சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, August 7, 2013

பஞ்சேந்திரியா - பரிதாப கதாநாயகியும் அயனாவர விபத்துகளும்

சினிமா கதாபாத்திரங்கள் கஷ்டப்படும் போது பார்க்கிற எனக்கு இது போன்ற கேரக்டர்களுக்கு உதவி செய்யணும்னு மனசுல ஒரு நினைப்பு எப்போதுமே உண்டு. ஆனா பாருங்க இது முழுக்க பொம்பளப்புள்ளைக மேல தான் இந்த பரிவு வருது. ஒரு பையன் சிரமப்படுவது போல் காட்சிகள் இருந்தால் நல்லா அனுபவிக்கட்டும் என்றே தோன்றுகிறது. என்ன கெரகமோ.

அங்காடி தெரு படத்துல அஞ்சலி சிரமப்படும் கதாபாத்திரத்தை பார்த்த பிறகு இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணிச்சி. போராளி படத்துல ஸ்வாதி அனாதையா அழுவும் போது உடனே கட்டிக்கிடனும் தோணிச்சி. இரண்டு படம் வந்தப்பவும் எனக்கு தோணியதை வீட்டம்மாக்கிட்ட சொல்லி தோசைத் திருப்பியால கன்னத்துல ரெண்டு வாங்கினது தான் மிச்சம்.

# ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

----------------------------------------------------

நக்கீரன் வீட்டு காம்பவுண்டு சுவரு


------------------------------------------------------

பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்திலிருந்து அயனாவரத்திற்கு ரயில்வே குவார்ட்டர்ஸ் பில்கிங்டன் ரோடு வழியாகவும் செல்லலாம். பெயர் தான் ரோடே தவிர அது குறுகலான சந்து. இன்று இந்தத் தெருவில் இரண்டு விபத்துகளை நேரடியாகப் பார்த்தேன். காலையில் அயனாவரம் செல்லும் போது ஒரு பள்ளி மாணவன் ஸ்கூட்டியில் காதல் படத்தில் பரத் வருவது போல் ஒரு சைடாக உக்கார்ந்து படுவேகமாக வந்து கொண்டு இருந்தான். ஒரு ட்ரெயினேஜ் மேன் ஹோல் பள்ளத்தில் வண்டியை விட்டு எகிறிப் போய் விழுந்து முட்டி எல்லாம் தேய்ந்து போய் இருந்தது. பார்க்கிறவன் எல்லாம் அவனை கண்டபடி திட்டு விட்டுப் போனார்கள்.

மதியம் திரும்பி வரும் போது ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் 25 வயதிருக்கலாம். ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தவர் தானே நிலை தடுமாறி குப்புற விழுந்தார். ஹெல்மெட் போட்டிருந்ததால் தலை தப்பியது. ஆனால் நெற்றியில் கல் குத்தி ரத்தம் வழிகிறது. பக்கத்து தெருவில் இருக்கிறவன் எல்லாம் கிளம்பி வந்து முதலுதவி அளித்துக் கொண்டு இருந்தான். இந்த முறை திட்டு வாங்கியது அரசாங்கமும் சாலைப் பணியாளர்களும் தான். முதல் விபத்தில் சிக்கியவன் கூட தாவணியில் வந்து விழுந்து இருக்கலாம்.

----------------------------------------------------

அறிவாளி குடும்பம்யா


-----------------------------------------------------

வியாழன் மாலை 7 மணிக்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ், வெள்ளி காலை 6 மணிக்காட்சி தலைவா, ரெண்டுமே வில்லிவாக்கம் ஏஜிஎஸ்ல.

தமிழனை எப்படி கலாய்க்கிறானுங்க என்று சென்னை எக்ஸ்பிரஸ் பார்க்கனும். தலைவாவுக்கு எதிர்பார்ப்பு நடுநிலையாத்தான் இருக்கு. நல்லாயிருந்தா சூப்பர் ஹிட்டு. போரடிச்சா பிளாப்பு தான். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

ஆரூர் மூனா செந்தில்

19 comments:

 1. "தமிழனை எப்படி கலாய்க்கிறானுங்க என்று சென்னை எக்ஸ்பிரஸ் பார்க்கனும். "


  தன்னை கலாய்பதை பெய்டு பிரிமியர்ல

  பார்க்க தமிழனால் மட்டுமே முடியும்

  ReplyDelete
  Replies
  1. நான் தமிழன்ல

   Delete
 2. //
  நக்கீரன் வீட்டு காம்பவுண்டு சுவரு////

  :-)

  ReplyDelete
 3. நக்கீரன் ரொம்ப காமடி பண்றாப்ல..

  ReplyDelete
  Replies
  1. அவரு பண்றாப்ல, நமக்கு தான் சிரிப்பு வரமாட்டேங்குது

   Delete
 4. // தோணியதை வீட்டம்மாக்கிட்ட சொல்லி தோசைத் திருப்பியால கன்னத்துல ரெண்டு வாங்கினது தான் மிச்சம்.//


  அத்தான் இப்டி "பண்ணு " கணக்கா வீங்கினுகீதா ரெண்டு பக்கமும் :))

  ReplyDelete
  Replies
  1. அண்ணே, அடையாளத்தை மறைக்க நினைச்சாலும் கொண்டை வெளியில தெரிஞ்சிடுச்சே.

   Delete
 5. தோசை கரண்டி அடி சூப்பர்.
  அறிவாளி குடும்ப ஃபோட்டோ என்னம்ம யோசிக்கிறாங்க..

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி நன்றி அமுதாகிருஷ்ணா

   Delete
 6. ஹ ஹா... ஸ்கூட்டி சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   Delete
 7. தமிழனை எப்படி கலாய்க்கிறானுங்க என்று சென்னை எக்ஸ்பிரஸ் பார்க்கனும்.//

  நாம மார்வாடிங்களையும் சேட்டுங்களையும் பத்தான்ஸையும் எவ்வளவு நாளா கலாய்க்கிறோம்? இப்ப அவங்க காலம்!

  ReplyDelete
  Replies
  1. கலாய்க்கிறதை காமெடியா எடுத்துக்கிட்டா பிரச்சனைகளே வராதே

   Delete
 8. கதாநாயகியரை கரை சேர்க்க நினைத்த உங்களது மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளவில்லை போலும் ! எப்பவுமே லெடீஸூக்கு அடிபட்டா மரியாதையே தனி! உங்க கதாநாயகி காப்பாற்ற தோன்றும் மனசு போலத்தான் எல்லோருக்கும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி நன்றி சுரேஷ்

   Delete
 9. :-))))))))

  எல்லாம் இது போதும்...!!!

  ReplyDelete
 10. ANNA IN OMAN YESTERDAY WE SAW THALIVA PIC,WE SUGESSTING YOU PLS GO WITH VICKS,AMIRTHANGAN & ANACIN.THALIVA SUPPPEEEEERRRRRRR

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...