்டுக்கு வரும் வழியில் வேப்பங்குச்சியில் பல்துலக்கிக் கொண்டு வருவோம். அது கசப்பா இருக்கும், முடியாதுன்னு சொன்னா தாத்தா திட்டுவாரேன்னு சும்மா குச்சியை கடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பாட்டியிடம் கொஞ்சம் பேஸ்ட் வாங்கி பல் துலக்கினால் தான் நமக்கு சரிப்பட்டு வரும்.

மாமாக்கள் நால்வரில் மூவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் சென்னையில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டில் தாத்தாவுக்கு அடங்கிய பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். வீட்டில் என்ன சாப்பாடு என்று முடிவு செய்வது முதல் யார் எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பது என்பது வரை தாத்தா முடிவு தான்.

காலை சாப்பாடு முடிந்ததும் பேரப்பிள்ளைகளான நாங்கள் அனைவரும் தோப்புக்கு விளையாட சென்று விடுவோம். பயங்கர பசியுடன் தான் வீட்டிற்கு வருவோம். மதியம் சாப்பாட்டில் பெரும்பாலும் அசைவம் தான். தாத்தாவின் பேவரைட் கறிக்கோலா உருண்டை குழம்பும் ஆட்டுக்கறி வறுவலும் தான்.


ஒருவேளை இந்த குடும்பம் சாப்பிட ஒரு ஆட்டையே அடிக்க வேண்டியிருக்கும். வீட்டில் கோழி, ஆடு, கின்னிக் கோழி, புறா, வான்கோழி எல்லாமே வளர்ப்பதால் கடையில் வாங்க மாட்டார்கள்.

சாப்பிட்டதும் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக போர்செட்டுக்கு சென்று விடுவோம். ஒவ்வொருத்தருக்கும் எண்ணெய் தேய்த்து ஊறியதும் சீயக்காய் தேய்த்து குளிக்க வைத்து கறையேற்றி விடுவார்கள்.

சாயந்திரம் ஆனதும் தாத்தா குளிக்கப்போகும் போது வீட்டில் உள்ள மாடுகளையும் குளத்திற்கு ஒட்டிச் செல்வார். நாங்களும் ஆளுக்கொரு மாட்டை கொண்டு தேவர்குளத்திற்கு செல்வோம். அதில் எனது பேவரைட் ராமாயி என்ற எருமைமாடு தான்.

குளத்தில் எருமையின் மேல் படுத்துக் கொள்ள கரெக்ட்டாக நான் மூழ்கும் வரை உள்ள அளவுக்கு நீரில் நிற்கும். இருட்டும் வரை குளத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று அனைவரும் வீட்டின் வெளியில் உள்ள புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்போம்.

இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நெடுநேரம் பேசியிருந்து பிறகு உறங்கிவிடுவோம். இது எனக்கு வருடத்திற்கு இரண்டு மாதம் தவறாமல் நடக்கும். கோடை விடுமுறை முடிந்ததும் திருவாரூர் வந்து விடுவேன். பத்துநாட்களுக்கு மனம் அந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலேயே லயித்துக் கிடக்கும்.

அன்றே முடிவு செய்தேன். நான் மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தை அமைத்து என் தம்பி, ஒன்று விட்ட சகோதரர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான் வாழ வேண்டுமென. ஆனால் மேற்சொன்ன குடும்பமே ஒரு சாவின் காரணமாக அடித்துக் கொண்டு பிரிந்து யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் திசைக்கொருவராக இருப்பது எனக்கு ஜீரணக்க முடியாத சோகம்.

தெலுகில் பத்து வருடங்களுக்கு முன் முராரி என்றொரு படம் வந்தது. இன்று வரை அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் நான் இத்தனை முறை விரும்பி பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் இரண்டு அருமையான கூட்டுக் குடும்பங்கள் தான்.

தமிழில் எனக்கு இந்த உணர்வை தந்தது வருஷம் 16. சமீபத்தில் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு தெலுகு படம் பார்த்தேன். உணர்ச்சிக் குவியலான அந்த படத்தினை இடைவேளைக்கு பிறகு அழுது கொண்டே தான் படம் பார்த்தேன்.

இன்று வரை எனக்கு என் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆசை மனதில் பசுமையாக காத்திருக்கிறது. இத்தனை பெரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கையை என் மனதில் வித்திட்ட தாத்தா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  மறுபடியும் கூட்டுக்குடும்ப எண்ணம் என் மனதில் துளிர்விட்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் என் தம்பிகள் இது புரிந்து ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.




ஆரூர் மூனா செந்தில்

36 comments:

  1. நல்ல பதிவு செந்தில். சிலதையெல்லாம் மீட்டெடுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமரபாரதி

      Delete
  2. நாங்கள் கூட்டு குடும்பம்தான் ... அதன் அருமை , சந்தோசம் எல்லாம் அனுபவித்தால் மட்டுமே தெரியும் ...

    ReplyDelete
    Replies
    1. குடுத்து வைத்தவர் நீங்கள், நன்றி ராஜா.

      Delete
  3. உங்கள் இடுகையில் இது ஒரு நல்ல இடுகை! படத்தில் இடமிருந்து வலம் முதலாவது நீங்களா?

    கிராமத்தில் வளர்ந்த உங்களுக்கே இவ்வளவு ஆசை என்றால், சென்னியில் வளர்ந்த நாங்கள் ஒரு ஒரு மாதம் இரண்டு மாதம் கோடைக்கு செல்லும் எங்களுக்கு எப்படி இருக்கும்...சென்று அனுபவித்ததை...மறக்க முடியாது... கிராமத்தில் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வாழாதவர்கள் வாழ்க்கை - நிறைவடையாது..சூன்யம் தான்.

    என் இளமைக்கால நினைவுகள்...அதை வைத்து வருடம் 16 மாதிரி 16 படங்கள் எடுக்கலாம்.

    நான் எனது பதிவை ஆரமபித்ததே என் இளமைக்கால நினைவுகள்களை அசைபோட...ஆனால்,

    அரசியல், ஜாதி, சமூகம், அமெர்க்கா இப்படி இடுகைகள்...திசை மாறி...இப்போ என் ரசனை தமிழ் கவிதையில் போய் நிற்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, முதல் படத்தில் விளையாடும் சிறுவர்களில் பெரியவன் நான். இரண்டாவதில் இடமிருந்து வலமாக முதலில் இருப்பது நான். மற்றது என் தம்பி மற்றும் சித்தி பசங்க.

      நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சுகமே தனி. நீங்களும் முயற்சியுங்கள்.

      Delete
    2. ஏற்கனேவே அப்பப்ப எழுதி வைத்திருக்கிறேன்; என் ஆத்துக்காரி தான் எடுத்தஉடன் உங்கள் இளைமைக் காலத்தை எழுத வேண்டாம். அப்படி எழுதினாலும் யார் படிப்பாங்க? ஒரு வருடமாவது கழித்து எழுதுங்க என்றாகள்.

      பதிவுலக் சேர்ந்து எழுத அரம்பித்து பத்து மாதம் ஆகிறது...பாப்போம்.

      Delete
    3. அதெல்லாம் படிப்பாங்க நண்பரே, வாழ்வியலின் அனுபவத்தை படித்து தெரிந்து கொள்ளும் சுகமே தனி. ஆனந்த விகடனில் வட்டியும் முதலும் அப்படித்தானே பிரபலமடைந்தது. இது காரசாரமில்லாதது. மனதிற்குள் தென்றல் வீசும் சமாச்சாரம்.

      Delete
    4. ஆரூர் அண்ணா.... நம்பள்கியிடம் சொல்லுங்கள்.
      வயிற்றுக்குள் பத்து மாதம் வரை தான் தாக்குப் பிடிக்க முடியும்...
      இனி கவிதை குழந்தைகளைப் பெற்றெடுக்கச் சொல்லுங்கள்.
      நன்றி.

      Delete
    5. நம்பள்கி கேட்டுக்கங்க, வெளிவராத தங்கள் கவிதைக்கு முதல் ரசிகை தயார், நான் இரண்டாவது. எப்ப வெளியிடப் போறீங்க.

      Delete
  4. சூப்பர் போஸ்ட் செந்தில், ரசித்துப் படித்தேன்.....! சீக்கிரமே கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிட்ட வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பன்னியாரே, ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணுமேன்னு நினைச்சேன். வந்துட்டீங்க நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

      Delete
  5. //என்றாவது ஒருநாள் என் தம்பிகள் இது புரிந்து ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.//

    நிச்சயம் சேர்வார்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி புரட்சி தமிழன்

      Delete

  6. உங்கள் பதிவு ரொம்ப அருமையா இருக்கு செந்தில்.

    கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏங்கும் ஜீவன் நான். சென்னையில் பாட்டி வீட்டில் மாமாக்கள், சித்திகள் குடும்பம் எல்லாம் வாரம் தவறாமல் கூடி ஜாலியா இருக்கும்போது நாங்க மட்டும் மதுரை மாவட்டத்தில் எதாவது ஒரு ஊரில் கிடப்போம்:(

    எப்பவாவது பாட்டி வீட்டுக்கு லீவில் வந்தால் செம ஜாலி.

    அதெல்லாம் இனி கனவில்தான்:((((

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி துளசி கோபால் அம்மா.

      Delete
  7. எப்பொழுதுமே இப்படி சாத்தியம் இல்லையென்றாலும்
    விடுமுறை நாட்களிலாவது சேர்ந்திருக்க வாழ்த்துக்கள்!

    பதிவு அருமையாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி அருணா செல்வம்

      Delete
  8. அந்த சந்தோசமே தனி... ...ம்...

    உங்கள் நம்பிக்கை விரைவில் நிறைவேற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி தனபாலன்

      Delete
  9. முதலில் சொன்ன உண்மையை மறுபடியும் சொல்கிறேன்: தமிழ் கவிதைகள் எழுதவதில் என் அசாத்திய திறமை எதிரொலி மாதிரி...வாத்தியார் பாடம் எடுக்க எடுக்க நாங்க [எங்க மொழியில்] உடனுக்கு உடன் [எங்க] கவிதையாக மாற்றிவிடுவோம்.

    அதே சமயம் நான் தனியா சிந்திந்து கவிதை எழுதமுடியும்; எழுதியிருக்கேன்; அனால், நான் எழுதின கவிதைகளை இங்கு வெளியிடமுடியாது வெளியிடவே முடியாது...புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன. நிற்க.

    ஆனால், என் உண்மையான இளமை கால் நினைவுகள் சீக்கிரம் வரும்; மன்னிக்கணும்...பிரசிவிக்கும், ஒன்றன் பின் ஒன்றாகா...தொடராக!
    -------------

    [[அருணா செல்வம்February 13, 2013 at 3:35 AM
    ஆரூர் அண்ணா.... நம்பள்கியிடம் சொல்லுங்கள்.
    வயிற்றுக்குள் பத்து மாதம் வரை தான் தாக்குப் பிடிக்க முடியும்...
    இனி கவிதை குழந்தைகளைப் பெற்றெடுக்கச் சொல்லுங்கள்.
    நன்றி.
    ---
    ஆரூர் மூனா செந்தில்February 13, 2013 at 7:41 AM

    நம்பள்கி கேட்டுக்கங்க, வெளிவராத தங்கள் கவிதைக்கு முதல் ரசிகை தயார், நான் இரண்டாவது. எப்ப வெளியிடப் போறீங்க.]]

    ReplyDelete
    Replies
    1. தொடராவே வருதா, பிரமாதம்.

      Delete
  10. ஆலமரத்தின் கீழ் வளரும் மரங்களின் நிலைமை கொடுமை என்று எங்கோ படித்தது உறுத்திக் கொண்டே இருந்தாலும் பலருக்கும் ஆலமர நிழல் அவசியம் என்று மனம் சொல்கிறது... இன்னும் கூட்டுக் குடும்பமா தனிக் குடித்தனமா? எது சிறந்து என்பது குறித்து முடிவு எடுக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றே தெரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம பக்கம் வந்து இருக்கீங்க, நன்றி சூர்யஜீவா.

      Delete
  11. மச்சி எனக்கு கூட்டுக்குடும்பம் என்று சொல்ல முடியாது விடுமுறை நாட்களில் எங்க பெரியப்பா வீட்டில் கூடுவோம்... திருவிழா தினங்களில் எல்லாரும் ஒன்று சேர்ந்து கிடா வெட்டு நடக்கும் உங்கள் பதிவினால் என் ஞாபகங்கள் பின்னோக்கி பசுமையாக இருந்தது மச்சி...

    ஒரே சிறப்பு எங்கள் குடும்பத்தில் என்ன வென்றால் திருவிழா என்றால் என்றால் கிடாதான்...

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீ கூட நம்ம ரகம் தானா, நன்றி மச்சி. நம்ம ஊர்லயும் எல்லாத்துக்கும் கடா வெட்டு தான்.

      Delete
  12. கூட்டு குடும்பத்தில் இருக்கும் ஏதோ ஒரு குடும்பம் மட்டும் நிறைய விட்டு கொடுத்தும்,நிறைய பொருளாதாரத்தை இழந்தும் இருக்க வேண்டியது வரும். செய்தவர்களுக்கு பிறகு நன்றி சொல்ல கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள்.கூட்டு குடும்பத்தால் நிறைய பிரச்சனைகளை பார்த்து நொந்து போய் இருக்கிறேன்.அக்கரைக்கு இக்கரை பச்சை போல..

    ReplyDelete
    Replies
    1. பொருளாதாரம் என்பது மருமகள்கள் கணக்கு போடும் விஷயம். இல்லத்து ஆண்கள் பாசத்தை மட்டுமே பங்கிடுவார்கள்.

      Delete
    2. சூப்பரா சொன்னிங்கனே

      Delete
    3. நன்றி ஆரிப்.

      Delete
  13. அருமையான நினைவலைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ நடராஜன் அய்யா.

      Delete
  14. கூட்டுக் குடும்ப வாழ்க்கை இனிமைதான்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  15. நீங்களே ஏன் உங்கள் தம்பியிடம் சமாதான பேச்சு ஆரம்பிக்க கூடாது????

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது பொருளாதார தேவையின் காரணமாக ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம். நான் சென்னையில் தம்பி திருவாரூரில், மற்றொருவர் சிங்கப்பூரில் மற்றொருவர் லண்டனில் மற்றொருவர் கோவையில் இருக்கிறோம். இதில் பலருக்கு திருமணமாகவில்லை. அனைத்தும் ஒன்று சேரும் நாளை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

      Delete
  16. அருமையான பகிர்வு.
    உங்கள் எண்ணம்போல் குடும்பங்கள் இணைய வாழ்த்துகள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...