சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, February 22, 2013

ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

எப்போதுமே படம் ஆரம்பிக்கும் போது பார்த்தால் தான் நமக்கு பார்த்த மாதிரி இருக்கும். அடிக்கடி அதனை தவற விட்டு எரிச்சலடைவது என் பொழுது போக்கு. இன்று கூட அப்படி ஆனது தான் கடுப்பு.

இன்று வேலைக்கு போய் அப்படியே எஸ்ஸாகி ஏஜிஎஸ்சுக்கு போனேன். ஆனால் 9 மணிக்கே படத்தை போட்டு விட்டனர். கால்மணிநேரம் லேட். கடுப்பை அடக்கிக் கொண்டு அரங்கிற்கு நுழைந்தேன்.


படத்தில் ரொம்ப சீரியஸாக பாபு ஆண்டனியும் ரவியும் விவாதித்துக் கொண்டு இருந்தனர். படம் புரியவே பத்து நிமிடம் ஆனது. இனி கதைக்கு வருவோம். ஜெயம்ரவி (ஆதி) பாங்காக்கில் கடத்தல் பிஸினஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நீது சந்திராவை கண்டு காதலில் விழுகிறார். ஒரு மோதலில் நீது ரவியின் உயிரைக் காப்பாற்ற காதல் வலுப்பெறுகிறது. காதலுக்கு சம்மதம் பெறுவதற்காக மும்பைக்கு நீதுவுடன் பயணிக்கிறார்.

இந்த இடம் வரை ஏதோ சாதாரண படம் போலவே போய்க் கொண்டு இருந்தது. படம் சுத்த காலி என்றே நினைத்திருந்தேன். ஆனால் அமீர் அந்த இடத்தில் வச்சாரு பாருங்க டுவிஸ்ட். அதுல ஆரம்பிக்கும் படம் பரபரவென்று செல்கிறது.


உண்மையில் நீது வந்து காதலிப்பது போல் நடித்து ரவியை ஏமாற்றி மும்பை அழைத்து செல்கிறார். எதற்காக என்றால் மும்பையில் ஒரு ரவி இருக்கிறார். அவர் பெயர் பகவான். அவரை மும்பை போலீஸ் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள முயற்சிக்கிறது. அவரை விடுவிப்பதற்காக அவரைப் போல் உருவம் கொண்ட ரவி(ஆதி)யை ஏமாற்றி சிக்க வைக்கிறார் பகவானின் காதலியான நீது. போலீஸில் சிக்கிக் கொண்ட ரவி என்ன செய்கிறார் என்பதே கதை.

இவர்கள் அந்த டுவிஸ்ட்டுக்கு பிறகு உள்ள கதையை முதலில் முடிவு செய்து அதற்கு ஏற்றாற் போல் முன்பாதியை சுமாராக அமைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை சரியாக செய்திருந்தால் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும். இப்ப ஓகே என்ற அளவில் தான் சொல்ல முடியும்.


ஜெயம்ரவி போன வருடம் முழுவதும் படமே வரவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார். அது திரையில் நன்றாகவே வந்திருக்கிறது. படத்தின் ஸ்பெஷலே பெண்மைத்தனம் உள்ள பகவான் கேரக்டர் தான்.

கொஞ்சம் புரியாமல் பார்த்தால் அரவாணி போல் தெரியும் கதாபாத்திரம் அது. சஸ்பென்சுக்காக அந்த கதாபாத்திரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்திருக்கிறார்கள். நடிப்பில் பிச்சு உதறியிருக்கிறார் ரவி.

பகவான் கேரக்டரில் பிச்சு உதறியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த நளினம் என்ன, நடை என்ன அப்பப்பப்பா, கொஞ்ச காலத்துக்கு எல்லோர் மத்தியிலும் அந்த நடை பேசப்படும். ஒரு சண்டையில் அந்த நளினத்துடன் அடிப்பார் பாருங்க சூப்பரோ சூப்பர். 


நீது சந்திரா ஹீரோயின் என்று சொல்ல முடியாத முக்கிய கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் அருமையாக சண்டையும் செய்கிறார். என்னா காலு, என்னா ஸ்ட்ரக்சரு ப்ப்ப்பா ப்ரச்சோதக பார்ட்டி. நம்மளால வெறும் பெருமூச்சு மட்டும் தான் விடமுடியும்.

முக்கியமாக சொல்ல வேண்டியது படத்தின் இசையைப் பற்றி. ஆரோ 3டியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது படம். பின்னணி இசையில் தியேட்டர் அதிர்கிறது. ஏஜிஎஸ்ஸிலேயே அப்படி என்றால் சத்யமில் சூப்பராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். படம் பார்க்க உண்மையிலேயே ப்ரெஷ்ஷாக இருக்கிறது. படம் முழுவதுமே ஸ்டைலிஷ்ஷாக வரவேண்டுமென்று எடுத்திருக்கிறார்கள். அது போலவே வந்திருக்கிறது.

படத்தின் குறையென்று சொன்னால் முதல்பாதி சவசவ என்று இருப்பது தான். அதனை மட்டும் சரியான முறையில் படமாக்கியிருந்தால் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கும்.  படம் இப்போ ஆவரேஜ் தான். அரைமணிநேரம் லேட்டாக போனாலும் தப்பில்லை.

இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பதில் அப்பட்டமாக அரசியல் தெரிகிறது. அப்படி ஒன்னும் சொல்லிக் கொள்வது போல் ஆபாச காட்சிகளோ ரத்தம் தெறிக்கும் வன்முறையோ கிடையாது.

அதைவிட முக்கியமாக தியேட்டரில் 18வயதுக்கு மேற்பட்டோரை மட்டும் தான் உள்ளே விடுவோம் என்று எச்சரித்து உள்ளே அனுப்புகிறார்கள். நானெல்லாம் 16 வயசிலேயே அப்பட்டமாக பிட்டு படம் பார்க்க திரையரங்கிற்கு போனேன். அய்யோ அய்யோ.

போலி என்கவுண்ட்டரை அடிப்படையாக கொண்டு கதைகளனை அமைத்திருக்கிறார்கள். இது உண்மையாகக் கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பது தான் சற்று அதிர்ச்சியான விஷயம்.


ஆரூர் மூனா செந்தில்

14 comments:

 1. அதெப்படி அண்ணே .....உடனுக்குடன் விமர்சனம் பண்ணுறீங்க ???
  படத்துக்கு 75 மார்க்ஸ் போடலாமா ???

  ReplyDelete
  Replies
  1. 60 மார்க் வேணும்னா போடலாம் விஜய். முதல் பாதி மட்டும் சரியாக அமைந்திருந்தால் டிஸ்டிங்சன்

   Delete
 2. பாக்கலாமா? வேணாமா? ஒரு வார்த்தைல சொல்லுங்க‌

  மும்பையில் அருகில் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு 50 கி.மீ. ட்ராவல் செய்ய வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் நண்பா, முதல் பாதியை தவற விட்டாலும் படம் புரியும்.

   Delete
 3. பெருமூச்சு........... வீடு வரை செல்லாமல் இருந்தால் சரி...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 4. //ஜெயம்ரவி (ஆதி) பாங்காக்கில் படத்தல் பிஸினஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.//

  அதென்ன படத்தல் பிஸினஸ்? ஒருவேலை படத்தை கடத்துதலோ!

  அந்த ட்விஸ்ட சொல்லாம இருந்திருக்கலாம் ....

  ReplyDelete
 5. விமர்சனம் அருமை செந்தில்! - இங்கு படம் தியேட்டருக்கு வரவில்லை! டிவிடியில் தான் பார்க்கோணும்!!

  ReplyDelete
 6. ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு படம் பார்த்துட்டு கொஞ்சம் சந்தோசமா இருக்கீங்க போல.. அப்போ இந்த முறை பணம் நஷ்டம் இல்ல..

  ReplyDelete
 7. திருவாளர் செந்தில்!

  எல்லா விமர்சனத்தையும் உடனுக்குடன் கொடுக்கும் நீங்கள் அதெப்படி இந்தத் தளத்தில் உங்க விஸ்வரூபம் விமர்சனம் எழுதாமல் தப்பிச்சுட்டீங்க! :-))))

  கமல் ரசிக நண்பர்களை திருப்திப் படுத்தவா? :)))

  -------------
  உங்க ஆதி பகவன் விமர்சனம் பாஸிட்டிவாத்தான் தெரியுது. அமீர் போன்ற இயக்குனர்கள் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமா வாழும்! பார்க்கலாம்! :)

  ReplyDelete
 8. விரிவான அலசல்... நன்றி நண்பா...

  ReplyDelete
 9. தியேட்டர் போய் பார்க்கும் அளவுக்கு இந்த படம் வோர்த் இல்லை.
  DVD கிடைச்சா பாருங்க
  நான் தியேட்டர் போய் நொந்து போய் இருக்கேன்.

  நம்ம வருண் மாமா எதோ பொலம்பியிருக்காரு
  "அமீர் போன்ற இயக்குனர்கள் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமா வாழும்! பார்க்கலாம்! :)"

  அமீர் என்ன தமிழ் சினிமாவை தனது தலையில் தூக்கி வைச்சிருக்காரா?
  அருணுக்கு அமீர் என்ன குப்பி கொடுத்தாரா? இந்த மாதிரி ஜால்ரா அடிக்குது வருண் மொக்கை

  ReplyDelete
 10. இந்தவார தமிழ்மண முதல்வருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...