சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, February 6, 2013

கையேந்தி பவன்கள்

சென்னைக்கு வந்த புதிதில் என் பட்ஜெட்டுக்கு பசியாற்றியது கையேந்திபவன்கள் தான். 1997ல் அப்ரென்டிஸ் படித்த காலக்கட்டத்தில் எனக்கு மாத ஊக்கத்தொகை ரூ.580/- தான். ஹாஸ்டல் இலவசம். மேற்கொண்டு வீட்டிலிருந்து அப்பா பணம் கொடுத்து அனுப்புவார்.


ஆனால் அந்த சமயம் எனக்கு சென்னையில் சினிமா பார்ப்பது பெரிய வேலையாக இருந்ததால் 10 நாட்களிலேயே கையிருப்புகள் கரைந்து விடும். பிறகு கையேந்தி பவன்களிலும் ஐசிஎப் திருமண மண்டபங்களிலும் தான் மாதம் ஓடும்.

அதிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுவை நம்மை கட்டிப் போடும், அவற்றில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இனி பார்க்கலாம். இன்று கூட சாப்பாட்டு நேரம் வெளியில் இருந்தால் முக்கால்வாசி கையேந்தி பவன்களில் தான் சாப்பிடுவேன். சில நேரம் மட்டுமே ஹோட்டல்கள்.


அப்ரெண்டிஸ் காலகட்டத்தில் காலையில் 7மணிக்குள் இன்டைம் கார்டு அடிக்க வேண்டும். அதற்காக காலையில் சாப்பிடாமல் அரக்க பரக்க கிளம்பி வந்து கார்டு அடித்து விட்டு ப்ரேயர் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் கையேந்தி பவனுக்கு தோசை சாப்பிட வருவோம். தோசை 3 ரூபாய் தான். திருப்தியாக சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வோம்.

மாசக்கடைசியில் தான் பில் செட்டில் செய்வோம். இன்று அந்த இடத்தில் இருந்த கடைகளெல்லாம் அகற்றப் பட்டு விட்டன. இன்று அந்த வழியில் செல்லும் போது நினைவுகள் எல்லாம் எனக்கு பின்னோக்கி செல்லும்.


வேலைக்கு செல்வதற்காக நான் 2001ல் சென்னைக்கு மீண்டும் வந்து இறங்கிய போது எனக்கு சம்பளம் 1800 ரூபாய். தங்குமிடம் கம்பெனி கொடுத்து விட்டது. ஆனால் அந்த சமயத்தில் தண்ணியடிக்கும் பழக்கம் வேறு தொற்றிக் கொண்டது. இந்த சம்பளத்தில் இவ்வளவையும் சமாளிக்க வேண்டும்.

பிறகென்ன மூன்று வேளையும் கையேந்திபவன் தான். அப்பொழுது காசி தியேட்டருக்கு எதிர் ரோட்டில் உள்ள கையேந்திபவன் தான் இரவு உணவுக்கு நான் செல்லும் இடம். இட்லியும் கருவாட்டு குழம்பும் சரியான காம்பினேஷன். பத்து இட்லிக்கு மேல் உள்ளே இறங்கும், ஆனால் பத்து ரூபாய் தான் செலவாகியிருக்கும்.


அதே போல் மதிய உணவுக்கு அசோக் பில்லர் பக்கத்தில் இருந்த கையேந்திபவன்கள் தான் இலக்கு. அன்லிமிட்டெட் சாப்பாடு 15 ரூபாய் தான். மே மாச மொட்டை வெயிலில் நின்று சுடச்சுட சாப்பாட்டில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுவது இருக்கே, உலகில் இதற்கு ஈடுஇணையாக எந்த டிவைன் சாப்பாடும் இருக்க முடியாது.

பிறகு சில வருடங்களில் மாநகராட்சி அந்த கையேந்திபவன்களை காலி செய்து விட்டது. மறுபடியும் சாப்பிட இடம் கிடைக்காமல் சில நாட்கள் அலைந்து கேகேநகர் செல்லும் சாலையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டுக்கு எதிரில் இருந்த கையேந்திபவன்களுக்கு வாடிக்கையாளரானேன்.

அங்கு தோசையும் ஆப்பாயிலும் தான் ஸ்பெசல். சுடச்சுட தோசை மீது கறிக்குழம்பு ஊற்றி அதன் மேல் ஆப்பாயிலை வைத்து இரண்டையும் சமமாக பிய்த்து சாப்பிட்டால் ஆஹா. இதற்கு ஈடுஇணை எதுவும் இருக்க முடியாது.

2004ல் டில்லிக்கு சென்ற போதும் காலை சாப்பாடு கையேந்திபவனில் கச்சோரி தான். தொன்னையில் இரண்டு கச்சோரி வைத்து நடுவில் ஒட்டையைப் போட்டு அதனுள் இனிப்பு கார சட்னிகளை விட்டு ஊற வைத்து அடித்தால் தொன்னையில் தெரியும் பாருங்க அதுதான் கடவுள்.

அதுபோல 2005ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றலானேன். அங்கும் ஒரு கடையை காலை சாப்பாட்டிற்கு பிடித்தேன். அங்கு ஸ்பெசல் புட்டும் இதர சைட்டிஷ்களும் தான். பெரிய தட்டில் புட்டு வைத்து அதன் மேல் கடலைக்கறி ஊற்றி அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் பொறித்த டிபிக்கல் கேரளா அப்பளம் வைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் போட்ட ஆம்லெட் வைத்து மறுபுறம் கட்டன் சாயாவை வைத்து அடித்தால் சாயந்திரம் வரை பசிக்காது.

திருமணம் ஆகும் வரை எனக்கு வழக்கமான சாப்பாடுகள் கையேந்தி பவனில் மட்டுமே அமைந்தது. எவ்வளவு சம்பளம் உயர்ந்த போதிலும் நான் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

இப்பொழுது கூட வீட்டம்மா ஊருக்கு சென்றால் சந்தேகமின்றி என் சாய்ஸ் கையேந்திபவன் தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இதற்கு முன் நான் பதிவிட்ட வாஞ்சூர் பதிவு பலரையும் சரியான முறையில் சென்று ரீச்சானதால் அதனை தொடர்பதிவாக வெளியிட எண்ணி அதன் தொடர்ச்சியாக மற்றொரு ஊரைப் பற்றி எழுத சக பதிவர்கள் அஞ்சாசிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன் ஆகியோரை அழைக்கிறேன்.




23 comments:

  1. இப்படி ரசிருசியா சாப்பிட காசுமட்டுமல்ல மனசும் வேண்டும்.கையேந்திபவன்கள் ஹோட்டல்கள் விட சுகதாரமாய் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி அண்ணே.

      Delete
  2. ம் ம் ம் எனக்கும் கையேந்தி பவன் சாப்பாடு சாப்பிட பிடிக்கும்.எங்க ஊருல சாப்பிட மாட்டேன். சென்னைக்கு வந்தா சாப்பிடுவேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அதன் சுவையே தனிதான்.

      Delete
  3. Nan vealai seitha star hotel la maximum sapdamatten . Hotel pakkathula irrukka thallu vandi la kari soru sapduven suthamavum sugatharamavum suvayagavum irrukum pazaya ninaivugalai gabagapaduthi paduthiyathuku nandri.

    ReplyDelete
    Replies
    1. ஏன் ராசா, உன்னை இன்னிக்கி காணும். நைட்டு ஓவரோ.

      Delete
  4. கையேந்தி பவனில் சாப்பிட ரொம்ப ஆசை செந்தில்! ஆனால் இங்கு கிடையாதே?

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை சென்னை வாங்க மணி, நீங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு என் அனுபவங்களையெல்லாம் உங்களுக்கும் தந்து அனுப்புகிறேன். மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும் அது.

      Delete
  5. அந்த சந்தோஷ நாட்களே (7 வருடம்) தனி...

    ...ம்...

    ReplyDelete
  6. நல்ல பதிவு!
    கையேந்திபவன்களில் விலை ஓ.கே! ஆனால் தரம்...!

    ReplyDelete
  7. வேலை தேடி அலைந்த காலங்களில் சென்னை பூந்தமல்லியில் இரவு சாப்பாடு கையேந்திபவனில்தான். கையில கொஞ்சம் காசு ஏறுன பிறகு கையேந்திபவனில் சாப்பிடும் பழக்கமே இல்லை. வருத்தங்கள்

    முன்னர் இருந்த எண்ணிக்கையில் தற்போது கையேந்திபாவங்கள் இல்லை.
    கடற்கரையோர கடைகளையும் மூடச் சொல்லி ஆர்டர் போட்டாச்சு.
    எதுக்குன்னு கேட்டால் 'நாகரீக வளர்ச்சி'ன்னு சொல்லுறாங்க. :(

    ReplyDelete
    Replies
    1. நன்றி குருநாதன்.

      Delete
  8. சுவையான பகிர்வு! ஓரிரு முறை கையேந்தி பவன்களில் சாப்பிட்டது உண்டு! உண்மையில் ஓட்டலகளை விட சுவையாகவும் விலை குறைவாகவும் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      Delete
  9. எழுதியதைப் படிக்கும்போது சாப்பிடவேண்டும்போல இருக்கின்றது.

    நம்ம நாட்டில் இவை இல்லை என்றே நினைக்கின்றேன்.

    ReplyDelete
  10. இன்னைக்கு வரை கையேந்திபவன்னா ஒரு கிக்குதான். அதுவும் மூணாரில் ஒரு 100 மீட்டர் நீள கின்னஸ் சாதை தட்டுகடை(கையேந்திபவன்) இருந்தது(இப்போ சின்னதாயிடுச்சி) அங்க அப்பப்போ சாப்பிடுவேன்.

    மும்பைல எல்லாரும் ப்ரெஸ்டீஜ் பாக்காம ரோட்டுகடைல சாப்பிடறாங்க. ஆனா நம்மூர் பீட்டருங்க என்னமோ ரோட்டுக்கடைல சாப்பிட்டா கேவலம்னு நெனைக்கிறாங்க. கழுதைக்குத்தெரியுமா கருவாட்டு ருசி?

    சூப்பர் பதிவு. அடுத்து மறுபடியும் வாஞ்சூரின் லீலைகளைபத்தி எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருண், கண்டிப்பாக எழுதுகிறேன்.

      Delete
  11. பல முறை இதை உணர்ந்தது உண்டு.இபோது ஒவ்வொரு ஐட்டமா சொல்லி நாக்குல எச்சி ஊறவச்சிடீங்கண்னே......

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...