சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, February 18, 2013

குறைந்து வரும் காந்தியிசம்

வினோதினியின் மரணம் ஒருதலை காதலின் குரூரம். இதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் ஆலோசித்தோமென்றால் குறைந்து போன மனித நேயம் என்ற காரணம் புலப்படும். இன்று மனிதர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் குறைந்து போய் இருக்கிறது.


மற்றவர்களுக்காக ஒரு விஷயத்தை விட்டுக் கொடுப்பது மிகவும் குறைந்து இன்னும் சொல்லப் போனால் சுத்தமாக நின்று விட்டு இருக்கிறது. இதற்கு காரணங்களை ஆலோசிக்க பல வருடங்கள் முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் உண்மையை சொல்ல சிரமப்பட்டதே இல்லை. ஆனால் இன்று பொய் அனைவருக்கும் மிகச்சரளமாக வருகிறது. உண்மையை சொல்லத்தான் சிரமப்படுகிறார்கள்.

வளர்ப்பு முறை மாறியிருப்பதைத் தான் இதற்கு குற்றமாக சொல்ல வேண்டும். குழந்தைகள் அதிகமிருந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் சகோதர பாசத்தில் விட்டுக் கொடுத்து வளர்ந்து வந்தனர். பெரியவர்கள் இருந்த வீட்டில் பொய் சொல்வது கண்டிக்கப்பட்டது. குற்றம் என மனதில் விதைக்கப்பட்டது.


இன்று விசுவாசங்கள் என்பதே காந்திக்கு அடுத்தபடியாக போட்டோவில் தொங்குகிறது. நட்புக்குள் துரோகங்கள் சகஜமாகி விட்டது. இந்த தலைமுறை வாலிபர்களுக்கு இதனை விளக்கிக்கூறி இவற்றிலிருந்து மீட்பது எப்போது.

எனக்கு மிக நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த சம்பவங்களை நான் உதாரணமாக கூறுகிறேன், ஒப்பிட்டுப் பாருங்கள். எனக்கு சித்தப்பா முறை வரும் சொந்தக்காரர் அவர். அவர்கள் பரம்பரையின் நிர்வாகத்தில் ஒரு கோயில் இருக்கிறது. அவர்களின் தலைமுறையினர் தான் காலம் காலமாக கோயிலை நிர்வகித்து வந்தனர்.

சித்தப்பாவின் அப்பா மிகப்பெரிய ஜமீன்தாரராக இருந்து இறந்து போனார். அவரது மனைவி அந்த காலத்திலேயே திரையிடப்பட்ட மாட்டு வண்டியில் தான் வெளியில் செல்வார். எந்த நேரமும் நகைகள் அணிந்து தான் இருப்பார். ஆனால் காலங்கள் உருண்டோடின.


சித்தப்பாவுக்கு 4 சகோதரர்கள். தந்தை இறப்புக்கு பின்னர் சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. கோயிலை நிர்வகிக்கும் பிரச்சனையில் அனைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்நிலையில் அம்மாவை கவனிப்பது யார் என்ற போட்டியில் யாரும் கவனிக்காமல் விட்டனர்.

கடைசி காலத்தில் நடமாட முடியாமல் கவனிப்பாறின்றி வீட்டுக்குளே மலஜலம் கழித்து நாறிப் போய் இறந்தார். அம்மா வழியில் வந்த சொத்துக்களை பிரித்துக் கொண்ட சகோதரர்கள், அம்மாவை கவனிக்க வக்கின்றி தவிக்க விட்ட கொடுமையை என்னவென்று சொல்வது.

இவர்களின் குழந்தைகளுக்கும் திருமணமாகும். அவர்கள் கண்டிப்பாக இந்த சித்தப்பன்களை நடுத்தெருவில் தான் நிப்பாட்டுவார்கள். மனைவி குழந்தைகள் முக்கியம் என்று தெரிந்த ஆண்களுக்கு அம்மாவை கவனிக்க சற்று சிரமப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த அவல நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.


இத்தனைக்கும் சித்தி எனக்கு மிகநெருங்கிய சொந்தம். இன்று மாமியாரை தவிக்க விட்டாய், இதே போன்ற நிலை உனக்கு ஒரு நாள் வரும். அன்று என்னிடம் வந்து நிற்கக்கூடாது என்று சத்தம் போட்டு நான் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன்.

இதே போல் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரு ஆண் குழந்தைகள். நன்றாகத்தான் வளர்ந்தார்கள். எல்லா சுகத்தையும் அப்பாவிடம் பெற்று வளர்ந்த தம்பி பையன் கல்லூரி படிப்பு படிப்பதற்காக கோவை சென்றான். அப்பா கடனில் இருந்த காரணத்தால் அண்ணன் காசில் படித்தான்.

அண்ணன் காசில் படித்தவன் இன்று நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பளம் வாங்குகிறான். அண்ணன் சொற்ப சம்பளத்தில் வெளியூரில் இருக்க அப்பா, அம்மாவை கவனித்து வரும் தம்பி, அப்பாவையும் அம்மாவையும் மதிப்பதே கிடையாது. அப்பாவை பலமுறை அடிக்கப் போய் தட்டிக் கேட்ட அண்ணனையும் முறைத்துக் கொண்டு பேசுவது கிடையாது.

இன்றைய பெரும் சோகம், அம்மா கடுமையான கால் மூட்டுவலியில் இருக்க மனைவிக்கு சமைத்து தரவில்லை என்பதற்காக சத்தம் போட்டு வேலைக்கு போய் இருக்கிறான். ஒரு வேலைக்காக என்னிடம் வந்தான், உன் குறைகளையெல்லாம் சரி செய்யாமல் என்னிடம் வராதே என்று விரட்டி விட்டேன்.

ஒரு காலத்தில் பள்ளியில் வாழ்வியல், சூழ்நிலையியல் என்றொரு பாடம் இருந்தது. நல்லொழுக்கம், நன்னடத்தை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான காலத்தில் மதிப்பெண் முக்கியமில்லாத இந்த படிப்புகள் பள்ளியில் இருந்தே எடுக்கப்பட்டு விட்டன.

இன்றைய தலைமுறைக்கு வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்திலும் பரம்பரை வீட்டில் தனிமையிலும் இருக்கின்றனர். பகிர்ந்து கொள்ள சகோதரர்கள் கிடையாது. பிறகு சுயநலம் இல்லாமல் வேறென்ன இருக்கும்.

இன்று முரட்டுத்தனம் தான் ஹீரோவுக்கு உரிய இலக்கணமாக மாறி விட்டது. ஒரே அடியில் வீழ்த்துவதே ஹீரோயிசம் என்று குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு விட்டது. நல்லவனாக மட்டுமே வாழக் கற்றுக் கொடுத்த காந்தியிசம் நகைப்புக்குரிய ஒன்றாகி விட்டது.

எம்ஜிஆரின் பாத்திரப்படைப்பு பெரும்பாலும் நல்லவர்களாகவே காட்டப்பட்டு வந்தன. சிறுவர்களும், வாலிபர்களும் அதைப் போன்று வளரவே பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று மசாலா சினிமா என்ற பெயரில் முரட்டுத்தனம் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

வினோதினியின் மரணத்தினால் குற்றமிழைத்தவனின் மிருகத்தனம் வெளியில் வந்து விட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினர் அனைவரிடமும் எந்நேரமும் வெளியில் வரக்கூடிய மிருகம் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இளைஞர்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆரூர் மூனா செந்தில்
36 comments:

 1. தாங்கள் சொல்வது அப்படியே சரி என்பேன் , சகிப்பு தன்மையும் , வயதுக்கு மரியாதையும் இல்லாமல் போய் விட்டது .
  இது எங்கே போய் முடியுமோ என்று பயமாக இருக்கிறது. இறைவன்தான் இவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜீம் பாஷா.

   Delete
 2. பணம் என்னும் மாயை எல்லா கெட்ட குணங்களையும் நல்ல குணங்களாக மாற்றி விடுகின்றன... அதையும் நியாயப்படுத்த சுற்றி ஒரு ஒரு கூட்டமும் இருக்கிறது...

  முதலில் கல்வி-சேவையில் இருந்து நல்ல தொழில் என்று மாறி பல காலங்கள் ஆகி விட்டது... (இதனால் மருத்துவமும் மற்றவைகளும்) ...ம்...

  கண்கள் இரண்டில் அருள் இருக்கும்...
  சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்...
  கண்கள் இரண்டில் அருள் இருக்கும்...
  சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்...
  உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்-அது
  உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

  பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே...
  புலியின் பார்வையில் வைத்தானே...
  இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே...
  இதய போர்வையில் மறைத்தானே...

  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் குடுத்தானே...
  இறைவன் புத்தியை குடுத்தானே...
  அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே...
  மனிதன் பூமியை கெடுத்தானே...
  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 3. அருணகிரியின் அவதாரம்!
  http://www.tamilkadal.com/?p=1834
  15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர்.

  ReplyDelete
  Replies
  1. ஏன்யா இந்த கொலைவெறி அதுவும் என்கிட்டயே?

   Delete
 4. இந்த பதிவே சமாதனத்தை வலியுறுத்தி தான், கடைசியில என்னை கடுப்பாக்கிடுவீங்க போல இருக்கே.

  ReplyDelete
 5. உண்மைதான்! சகிப்புத்தன்மை குறைந்து சண்டைகள் அதிகம் ஆகிவிட்டது! நல்லதொரு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.

   Delete
 6. எல்லா பிள்ளைகளையும் எதையோ நோக்கி விரட்டிக்கொண்டிருக்கும் பொற்றோர்களிடமே சகிப்புத்தன்மை மலிந்துவிட்டது. தனக்கு வேண்டாதவர்களைப்பற்றியும், ஆகாதவர்களைப்பற்றியும் குழந்தைகள் முன்னாலேயே தரக்குறைவாக பேசுவது, ஏசுவது என தவறான‌காரியங்களில் ஈடுபடுவதால் குழந்தைகளுக்கும் அந்த உறவினர்மேல் வெறுப்பு ஏற்படுகிறது. இதுவேதான் மற்ற சாதிகளை பற்றிய விமர்சனங்களூம் குழந்தைகள் மனதை மாற்றியமைகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அகலிகன்

   Delete
 7. சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுத்தலும் ஏமாளிகளின் குணங்கள் என்று கருதப்படும் காலம் இது.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் முரளிதரன்.

   Delete
 8. அருமையான விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரிதி.

   Delete
 9. நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கல்வியில் மாற்றம் வந்தால் மட்டுமே சமூகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் திருத்தம் ஏற்படும்...

  ReplyDelete
  Replies
  1. தேவையான மாற்றம் நண்பரே.

   Delete
 10. செந்தில் நல்ல பயனுள்ள பதிவு. வாழ்க்கை எனபது இப்போதெல்லாம் நான் எனது என்ற குறுகிய வட்டத்தில் விழுந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கும்மாச்சி.

   Delete
 11. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை செந்தில்/! எல்லாமே மாறவேண்டும்! மாற்றம் ஒன்றே எம் வாழ்வில் ஏற்றம் தரும்!!!

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் நன்றி மணி.

   Delete
 12. நீங்கள் சொல்லும் குடும்பக்கதைகள் எக்காலத்திலும் நிகழும். பணம் என்பதும் அதன்மீதுள்ள ஆசையும் வாழ்க்கை வசதிகளை எப்பாடு பட்டாவது அடைந்துவிடவேண்டுமென்ற வெறியும் எக்காலத்திலும் உண்டு. சங்ககாலத்திலும் உண்டு.; ஆனால் எழுதிவைக்கப்படுவதில்லை. காரணம், கெட்டதை வரலாறாக எழுதிவைப்பது வழக்கமில்லை. எத்தனை ஏழைத்தொழிலாளிகளில் குருதியில் தஞ்சை கோபுரம் எழுந்தது என்றா சொன்னார்கள்? இல்லை, சோழன் காலம் பொற்காலமென்றார்கள். இல்லையா?

  அடுத்து, எம் ஜி ஆரின் சினிமாவைப்பார்த்து. ஓகே ஒரு குறிப்பிட்ட அளவில். முழுக்கச்சரியென்றால், சினிமா பார்க்காதவர்கள் எல்லாரும் கெட்டார்கள் என்று வந்துவிடும். அப்படியில்லை. எம் ஜி ஆர் சினிமாக்களை இரசித்துப்பார்த்தவர்களின் நிறைய பேர் அக்காலத்து ரவுடிகள். தாயை எட்டி உதைத்தவர்கள். மனைவி குழந்தைகளைக்கவனிக்காமல் குருதியை விற்றுப் பணம் பெற்று முதற்காட்சி பார்த்தவர்கள். அவர்களில் பலர் இன்னும் முதுமையடைந்து மதுரையில் வாழ்கிறார்கள். 80 வயது.

  என் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்ப்படங்களும் பார்த்ததில்லை. அவர்கள் கெட்டுப்போகவில்லையே? பெற்றோர் வாழ்ந்து காட்ட வேண்டும். அதைப்பார்த்து குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டுமெனத்தெரிந்து வாழ்வார்கள். சினிமாவைப்பார்த்துக்கெடுவது பெற்றோர்கள் சரியில்லா குடுமபங்களில் மட்டுமே நிகழும்.

  அடுத்து, வினோதினியின் கதை. அமிலம் வீசியவன் கல்வி அறிவில்லாதவன். அல்லது பள்ளி சென்று படித்துக் கரையேறும் வாய்ப்பு கிடைக்காதவன். அவன் ஒரு கட்டடத்தொழிலாளி. இப்படிப்பட்டோர் குற்றங்கள் செய்வதை எப்படி பள்ளியிலும் கல்லூரியிலும் பாடத்திட்டங்களை மாற்றிச் சரிசெய்வது? அவர்களுக்கு வேறேதாவதல்லவா சரிப்பட்டு வரும்? அதைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, நான் எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்து இரண்டு குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை விசுவாமின்மைக்கு உதாரணமாகத்தான் சொன்னேன். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்காவிட்டால் அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படப் போகும் பிரச்சனைகளை அடிக்கோடிட்டு இருக்கிறேன்.

   சினிமா என்பது பெரும்பான்மையான மக்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. எனவே தான் சினிமாவை உதாரணமாக சொன்னேன். இதையே அரசியலிலும் பல உதாரணங்களை சொல்லியிருக்க முடியும். தமிழகத்தில் சினிமாவே பார்க்காத குடும்பம் உங்களது என்றால் கண்டிப்பாக நீங்கள் கண்ணாடிப் பெட்டியில் கண்காட்சிக்கு வைக்கப்பட வேண்டியவர் தான்.

   வினோதினியை கொலை செய்தவனாக இருந்தாலும் ஒன்றாவது இரண்டாவது என துவக்கப்பள்ளியில் படித்திருப்பான். அங்கு கூட மனிதாபிமானத்தையும் நல்லொழுக்கத்தையும் பாடமாக அமைத்திருந்தால் மற்றொரு உயிரின் வலி குறைந்திருக்க வாய்ப்புண்டு.

   பயிற்றுவிக்கப்பட்ட யானைக்கும் காட்டு யானைக்கும் கூட முரட்டுத்தனத்தில் வித்தியாசம் உண்டு நண்பரே.

   Delete
 13. தன்னலமில்லா மனிதர்கள் என்றும் தவறுவதில்லை..எந்நிலையிலும் ஒருவனின் அடிப்படை நல்லகுணம் மாறாமல் நான் நானாக இருப்பேன் என்பதில் உறுதியாய் இருந்தால் தவறுகள் குறையலாம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதிரா

   Delete
 14. Replies
  1. நன்றி நண்பரே.

   Delete
 15. நல்ல பதிவு..சகிப்புத்தன்மை குறைந்து, பழிக்குப்பழியே சரியென வெளியில் போதிக்கும் அளவிர்கல்லவா நாட்டுநிலைமை மோசமாகிவிட்டது. நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரி உலகத்தை/நாட்டை விட்டுச் செல்லப்போகிறோம் என்று அனைவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி செங்கோவி.

   Delete
 16. நீங்கள், ‘தோத்தவண்டா’ அல்ல; இம்மாதிரி பதிவுகளின் மூலம் ஜெயித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரமசிவம்

   Delete
 17. அருமையான பதிவு தோழரே..!! இப்போதிய நிலைமைக்கு கட்டாயம் தேவையான பதிவு.வாழ்த்துக்கள்..!
  நீங்கள் இதில் வினோதினியை பற்றி குறிப்பிட்டதால் இதை சொல்ல விரும்புகிறேன். பல முன்னணி ஊடகங்கள் இதை ஒருதலை காதல் என்ற கோணத்தில் அணுகினாலும், சில ஊடகங்கள் அவர்களில் காதல் மற்றும் அந்த பெண்ணின் தந்தையின் கையால் ஆகாத தனத்தை வெளியிட்டுள்ளதே. இன்று கொலைகாரனாக நிற்கும் அவனிடம் இருந்து பலமுறை அந்த தகப்பன் பணம் பெற்றது.. அந்த பெண்ணுக்கு அவன் உதவியபோதெல்லாம் எந்த தடையும் சொல்லாதது போன்ற பல தகவல்களும் வந்துள்ளது.. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் ஊடகங்களில் வெளிச்சத்தை கொண்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி செந்தில்

   Delete
 18. உண்மைதான்! I am fine

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோகரன்

   Delete
 19. Migavum sirandha kaddurai .... Nanri Senthil...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...