சத்தியமா இது என் கட்டுரை கிடையாது. பேஸ்புக்கில் படித்தேன். என் நண்பர்கள் இதைப் படித்து தங்கள் சொந்தங்களை நாமக்கல் பள்ளிக்கு அனுப்பவதை நிறுத்தினால் நான் மகிழ்வேன். அந்த காரணத்திற்காக மட்டுமே பகிர்கிறேன்.
மிக்க நன்றி : டைம் லைன் போட்டோஸ் எழுதியவர் பெயர் இல்லை. யாரா இருந்தாலும் நன்றி நண்பா.
பள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி
செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை
அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும்
அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த
மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள்,
புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய
வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்
அந்த விளம்பரங்களின் சாராம்சம், “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு.
நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவர்தம் வாழ்க்கை லட்சியங்களை எட்டுவதற்கான உத்திரவாதமான ஏணி. பல பெற்றோர்கள் இந்த விளம்பரங்களால் கவரப்பட்டு, இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இது போன்ற பள்ளிகள் மாணவர்களைத் தயாரிக்கும் விதம் தனிச்சிறப்பானது.
இம்மாணவர்கள் உள்ளூரிலேயே இருந்தாலும் பள்ளி விடுதிகளில்தான் தங்க வேண்டும். இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலையில் துவங்கி இரவு வரையில் நீளும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மாதிரித் தேர்வுகள் இருக்கும். வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்களோடு பேசத் தடை; ஆசிரியர்களோடு மதிப்பெண் பெறுவதைத் தாண்டி பாட சம்பந்தமான வேறு சந்தேகங்களைக் கூட கேட்கத் தடை; விளையாடத் தடை, சிரிக்கத் தடை, அழத் தடை, டி.வி பார்க்கத் தடை; மாணவர்களைப் பெற்றோர்கள் சுதந்திரமாக வந்து சந்திக்கத் தடை, மதிப்பெண்களைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவும் கூட தடை. சுருக்கமாகச் சொன்னால் நாமக்கல் பள்ளிகள் என்பது மதிப்பெண் இயந்திரங்களைத் தயாரிக்கும் கொத்தடிமைக் கூடங்கள்.
இங்கே நடத்தப்படும் மாதிரித் தேர்வின் வினாத்தாள்களைத் தயாரிப்பதும், விடைத்தாள்களைத் திருத்துவதும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். பெரும்பாலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளத்தையும் வாங்கி கொண்டு இது போன்ற பள்ளிகளிலும் பணிபுரிகிறார்கள். ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மறைமுகமான பங்குதாரர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகளும் நடத்தப்படுகின்றது.
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.
இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.
ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கு இது போன்ற சின்னச் சின்ன தியாகங்களைப் பிள்ளைகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். மேலும், இப்போது சில லட்சங்களைச் செலவு செய்து விட்டால், பின்னால் மருத்துவமோ பொறியியலோ சேர்க்கும் போது ‘மெரிட்டில்’ சேர்த்து விட முடியும்; எப்படியாவது 90 சதவீதத்திற்கு மேல் தம் பிள்ளை மதிப்பெண்களை வாங்கிவிட்டால் மருத்துவம், பொறியியல் தவிர்த்த வேறு படிப்புகளில் சேர்க்கும் போது செலவு குறைவாக இருக்கும் என்கிறார்கள்.
கடும் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர், அதன் பின் எதற்கும் பயன்படாத தக்கைகளாக சமூகத்தினுள் துப்பப்படுகிறார்கள். சிலர் தற்கொலை முடிவுகளைக் கூட நாடுகிறார்கள். இந்தப் பள்ளிகளின் கொடுமை தாளாத சில மாணவர்கள் லேசாகச் சுணங்கினாலும், அவனது பெற்றோரை வரவழைத்து ‘இது தேறாத கேசு’ என்கிற பாணியில் பள்ளிகள் அச்சுறுத்துகின்றன. லட்சங்களை அள்ளிக் கொடுத்து, இந்தக் கல்வி வியாபாரிகளின் கொழுப்பு கூட காரணமாய் இருக்கும் பெற்றோர்களோ, இது போன்ற பெற்றோர் – ஆசிரியர்கள் சந்திப்புகளில் பம்மிப் பதுங்கி, பிச்சைக்காரர்கள் போல் சுயமரியாதையற்று நிற்கிறார்கள் என்று இப்பள்ளிகளின் நடைமுறைகளை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் கூறினார்.
நாமக்கல் பள்ளிகள் என்று இங்கே நாம் குறிப்பிட்டாலும், இதே போல் மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவர்களைத் தயாரிக்கும் மதிப்பெண் தொழிற்சாலைகள் தற்போது தமிழகமெங்கும் பரவி வருகின்றன. விருத்தாச்சலத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் தட்சிணாமூர்த்தியின் மரணமே அதற்கு சமீபத்திய உதாரணம்.
எனினும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.
இலக்கைத் துரத்தும் இந்த ஓட்டம் பள்ளியோடு மட்டும் நின்று விடுவதில்லை. கல்லூரியில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டு மெருகூட்டப்படுகிறது. கேம்பஸ் தேர்வில் வெல்வது அங்கே குறிக்கோள். அதுவும் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனியின் தேர்வு என்றால் இன்னும் சிறப்புக் கவனம். கல்லூரியில் கேம்பஸ் தேர்வுக்கு மாணவரை அனுப்பும் அதிகாரம் கொண்ட பேராசிரியர்களிடம் (Placement officers) ‘வம்பு’ வைத்துக்கொள்ளக் கூடாது; கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி உரிமையைக் கேட்பதைப் பற்றியோ, அதற்காகப் போராடுவதைப் பற்றியோ கற்பனையாகக் கூட சிந்திக்க முடியாது – கூடாது.
இதையும் தாண்டி, இண்டர்னல் மதிப்பெண்கள், ரிக்கார்டு மதிப்பெண்கள், ப்ராஜக்ட் மதிப்பெண்கள் என்று ஒரு மாணவனை அச்சுறுத்தி, அடக்கி வைக்க வேறு பல்வேறு வழிமுறைகளும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது. நாமக்கல் பள்ளிகளும் சரி, முன்னாள் சாராய ரவுடிகள் நடத்தும் கல்லூரிகளும் சரி, எல்லாமும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. மாணவர்களிடம் வசூல் அதிகரிப்பதற்கேற்பவே அந்த வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்படுகின்றன.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவனை இந்த மனப்பான்மைக்கு உளவியல் ரீதியில் தயாரிப்பதில் கல்வி நிறுவனங்கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. இதில் நாமக்கல் பள்ளிகள் ஒரு எடுப்பான உதாரணம் தான். மற்ற இடங்களில் வழிமுறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நோக்கம் இது தான். பள்ளிகள் பயிற்றுவிக்கும் முறைகளால் உளவியல் ரீதியிலான தாக்குதல் ஒருபுறமென்றால் இதன் பின்னே செய்யப்படும் செலவுகளின் பொருளாதாரத் தாக்குதல் இன்னொரு புறம். பள்ளியில் சேர சில லட்சங்கள் மொய் வைக்கப்படுகிறது என்றால், மருத்துவம் போன்ற உயர் கல்விகளுக்காக பல லட்சங்களில் ஆரம்பித்து சில கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது.
தற்போது மதிப்பெண் தொழிற்சாலைகள் வேகமாகப் பெருகி வருவதாலும், பல பெற்றோர்கள் தனிச்சிறப்பான கவனமெடுத்தும் செலவு செய்தும் மாணவர்களைத் தயாரிப்பதாலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச (Cut&off) மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருக்கின்றது. 96 சதவீதம் எடுக்கும் மாணவன் கூட தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota) தான் சேர முடிகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள் தான் ஒரே வாய்ப்பு.
படித்து முடித்து விட்டு, சமூகத்தினுள் காலடியெடுத்து வைக்கும் போதே தலைக்கு மேல் லட்சக்கணக்கில் கடனை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தத்தோடு தான் நுழைகிறார்கள். ஒரு பக்கம் போட்ட காசை சீக்கிரத்தில் எடுத்து விட வேண்டும் என்கிற நெருக்கடி – இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளிலிருந்து கற்றுக்கொண்டு வந்துள்ள அடிமைப் புத்தி. இவையிரண்டும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் வளர்த்துக் கொண்டு,முடிவில் காரியவாதமாகவும், தனிநபர்வாதமாகவும் பரிணமிக்கிறது.
மிகச் சரியாக இது போன்ற ‘தயாரிப்புகளைத்’ தான் பன்னாட்டுக் கம்பெனிகள் விரும்புகின்றன. உலகமயமாக்கலின் விளைவாய் சந்தையும், உற்பத்தியும் கூட உலகமயமாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலோ சென்னையிலோ உள்ள பன்னாட்டுக் கம்பெனியின் கிளையில் இருந்து ஒரு பொருளின் அல்லது ஐ.டி சேவையின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர், அதன் முழுமையான தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமற்றதாகின்றது.
ஒரு பொருளின் உற்பத்தின் பல்வேறு கட்டங்கள் சின்னச் சின்ன கட்டங்களாகப் பிரித்து (smaller processes) வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்சமான தொழில்நுட்ப இரகசியம் அமெரிக்காவிலோ, வேறு ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும் தலைமையகத்தில் உள்ளவர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்.
இந்தச் சூழலில் இங்கே பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், எந்தக் கேள்வி முறையுமின்றி சொன்னதைச் செய்தாலே போதுமானது. சொந்தமான மூளையோ, சிந்திக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (Target)நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை வாராந்திரமாகவோ, தினசரியோ பரிசீலித்து ஊழியர்களை விரட்ட சில கங்காணிகள் இருப்பார்கள். இந்த உலகத்தின் விதிகள் மிகவும் எளிமையானது. சொன்னதைச் செய்ய வேண்டும் – அதில் இலக்கை எட்ட வேண்டும். குறுக்கே கேள்விகள் கேட்பதோ, உரிமைகள் பற்றிப் பேசுவதோ, அதற்காகப் போராடுவதோ கூடவே கூடாது. சுருங்கச் சொன்னால் பஞ்சு மூளைகள் கொண்ட தக்கை மனிதர்களே உலகமயமான உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் போதுமானவர்கள்.
தங்கள் நிலத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, போதாததற்கு வங்கிகளிடம் கையேந்தி கல்விக் கடன் பெற்று, லட்சக்கணக்கில் செலவு செய்து, ’தங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதிலேயே ஆகச் ‘சிறந்ததைக்’ கொடுக்க வேண்டும்; தனது பிள்ளைகளுக்கு நல்ல அறிவாற்றல் கொண்ட மூளை வேண்டும்’ என்றெல்லாம் கனவு காணும் பெற்றோர்கள், அந்த சிறந்த உலகத்தில் அறிவாற்றலுக்கும், மூளைக்கும் வேலையே இல்லையென்பதை அறிந்திருப்பதில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளால் பொறுக்கியெடுக்கப்படும் தேர்ந்த மதிப்பெண் இயந்திரங்களின் வேலைக்கான உத்திரவாதமென்பது அவர்களது சொந்த உழைப்பினால் விளைந்த பலன் என்று அவர்களே நம்பிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
நாமக்கல் பள்ளிகளைப் போன்றே நடத்தப்படும் வேறு பல மதிப்பெண் தொழிற்சாலையிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு சமூகத்தினுள் அறிமுகமாகும் ‘தயாரிப்புகள்’ பன்னாட்டு மூலதனத்துக்கு மட்டுமல்ல; அவர்களின் சேவகர்களான இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் மிக உவப்பான குடி மக்கள். இந்த அடிமை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இன்று பழைய சாராய முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுமே பெரும்பாலும் நடத்தி வருகிறார்கள். நல்ல லாபம் கொழிக்கும் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தயாராக பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் வரிசைகட்டி நிற்கின்றன.
இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.

விலாவாரியாக அலசியுள்ளீர்கள் பிராய்லர் கோழிகளை... சாரி மாணவர்களைப் பற்றி... இவ்வாறு தயாரிக்கப்படும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்...
ReplyDeleteநன்றி நண்பா. விலாவரியாக அலசியுள்ளதை பகிர்ந்துள்ளேன், அவ்வளவுதான்.
Deleteபோட்டி மிகுந்த உலகத்தில் "பிராய்லர்" கோழிகளால் ஓடமுடியாது,,! :-(
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் காட்டான்
Deleteசரியா சொன்னீங்க தல.. இந்த லிங்க் போய் பாருங்க.. நான் போன ஏப்ரல்ல எழுதுன மேட்டர்.. http://quarrybirds.blogspot.in/2012/04/blog-post.html
ReplyDeleteநன்றி கார்த்திகேயன்
Deleteதொழில் சக்கைப்போடு போடுகிறது...! கொடுமை...!
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஉண்மைதான்..நாமக்கல் திருச்செங்கோடு ஊர்களில் கோழிப்பண்ணைக்கு மாற்றாக பள்ளிகள் முளைத்து இருக்கின்றன.என் வகுப்புத்தோழன் கூட இரண்டு பள்ளிகளை நிர்வகித்து வருகிறான்.கடந்த வருடம் முதலிடம் பெற்ற மாணவர்கள் அந்த பள்ளியில் இருந்து வந்தவர்கள்.பணம், பணம்..பணம்...இதுதான் தாரகமந்திரம்.ஒவ்வொரு ஊரில் இருக்கும் அரசு தனியார் பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் பள்ளிகளும் இங்கு இருக்கின்றன.அதிகமான டீச்சர் ட்ரெயினிங் பள்ளிகளும் இங்கு தான் இருக்கின்றன.நாமக்கல் பள்ளி முதலாளிகள்
ReplyDeleteஒரு வித மாயையை உருவாக்கி வைத்து இருக்கின்றனர்.
நன்றி ஜீவா.
Deleteஇது வினவு தளத்தில் வந்த கட்டுரை. பலபேராலும் படிக்கப்பட்டு பகிரப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.முடிந்தால் கட்டுரையின் மூலதளமான வினவின் பெயரை சேர்த்திடுங்கள்.
ReplyDeleteராஜா
எனக்கு இதன் ஆரம்பம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் பார்த்ததால் பகிர்ந்தேன். நன்றி ராஜா
Deleteநன்றி வினவு
Dear senthil sir i am from Namakkal, your statement 100% true. I also worked that type of institution . What can we do sir ? Our people allways attracts comercial adds. this time is correct time for taking necessary Step. thank u for sharing .
ReplyDeleteநன்றி குரு
Deleteஇங்கு பின்னூட்டம் இட்ட சகோதரர்கள் தங்கள் மனசாட்சியை
ReplyDeleteதொட்டு பார்த்து சொல்லட்டும்.இந்த கழிசடை ப்ராய்லர்
பள்ளிகளுக்கு ஆரம்பபுள்ளி கிராமங்களை கூட விட்டு
வைக்காத நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள்.
இவற்றில் தங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை,அரசு பள்ளிகளில்
படிக்கிறார்கள் என்று கூற முடியுமா?
ரொம்ப சிரமம்.இப்படி சொல்வதன் அர்த்தம் இதை ஆதரிப்பதல்ல.
சமூக சூழ்நிலை அப்படி.அரசு பள்ளியில் படிக்க வைக்க
முயன்றால் முதல் எதிர்ப்பு உங்கள் மனைவியிடமிருந்தே
வரும்.காரணம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.
'''ஒன்றுக்கும் வழியில்லாதவன் வீட்டு பிள்ளைகளே
அரசு பள்ளியில் படிக்கவில்லை.என் பிள்ளை படிப்பதா?
இதற்க்கு படிக்காமலே இருந்து விட்டு போகட்டும்.'''
இந்த பிரம்மாஸ்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்று
யாராவது விளக்கினால் அவர்கள் வீட்டுக்கு ஜெனரேட்டர்
மூலம் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படும்.
சாக்கடையிலும் கேடு கெட்ட இந்த கல்வி வள்ளல்
மாமா பொறுக்கிகளுக்கு கள்ள சாராயம் காய்சுபவனே
மேல்.அவனுக்கு கொஞ்சம் மன உறுத்தல் இருக்கும்.
நன்றி குமார்
Deletemy relative daughter studied there from 9th to +2.. joined one paramedical course in famous college in chennai.But she discontinued her studies..now she is at home..next year plan to join B.A in local arts college.
ReplyDeletemy friend's daughter also studied there from 9th to +2.but failed in +2 maths.
ennatha solrathu...
நன்றி அமுதா கிருஷ்ணா
Deleteமதிப்பெண்களை வைத்து மாணாக்கரை எடைபோடும் முறை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும், அவ்வழியைக்குறைத்து விடலாம். ஒரு ஓவரால் எஸ்டிமேட் வைத்து, அதில் ஒரு பங்கு மதிப்பெண்ணுக்கும், மற்ற பங்குகள், விளையாட்டு, பொது அறிவு, பழகும் தன்மை, போன்ற ஆளுமைகள் வைத்தும் தரப்படலாம். சிபிஎஸ்ஸி அவ்வழிகளைக்கையாள முயற்சித்து வருகிறது.
ReplyDeleteமாநில அளவில் ராங்க் என்பது மதிப்பெண்ணை வைத்துக்கொடுக்காமல் எல்லா வழிகளிலும் அவனோ அவளோ முதலில் வரவேண்டும். அதன்படி ராங்க். இப்படிப்பார்த்தால் நாமக்கல் பள்ளிமாணவர்கள் ராங்க் பட்டியலிலே இருக்கமாட்டார்கள். பள்ளிகளுக்கும்.
சரியா எழுதினேனான்னு தெரியல. இங்கிலீசிலும் போடுகிறேன்.
Ranking should be based on the following:
Delete40% weightage to Marks; +
10 for sports (for PH students it can be transferred to other aspects); +
10 for participation in extracurricular activities like debates, leadership qualities, in House activities; +10 for participation in NSS or NCC; +
10 for fine arts like knitting, drawing; +
5 for survival cooking (only for boys); He should actually cook and at the end of the year, an exam should be there where he should cook a simple recipe in the shortest time and deliciously. (For girls, singing or dancing for 5 marks) +5 for attendance.
If a student attended on all days of school in a year, he gets 5%).+
5 for participating in a useful activity outside school+
5 the teacher will give to students. To earn full marks, the student should have behaved well For e.g. the teacher may award the marks for boys if she is satisfied that he is sufficiently gender sensitised and developed some sense of justice and respect for fellow humans.
Option to transfer the marks to some prescribed areas as a student may not be capable of performing in a particular area. For e.g introverted child won’t be forthcoming to take leadership. But it can be a good follower. Society needs both the leader and the follower, does it not?
The above list is not exhaustive. It is subject to change according to the area of the school whether it is rural or urban. In urban, whether the school is in Tiruvottiyur or Thathaneri slums or in Ashok Nagar or Anna Nagar we need to make suitable changes necessary to bring equality in the areas of marks for children from underprivileged classes.
The basic motive is to dilute the importance given to marks; and the rank is to be earned on credit basis in each area.
What will the Namkakkas schools do for the 60%?
School is a society. We spend a major part of a day during our early life in school where only bookish knowledge should not be taught. An overall personality development is not possible with such knowledge.
If only bookish knowledge will do, then we will create cruel beings who will throw acids on girls. Marks make us moron. Beware!
Survival cooking has been introduced by Mrs Parthasarathy, an award winning teacher when she was Principal of the famous Delhi School Sardar Patel Vidyala. Her view was that boys get to go out of home to a distant places for jobs in later life and survive on their own when there are no facility for eating out. She has introduced it to XII class boy students. I recommend it for both XI and XII.
Delete5 % marks for useful activity outside school means that many boys and girls may consider themselves worthy in their out of school activities. Such an activity is introduced to engineering students in some IITs. They should go out and teach children of the slums and at the end of the semester, bonus mark is awarded to them; or a certificate is awarded which is given to the recruiters in campus placement.
In big and famous engg institutions, the campus placement adjust over all personality traits, not merely specialised knowledge in the subject.
Introduce it for our students. Let them attach themselves with an NGO in their area during summer vacations and come to school after the vacation and demonstrate what they learnt. A power point demonstration show of how AIDS is being tackled by PACHE in Madurai.
What will Namakkal schools do now?
We must make these schools idiots if we dare to experiment with our educational system so as to create great, strong, useful and compassionate members of society in future.
நன்றி குலசேகரன்
Deleteபடிக்கவே பயமாக இருந்தது வயிறு கலங்கு கிறது ஐ யோ என்ன இது இளைதலைமுறை களை பிடிவாதம் ,எதிர்மறை வாதம் ,தீவிரவாதம் போன்ற எல்லாவற்றிலும் தள்ளிவிடும் போல் இருக்கிறதே எப்பொழுது விடிவு காலம் இதற்கெல்லாம்
ReplyDeleteதங்களின் ஆதங்கம் நியாயமானதே, நன்றி மலர்பாலன்
Delete\\இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.\\ சில மாதங்களுக்கு முன்னர் நீயா நானாவில் இதை தலைப்பாக வைத்து விவாதித்தனர். சம்பந்தப் பட்ட பள்ளி ஆசிரியர்களும் பாதிக்கப் பட்ட மாணவர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் விதத்தைப் பற்றி கூறும் பொது, "கோழிப்பண்ணை முறை" என்று டைட்டில் போட்டார்கள்!!
ReplyDelete\\ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது.\\ அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அடித்தால் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுப்பவர்கள், இங்கே பணத்தை கொட்டிக் கொடுத்து உதிக்கச் சொல்லி சித்திரவதியும் செய்வதை அனுமதிக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?
மனப்பாட முறையை ஒழித்தாலே போதும், இந்தப் பிரச்சினைகளில் பெரும்பகுதி ஒழிந்து போகும்.
நன்றி ஜெயதேவ்தாஸ்.
Deleteநீங்கள் கூறியதுபோல உளவியல் அழுத்தங்களால் பிள்ளைகள் பாதிக்கப் பட்டு விடுவார்கள்.
ReplyDeleteEvery thing is true . I was a student of such school. They used to beat us a lot.
ReplyDeleteநன்றி நண்பா.
DeleteWell said, in fact am from a small village around 80 KMs far to Salem, we are going through a similar trauma since 2 years.
ReplyDeleteIn my family itself one girl is studying 10th std, the harassment she is undergoing is ludicrous. They have started her 10th syllabus on 9th quarterly itself, every week special class, N number of tests like this they had starched to till vacation. The vacation also the poor girl got around 15 days only for the whole year. On top of this, once this academic year started the school starts on 7.00 am and ends with 8 pm with 10 minutes lunch break (1.20pm to 1.30 pm).
Forget about the break, they are literally beating the children’s for not scoring, and abusing front of everyone. This 10th std children’s all completely restless on every time and literally they have lost their personal life.
Am wondering are we living in Stone Age period? The management are treating these souls like an animal. There is no other activities, no time for entertainment, sports or extra curricular. After all this harassment, they are having home work which will take minimum 2 hrs. So their routine is getting up 5 am, study till 6.30, rushing to school, class starts on 7 till evening 8 pm. Even as a scholar how long they can stretch them self.
We every one knew the mark is very important for the further better studies and the carrier, but gaining a mark they are loosing their talent, skills and also leads them psychological stress.
We never know when the trauma will burst.
This concern not only ours, around 90% of the parents are having the same opinion.
On top of this more than 6 months i've taken this subject to Education department, local police station, MLA's office, Dt. Collector's cell and finally CM's Cell. You will be surprise no response yet from no one.
I wrote to all leading news channel's, magazines and news papers. But the result is big zero.
We can't blame no one other than us.
God bless the next generation kids.
கனவன் மனைவி இருவரும் அரசு பள்ளியில் +2 விற்கு ஆசிரியராக இருக்கிறார்கள் கனவர் கெமிஸ்டரி மனைவி ஆங்கில ஆசிரியர் கெமிஸ்டரி (M phil) இவர்களே தன் பிள்ளைகளை ராசிபுரம் பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தார்கள் அப்படியும் பலன் அளிக்கவில்லை மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைக்காமல் ஓராண்டு இம்ப்ரூவ்மெண்ட் எழுதி வீனடித்ததுதான் மிச்சம் பிறகு தனியார் மருத்துவக்கல்லூரிக்கு நகை சொத்து அனைத்தும் அடமானம் வைத்தார்கள். .+2 ஆசிரியர்களான இவர்களுக்கே இவர்கள்மீது நம்பிக்கை இல்லை என்ன செய்வது.
ReplyDeleteஎங்கள் ஊரிலும் இது போல ஒரு சம்பவம் நடந்தது ..... என்ன காரணமோ தெரியவில்லை அந்த பையன் விடுதியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விட்டான் ... உடனே எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமே திரண்டு சென்றார்கள் கடைசியில் அவர்கள் கொடுத்த 10 லட்சத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து விட்டார்கள் . அவருக்கு இரண்டு மகன்கள் ... ஒன்னு போன பராவயில்லை ... அதான் பணம் இருக்கே ன்னு நினைசிட்டாங்க போலிருக்கு .....
ReplyDelete