சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, August 2, 2013

பதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்

பதிவர்களின் தனித்திறமையை காட்டும் ஒரு நிகழ்ச்சி என்று ஒரு பகுதி இந்த ஆண்டு பதிவர் சந்திப்பில் இடம்பெற இருக்கிறது.(அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.)


உதாரணத்திற்கு நாங்கள் ஒரு 15 நிமிடம் மட்டுமே இடம்பெறும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற யோசித்து வருகிறோம். நாங்கள் என்பது நான், செல்வின், சிவக்குமார், பிரபாகரன், நக்கீரன், வீடுசுரேஷ், நா.மணிவண்ணன், கோகுல்.

பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம். ஐடியாவை கொடுத்து தொடங்கி வைத்தது செல்வின். இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஒரு பிரபல சாப்பாட்டுக்கடை பதிவர் படத்தின் டிஸ்கசனில் இருக்கிறார். அதில் நடக்கும் சம்பவங்களே நாடகத்தின் மூலம்.


பாடல் எழுத ஒரு பதிவரை அணுகுகிறார் இயக்குனர். அம்மா வெளியூரில் இருக்கிறார். அம்மாவை நினைத்து நாயகன் பாட வேண்டும் இது சிச்சுவேஷன். பிரபல கவிதை எழுதும் பதிவர் எழுதுகிறார். அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா. இயக்குனர் அலறி அடித்து வெளியேறுகிறார்.

மற்ற நடிகர்களின் கால்ஷீட்டுகளை பெற புரொடக்ஷன் மேனேஜர் நக்கீரனுக்கு 2000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படுகிறது. பத்து நிமிடத்தில் இயக்குனர் எந்த எந்த கதாபாத்திரத்திற்கு யாரை யோசித்து வைத்தாரோ அனைவரும் வாழ்க்கையை துறந்து அமைதியை தேடி இமயமலைக்கு பயணமாக போவதாக தகவல் வருகிறது. இயக்குனர் மயங்கி விழுகிறார்.


படத்தில் நாயகியின் அம்மா வேடத்திற்கு ஒரு தெலுகு ஆண்ட்டியை புக் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் அந்த ஆண்ட்டியை காணும், எங்கேவென்று தேடினால் பட்டிக்ஸ் அவர்களிடம் பேசி சரிகட்டி பணியாரம் சுட அழைத்து சென்று விடுகிறார். அந்த ஆண்ட்டி பணியாரம் சுட்டுப் போட்டுக் கொண்டே இருக்க பட்டிக்ஸ் சொதப்பல் தெலுகில் பேசிக் கொண்டே பணியாரம் தின்று கொண்டு இருக்கிறார்.

டிஸ்கசன் நேரத்தில் பார்ட்டி துவங்குகிறது. சிறிது நேரத்தில் பிலாசபியை காணும், எல்லோரும் தேடத் துவங்க சிறிது கூட அலட்டிக் கொள்ளாத செல்வின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் படுத்திருக்கும் பிலாசபியை கூட்டி வருகிறார்.


இப்படி போகிறது கதை. இன்னும் பேசிப்பேசி இதனை ஒரு 15 நிமிட ப்ளேவாக செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது போல் நம் பதிவர்களில் நிறைய பேருக்கு இது போல் கலாய்த்து நகைச்சுவை நாடகங்கள் போட எண்ணம் இருந்திருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது இந்த மேடை.

பக்கத்து ரூமில் இருந்து மர்மபோன் செய்து பதிவர்களிடம் கிலியூட்டும் கவிதைவீதி செளந்தர், மனுசன் பார்க்க முடியாத படத்திற்கு விமர்சனம் எழுதும் சிபி, புரியாத படத்திற்கு சிலாகித்து விமர்சனம் எழுதும் மெட்ராஸ்பவன், சினிமா விமர்சனம் எழுதுவதை விட சினிமாவுக்கு போன கதையை வெட்டி பந்தாவாக எழுதி மொக்கைப் போடும் நான்,

விளிம்பு நிலை மனிதர்களின் பேட்டியால் பதிவுலகை டரியலாக்கும் வீடு திரும்பல், பின்நவீனத்துவ கவிதை எழுதுகிறேன் என்று படிக்கிறவனை பிதாமகன் விக்ரம் போல் அலைய வைக்கும் கேஆர்பி செந்தில், ஒருவன் ரொம்ப சீரியஸாக ஒரு மணிநேரம் யோசித்து போட்ட பதிவை ஜஸ்ட் லைக் தட் ஒரு பின்னூட்டத்தில் காமெடி பதிவாக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,

படம் வெளியாவதற்கு முன்பே விமர்சனம் என்ற பெயரில் ஹிட் பார்க்கும் சக்கரகட்டி, மாலை மலரிலிருந்து செய்திகளை எடுத்து பதிவு போடும் ரஹீம்கஸாலி, இணையத்தில் படித்ததை எடுத்து பதிவாக போடும் வேடந்தாங்கல் கருண், அப்பாவியாக போய் ப்ளஸ்ஸில் சீனியர்களிடம் மரணஅடி வாங்கும் பட்டிக்காட்டான்,

ஏன் திட்டுகிறோம் யாரை திட்டுகிறோம் என்றே மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஸ்டேட்டஸ் போடும் விக்கி, முதல்நாள் இரவு தெளிவாக ஸ்டேட்டஸ் போட்டு விட்டு காலையில் மன்னிப்பு கேட்கும் நா.மணிவண்ணன், முதல்நாள் முதல் காட்சி சினிமாவுக்கு போக வேண்டும் என்பதற்காக காலை 4 மணிகாட்சிக்கு பல்லு கூட வெளக்காமல் போகும் நானே நான்,

முட்டுக்கடையில இட்லி தின்றாலும் அதனை பத்து படங்களுடன் பதிவாக போடும் கோவை நேரம் ஜீவா, வீட்டிலிருந்து பத்தடியில் இருக்கும் கடைக்கு முட்டை வாங்க சென்றதை 100 படங்களுடன் பயணக் கட்டுரையாக போடும் நாஞ்சில் மனோ, ஷகீலா பற்றி பதிவு போடுவதையே வழக்கமாக கொண்ட வீடுசுரேஷ் இன்னும் இன்னும் நீங்கள் கலாய்ப்பதற்கு பதிவுலகில் ஏராளமானோர் உள்ளனர்.

கலாய்த்து மட்டும் இல்லை, சிறந்த நடிப்புத் திறமை வெளிக்கொணர வைக்கும் எந்த சப்ஜெக்ட்டையும் எடுத்துக் கொண்டு உங்களது எழுத்தாற்றலாலும் நடிப்பாற்றலாலும் திறம்பட மெருகேற்றி மேடையேற்றுங்கள் நண்பர்களே.


நான் சொன்னது சும்மா காமெடிக்காக ஒரு உதாரணம் மட்டுமே. இதை மனதில் கொண்டு ஆளாளுக்கு பதிவர்களை ஓவராக கலாய்த்து நாடகம் போடுகிறேன் என்று இறங்க வேண்டாம். அதிகம் கலாய்த்தாலும் சலித்து விடும். உங்களுக்கு திறமை உள்ளது. வெளியில் உலகம் உள்ளது. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. உங்களுக்கான கதைக்கருவை வெளியிலிருந்தே எடுங்கள்.


எதையும் முகம் சுளிக்குமளவுக்கு இல்லாமல் நாகரீகமாக 15 நிமிட ப்ளே செய்யுங்கள், பாட்டுப் பாடுங்கள், மிமிக்ரி செய்யுங்கள், நடனமாடுங்கள் வாருங்கள் நண்பர்களே என்ஜாய் செய்வோம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்)
 

ஆரூர் மூனா செந்தில்

44 comments:

  1. இப்ப முதல்ல நான் தான் போல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மச்சி

      Delete
  2. நல்லதொரு நிகழ்ச்சி மச்சி...

    நிச்சயம் எதிர்பார்க்கிறேன் நிறைய மினி நாடகங்கள் வரும் என்று...





    ReplyDelete
    Replies
    1. அதுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவே.

      Delete
  3. யோவ் என்னய்யா நக்கலா. அதென்ன மாலைமலரிலிருந்து பதிவு போடும்....
    சரி இப்பவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க போல.நடத்துங்க நடத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. நாடகம் களை கட்டும் போல. நன்றி கஸாலி

      Delete
  4. நடத்துங்கையா.....

    இப்பவே கண்ணை கட்டுதே..

    ReplyDelete
    Replies
    1. பின்ன கட்டனும்ல.

      Delete
  5. யாராவது ஹோட்டல் நடத்துறமாதிரி வைங்க...நான் வந்து சாப்பிட்டு விட்டு பதிவை போடறேன்..முக்கியமா அம்மணிகள் ஹோட்டலில் இருக்கணும்..ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வச்சிருவோம்

      Delete
  6. நடக்கட்டும். ....நடக்கட்டும் :)) அசத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  7. சும்மா அடிச்சு ஆடுங்க!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்க தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அடிச்சித் துவக்குங்க உங்க இன்னிங்ஸை

      Delete
  8. Kalakunga Senthil !!!.. Your initiative will not be wasteful. Perhaps, It stimulates others to present their own creativity and innovative ideas in Blogger's meet. Good platform to explore talents... Keep rocking !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்

      Delete
  9. ..ம்....ம்.. சிறப்பாய் நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ம் உங்களைத்தான் விட்டுட்டேன், நேரடியா நாடகத்துல உங்களைப் பத்தி வசனம் வச்சிடுவோம்

      Delete
  10. அம்மாபாட்டுக்குமா ?

    ReplyDelete
    Replies
    1. வேற யாரும் சிறப்பான கவிஞர் சிக்கலையே அண்ணே.

      Delete
  11. கலக்கணும்.... அவனவன் தெறிச்சு ஓடணும்.... ஹிஹி... சும்மா...

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நடக்கப் போகுது சரவணன்

      Delete
  12. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........
    by....
    பட்டிக்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் மனுசன் ஏற்கனவே ப்ளஸ்ல காறித் துப்பிட்டாரு

      Delete
  13. Replies
    1. யோவ் வாத்யாரே உன்னை தான் கலாய்க்கிறோம், கலக்குங்கன்னு சொல்றீங்க. கோவப்படுய்யா.

      Delete
    2. கசாப்பு கடையில நின்னுகிட்டு ஆடு கவலைப்பட்டா மட்டும் விடவா போறீங்க...

      பார்த்து செய்யூங்க....

      Delete
  14. அன்பின் செந்தில் - பதிவர்களில் இளைஞர்கள் அதிகம் - நாடகங்கள் களை கட்டட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனா அய்யா

      Delete
  15. விழாவை சிறப்பிக்கும் நிகழ்வு!கலக்கிடுவோம்.,

    ReplyDelete
    Replies
    1. கலக்குவோம் கோகுல்

      Delete
  16. நாடகத்தின் தலைப்பு நான் சொல்லுதேன்...."எருமைனாயக்கன்பட்டி பதிவர் சந்திப்பு" ஹா ஹா ஹா...

    அருமையாக நடத்துங்க சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. எருமைநாயக்கன்பட்டி பதிவர் சந்திப்புக்கு நாஞ்சில் மனோ தலைமை தாங்குகிறாராமே ! பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  17. பதிவர்களின் திறமைகள் ஓரிடத்தில் வெளிப்படும் அருமையான ஐடியா வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன்

      Delete
  18. Replies
    1. ரைட்டுக்கு ரைட்டு

      Delete
  19. சார் டிக்கெட் புக் பண்ணியாச்சா

    ReplyDelete
  20. களை கட்டியாச்சு திருவிழா!கலக்கல்

    ReplyDelete
  21. நல்ல வேலை அந்த லிஸ்டில் நான் இல்லை.

    நம் பதிவர்களை பற்றிய பட்டியல் மகா கிண்டல் .அதிலும் பன்னி குட்டி , மனோ இவர்களை பற்றி கூறும் போது சிரிப்பு அடக்க முடியவில்லை.

    நாடக ஐடியா பிரமாதம். அனேகமாக விழாவின் high light இதுவாகவே இருக்கும் என இப்போதே தெரிகிறது செந்தில்.

    காணொளியாக பதிவிட்டு என்போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் என்றும் தெரியும். ஜமாயுங்க கண்ணுகளா.

    ReplyDelete
  22. அட இதுவும் நல்லாத்தான் இருக்கு புதுமையாக....

    எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்...

    திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகவும் அமையும்.. அசத்துங்க எல்லோருக்கும் அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அய்யா ராசா...வாழ்த்துக்கள்...என்னைய போல அப்பாவியையும் கோத்து விட்டுபுட்டீங்களே...ம்ம்மா!

    ReplyDelete
  24. பார்வையாளர்களும் வேணுமில்ல அதுக்கு நாங்க இருக்கோம்

    ReplyDelete
  25. முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)
    http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html

    தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
    சுப்புத் தாத்தா ( http://subbuthatha72.blogspot.in )
    G M பாலசுப்ரமண்யம் (http://gmbat1649.blogspot.in )
    மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
    ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
    கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
    யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...