சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, August 16, 2013

பஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு பார்க்க போன கலாட்டாவும்

மாயவரம் பக்கத்துல ஒரு கிராமத்திற்கு எனக்கு 20 வயசிருக்கும் போது என் நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன். நானும் அவனும் சென்று இறங்கியதும் அவனது சொந்தக்காரர்கள் எல்லோரும் வயலுக்கு சென்றிருந்ததால் என்னை ஒரு கொய்யா தோப்பில் நிற்க வைத்து மற்ற உறவினர்கள் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க அவன் சென்று விட்டான். என் வயதையொத்த ஒரு பெண் அதே தோப்பில் கொய்யாக்களை பறித்து மூட்டை கட்டிக் கொண்டு இருந்தாள்.


சில நிமிட பார்வைகளில் இருவரது கண்ணும் கண்ணும் நோக்கியாவானது. அந்த வயதில் ஒரு பெண்ணிடம் வார்த்தைகளால் பேசுவதே பெரிய வீரமாக கருதப்பட்டதால் கண்களால் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தேன். நாட்டு கொய்யாக்களில் பழுத்த கொய்யா ஒன்றினை ஒரு கடி கடித்து எனக்கு கொடுத்து சென்றாள்.

அந்த நாலு மணிநேரமும் என்னிடம் கண்களால் பேசிக் கொண்டே இருந்தாள். பாவடை தாவணி அணிந்திருந்த லாவகமும், அவள் நெற்றியின வியர்வைத் துளிகளும் என்னை அவள் பால் இயல்பாகவே இழுத்துச் சென்றன.

நான்கு மணிநேரம் வரை அந்த தோப்பில் இருந்தும் அவளிடம் பேச பயமாகவே இருந்தது. கடைசியில் ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேச முயற்சிக்கும் போது என் நண்பன் வந்து விட்டான். ஏதும் சொல்லாமல் கண்களாலேயே பை பை சொல்லி விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.


அன்று அந்த கொய்யாவில் இருந்த ருசி பல நாட்களுக்கு என் நினைவில் இருந்தது. அன்று ஒன்றுமே பேசாமல் திரும்பி விட்டாலும் பல நாட்கள் அவளை காண வேண்டி அதே தோப்புக்குள் வந்து நின்றிருக்கிறேன். ஆனால் பார்க்க தான் முடியவில்லை. இரண்டு வருடம் வரை என் முயற்சியை கைவிட வி்ல்லை. ஆனால் பலன் பூஜ்யம் தான்.

இன்று ஊரிலிருந்து அப்பா வந்திருந்தார். ஊரில் எங்கள் கொல்லையில் இருந்து பறித்த கொய்யாக்களை எடுத்து வந்திருந்தார். அதை சாப்பிடுவதற்காக வெட்டும் போது தான் கவனித்தேன். அன்று தின்ற கொய்யாவின் அதே நிறம், அதே சுவை.

அன்று வெட்கத்தால் தவற விட்ட அவளின் அந்த ஒரு நாள் நினைவுகள் எனக்குள் பசுமையாய்.

-----------------------------------------

பொண்ணு பாக்க நண்பனுடன் போகவே கூடாது என்பதை நினைவு படுத்திய சம்பவம் அது. 12 வருடங்களுக்கு முன்பு என் நண்பன் வெங்கடேஷ் என்பவனுக்கு பொண்ணு பார்க்க நானும் உடன் சென்றேன். ஆனால் அவனுக்கு அப்போது வேலையும் இல்லை, வயதும் என் வயது தான், அப்போது 21.

ஆனால் அவனின் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர், பொண்ணு வீடும் பயங்கர சொத்து பார்ட்டியாக இருந்ததால் கல்யாணம் செய்து முடித்து விட நினைத்து பெண் பார்க்க எங்களையெல்லாம் கிளப்பினார். வெங்கடேஷூக்கோ விருப்பமில்லை, வீட்டில் எல்லோரையும் திட்டிக் கொண்டு இருந்தான்.

அவங்க அப்பாவோ எதற்கும் அசராமல் வண்டியும் கொண்டு வந்து விட்டார். பையன் ஷேவ் கூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தான். திருச்சிக்கு போக வேண்டும். அப்படியே சுமோவில் ஏறிச் செல்கிறோம். போகும் வழியெல்லாம் நான் பெண்ணைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று சொல்லி விடப் போகிறேன் என்று புலம்பிக் கொண்டே வந்தான்.

நாங்களும் பெண்ணின் வீட்டில் சென்று அமர்ந்தோம். பெண்ணும் வந்தது. இவன் என்ன கலாட்டா செய்யப் போகிறானோ என்று பயம் எனக்கு. கொடுத்த காபியை ரசித்து சாப்பிட்டு விட்டு மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்பவரை நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவங்க அப்பா மாடிக்கு வந்து பெண் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். சில நிமிடம் பேசாமல் இருந்த அவன் பொண்ணை சரியாக பார்க்கவில்லை. இன்னொரு முறை பார்க்க முடியுமா என்று கேட்டான். போடா ம#$ரு என்று திட்டி விட்டு பஸ் பிடித்து திருவாரூருக்கு வந்து விட்டேன். # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்


ஆரூர் மூனா செந்தில்

7 comments:

  1. போடா ம#$ரு என்று திட்டி விட்டு

    idhu enna avvalur thappa?


    sivaparkavi

    ReplyDelete
    Replies
    1. காலையிலிருந்து ஒருத்தனை சமாதானப்படுத்தி அவனும் என்னை திட்டி சாயந்திரம் கட்டுனா அந்த பொண்ணைத்தான் கட்டுவேன்னு சொன்னா கோவம் வராதா, அவனை குமுறியிருக்கனும் போனா போவுதுன்னு விட்டு வந்தேன்.

      Delete
  2. விரைவில் அந்த கொய்யா தோப்பில் பார்த்த பெண்ணை சந்திப்பீர்கள்...
    ////////////////////////////////////////////////////////////////
    போடா ம#$ரு என்று திட்டி விட்டு... இது கொஞ்சம் கம்மிதான் அவருக்கு. பேசணும்னு சொன்னா திரும்ப கூப்ட போறாங்க... அதுக்கு ஏன் பொண்ண பார்க்கலன்னு சொல்லணும்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றிவேல், நான் சொன்ன கதை நடந்து 13 வருடம் ஆகி விட்டது. அந்த பெண்ணுக்கு இந்நேரம் திருமணமாகி 13 வயதில் பெண்ணோ பையனோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இதுக்கு மேல பார்த்தா என்ன பாக்காட்டி என்ன

      Delete
  3. உங்க தாவணி கதை உண்மைய :)

    ReplyDelete
  4. ஏங்க ரெண்டு கதைக்கும் எதோ லிங்க்கு இருக்கோ (சொல்லாம மறைக்கிரீன்களோ)? நான் பிறந்ததும் பொண்ணு கட்டினதும் திருவாரூர் (புலிவலம் தான்).
    அதெல்லாம் சரி சவுதியில வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாதான்.. பிஸ்னஸ் பண்ணலாமா ?

    ReplyDelete
  5. விடுங்க பாஸ் காபி டேஸ்ட்டா இருந்துருக்கும் அதான் அந்த பெண்ணை பாக்கல.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...