சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, August 30, 2013

பதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம் இறுதிப்பக்கம்

சங்கவி : ஈரோடு சேலம் பகுதி பதிவர்களை ஒன்று திரட்டி பதிவர் சந்திப்பிற்கு வரவழைத்த மகாகவிஞர். பத்து வருடங்களாக பதிவெழுதி வரும் சீனியர் பதிவர்களின் பட்டியல் வைத்திருந்து அவர்களிடம் பேசி வரவழைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார். இவர் மேடையில் கவிதை வாசிப்பதாக சொல்ல மிரண்டு போன மயிலன் சந்திப்பிற்கு வரும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார். அதன் பிறகு அந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து மயிலனை வரவழைத்த ராஜதந்திரி்.


சுரேஷ் : திருப்பூர் பகுதி பதிவர்களிடமும் வெளிநாட்டில் உள்ள பதிவர்களிடமும் பேசி ஓரளவுக்கு நிதி வசூல் செய்து கொடுத்த மகான். பக்தி படங்களாக பார்த்து இறை பக்தியில் ஊறிப் போன பக்திமான். நாளை காலை முதல் சென்னை பதிவர் சந்திப்புக்கு வரப் போகும் பதிவர்களை ஒருங்கணைத்து தங்குமிடத்திற்கு அழைத்து செல்லுதல், பதிவர் சந்திப்பன்று தங்குமிடத்திலிருந்து பதிவர் சந்தி்ப்பு நடைபெறும் இடத்திற்கு பதிவர்களை அழைத்து செல்லுதல் போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரகாஷ் : தென் தமிழ்நாட்டு பகுதியில் உள்ள பதிவர்களிடம் பேசி ஓருங்கிணைத்து அவர்களை பதிவர் சந்திப்புக்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். வாரம் மூன்று பதிவாவது பதிவர் சந்திப்பை பற்றி வெளியிட்டு பதிவர்களிடையே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர். மேடையில் பரதநாட்டியம் ஆட இருப்பதாக கேள்வி. பார்ப்பவர்களின் கதி தான் பாவம்.


கோகுல் : பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைத்து அருள்பாலிக்கும் பெரியவர். வட தமிழ்நாட்டு பகுதியிலும் பாண்டிச்சேரியிலும் இருக்கும் பதிவர்களை ஒருங்கிணைத்து பதிவர் சந்திப்புக்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுள்ளார். வரும் போது நக்கீரனுடன் காரில் வருவதாக தெரிகிறது. பாவம், அவருக்கு வந்த சோதனை நம் எதிரிக்கு கூட வரக் கூடாது.

தனபாலன் : திவ்யதர்ஷினிக்கு பிறகு மக்களால் டிடி என அன்போடு அழைக்கப்படுவர் தலைவர் தான். சொந்த வேலை நெருக்கடியினால் அதிக வேலை பதிவர் சந்திப்புக்கு செய்ய முடியாவிட்டாலும் கூட முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து வருகிறார். சகபதிவர்களே பொறமைப்படும் அளவுக்கு கிளாமர் முகவெட்டு தலைவருக்கு உண்டு. சினிமாவுக்கு போயிருந்தால் அரவிந்தசாமியை அடித்து வீழ்த்தியிருப்பார்.


ராஜி : சாப்பாட்டு குழு என்று ஒன்று அமைத்து வரவு செலவுகளையும் உணவு ஏற்பாட்டையும் தனியாக மேற்கொள்ள வேண்டும் என்று எங்களை எண்ண வைத்தது அவரின் வார்த்தை தான். முதன் முதலாக சாப்பாட்டிற்கென ஒரு தொகையை தருவதாக வாக்கு கொடுத்து, இது நல்லாயிருக்கே இது போல் யோசிக்கும் மற்றவர்களையும் ஒன்று சேர்த்து இந்த அளவுக்கு சிறப்பாக உணவு ஏற்பாடுகள் நடக்க ஆரம்ப புள்ளி வைத்தவர். சந்திப்பில் பிரியாணியை சுவைப்பதற்காகவே நேற்றிலிருந்து விரதம் இருப்பதாக கேள்வி.

சசிகலா : சென்ற வருடம் பதிவர் சந்திப்பில் புத்தக வெளியீடு நடத்தி ஓரு புது துவக்கம் கொடுத்தவர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் நாலு புத்தகம் வெளியாவதும், அடுத்த வருடம் இதன் எண்ணிக்கை பத்தாக கூடவிருப்பதும் கூட இவராலே தான் சாத்தியமானது. இந்த ஆண்டு பெண் பதிவர்களை வரவேற்று அவர்களுக்கு தங்கும் இடம் தேவைப்படின் ஏற்பாடு செய்து தருதல், பதிவர் சந்திப்புக்கு வரும் பெண் பதிவர்களை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.


ஜீவா : பதிவர் சந்திப்பு தேதி முடிவானதும் கோவையில் இருக்கும் பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரே பேருந்தில் அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த சுற்றுலா விரும்பி. அதே போல் ஒரு குறிப்பிடத்தக்க தொகையை நன்கொடையாக முதன் முதலில் கொடுத்ததும் இவரே. பதிவர் சந்திப்பில் இவர் பிரியாணியை சுவைத்து எழுதப் போகும் கட்டுரையை சற்றே கிலியுடன் எதிர்பார்த்து ஓட்டல் ஓனர் காத்திருக்கிறார்.

லாஸ்ட் பட் நாட்........ நோ நோ லாஸ்ட் தான்.

நக்கீரன் : நக்கீரன் வரப் போகிறார் என்று தெரிந்ததுமே ஏகப்பட்ட பேர் டரியலாகிப் போனார்கள் என்பது என்னவோ உண்மை. ஆனால் அவர்களை சமாதானப் படுத்திவர செய்திருக்கிறார். நிறைய நண்பர்களிடம் பேசி நன்கொடை தர வைத்தவர். நிறைய சீனியர்களிடம் பேசி பதிவர் சந்திப்புக்கு வர வைத்தவர். இவருக்கு என்று தனியே விளக்கம் தேவைப்படாத அளவுக்கு பதிவே எழுதாமல் உலகமகா பிரபலமான பதிவர் இவர் தான். எல்லாம் நம்மளப் புடிச்ச கெரகம். வாய்யா சிங்கமே, வந்து அமைதியா உறுமிட்டு போ.

--------------------------------------

ஞாயிறன்று நடக்க இருக்கும் நமது பதிவர் சந்திப்புக்கு திரைப்பட பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

நா.முத்துக்குமார் அவர்களே, வருக வருக.

-----------------------------------------

 பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!

உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.

1. உங்கள் dashboard-இல் புதிய பதிவு எழுதும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
2. அதில் பதிவு எழுதும் கட்டத்திற்கு மேலே html என்ற option-ஐ கிளிக் செய்யவும். இதனால் பதிவு எழுதும் பக்கம் html எழுதும் பக்கமாக மாறும்.
3. பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்யவும்.
4. காப்பி/பேஸ்ட் செய்த பின் பதிவை தகுந்த தலைப்பு இட்டு வழக்கம் போல வெளியிடவும். விழா ஆரம்பிக்கும் வரை கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல offline என காட்டும். விழா ஆரம்பிக்கும் ஒன்பது மணிவாக்கில்  PLAY button-ஐ அழுத்தி விழா நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

<center>
<iframe frameborder="0" height="340" scrolling="no" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&amp;height=340&amp;width=%20560&amp;autoplay=false" style="border: 0; outline: 0;" width="560"></iframe><br />
<div style="align: center; font-size: 11px; padding-top: 10px; width: 560px;">
<a href="http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&amp;utm_medium=embed&amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&amp;%20utm_medium=embed&amp;utm_%20campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
</center>


----------------------------- 

பதிவர் ஒருங்கிணைப்பு குழுவில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இது தனிப்பட்ட ஒருவரின் சாதனை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு பிரிவிலும் பலர் வேலை செய்து அவர்களை ஒரு சிலர் ஒருங்கிணைத்து தான் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. நடக்க இருக்கும் சந்திப்பின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.

பதிவர் சந்திப்பைப் பற்றிய எல்லா பதிவுகளும் முடிந்து விட்டது. நாளை காலை நான் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விடுவேன். ஞாயிறு இரவு தான் வீடு திரும்புவேன். பதிவர்களே விழாவுக்கு வாருங்கள். சந்தித்து பேசி மகிழ்வோம். இந்த நிகழ்வுக்காக பிரதிபலன் பாராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

30 comments:

 1. Replies
  1. நன்றி நண்பா

   Delete
 2. DD என்று பெயர் சூட்டியவர் யார் தெரியுமா...? அவரும் விழாவிற்கு வருகிறார்... கண்டுபிடியுங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. புடிக்கிறேன், கண்டுபுடிக்கிறேன். அந்த நல்லவரை கண்டுபுடிக்கிறேன்.

   Delete
 3. ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....
  ஆரூர் மூனா பெருமூச்சு விட்டுக்கோ...


  நாட்டியம்?????? நக்கீரன் குத்து டான்சிற்கு அப்புறமா ஆடறேன்.. அப்பத்தான் ஒருத்தரும் இருக்க மாட்டாங்க...

  ReplyDelete
  Replies
  1. அவரை குத்து டான்சுக்கு ஆடச் சொன்னா கொலைக்குத்தாகிப் போயிடுமே.

   Delete
 4. சந்திப்புக்கு முன் பதிவெல்லம் தேவையோ என்னவோ? நாங்களும் வர்ரம். நமது ஜோதிடம் 360 புத்தகத்தை இலவசமாக அளிக்க இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வருக வருக.

   Delete
  2. சித்தூர் சோசியர் அவர்களே,

   //நமது ஜோதிடம் 360 புத்தகத்தை இலவசமாக அளிக்க இருக்கிறோம்.//

   உங்களுக்கு மெய்யாலுமே பெரிய மனசுய்யா, இதே போல பதிவர் சந்திப்பில் புத்தகம் வெளியிடுவோர் எல்லாரும் இலவசமா புத்தகம் தந்தா நெம்ப நல்லா இருக்கும்!( ஹி...ஹி,பதிவுல எழுதுறாப்போல புக்குலவும் கிளு கிளூனு தானே எழுதி இருக்கீங்க!)

   நாளைக்கே பஞ்சாயத்த கூட்டி அப்படி ஒரு சட்டம் போடுங்கப்பா, ஓசில புத்தகம் கிடைக்கும்னா நானும் ஓடியாருவேன் :-))

   வாழ்த்துக்கள்!

   Delete
  3. வவ்வால் அவர்களே !
   நன்றி.

   Delete
 5. விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நாளை மாலை நானும் சுற்றமும் நட்பும் சூழ வருகை தருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருக வருக, நாளையே தங்கள் பணி துவங்குகிறது.

   Delete
 7. என்னை பற்றி தவறான தகவலை பரப்ப வேணம்ன்னு தாழ்மையுடன் கேட்டுக்குறேன். சாதாரண சாப்பாடுன்னாலே 2 நாள் பச்சை தண்ணி பல்லுல படாம பார்த்துப்பேன். இதுல கறிக்கஞ்சின்னு வேற சொல்லீங்க!! அதனால, ஒரு வாரமா விரதமிருக்கேனுங்க!!

  ReplyDelete
  Replies
  1. நான் தான் குறைச்சி எடை போட்டுட்டேனோ

   Delete
 8. Wishing your team and the function all the very best. I was there during the last meet. I will really missing watching you all from the spectator seat.

  Have fun. My regards to CP, Cable and others.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கர் சார்

   Delete
 9. சென்ற ஆண்டு விழா குறித்த நிகழ்வுகளை விரிவாக கவர் செய்தவர்களுள் அடியேனும் ஒருவன். இம்முறை நம்ம ஊர் தம்பி அதனை செய்துள்ளார் வாழ்க வளர்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணே

   Delete
 10. சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மணிமாறன்

   Delete
 11. சந்திப்பு வரமுடியாமல் இருந்தாலும் மனசெல்லாம் அங்கேதான்ய்யா இருக்கு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நானும் வரலாம் என்று இருக்கிறேன் , உங்கள் அனைவர்களுக்கும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அரிது

  ReplyDelete
 13. நான் ஏற்கனவே அட்டண்டென்ஸ் போட்டாச்சி நண்பர் ஒருவர் பத்வு பண்ணவில்லை அவர் வரலாமா?

  ReplyDelete
 14. சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. உண்மையில் செந்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட அந்த பொறுப்பும் உற்சாகமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.எனக்குத்தான் இந்த வேலையில் அங்கு சென்னையில் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் . என்ன செய்வது ? பிழைப்பு என்று ஒன்றும் உள்ளதே.

  நண்பர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் நம் விழாவினை சிறப்பாக நடத்தி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை சென்ற வருடமே வந்து விட்டது.
  நிச்சயம் இந்த வருடம் விழா மிக சிறப்பாகவே நடக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் உங்களின் இந்த பங்களிப்பினை நான் பெருமிதத்துடன் பாராட்டுவேன் செந்தில என் அன்புக்கு உரியவரே! தண்ணி பார்டி நடக்கும் நடக்கும் போது அவசியம் என்னை நினைவில் கொள்க. :))

  ReplyDelete
 17. விழா சிறப்பாக நடாத்தி வெற்றி வாகை சூடிய ஆரூர் மூனா செந்தில் அவர்களுக்கு எங்களது இனிய பாராட்டுக்கள் !
  விழா செய்திகளையும் படங்களையும் பார்த்து மகிழ்ந்தேன் !
  விழா பற்றி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...