படம் பார்க்க போன கதையை சம்பிரதாயத்துக்கு எழுதிய படங்கள் பல உண்டு. ஆனால் இந்த படம் பார்த்த கதை வரலாறு தான். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்கும் தலைவாவுக்கும் முதல் காட்சி டிக்கெட் முன்பதிவு பண்ணியாச்சி என்று சந்தோசத்தில் இருந்தேன்.
தலைவாவுக்கு தடை என்று செய்திகள் வந்ததும் அப்செட் ஆகி சரி இந்த படத்தை மட்டுமாவது பார்ப்போம் என்று மனசை தேற்றிக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் நண்பர் ஹம்சா மொகம்மத் சிங்கப்பூரில் இருந்து நேற்று காலையே படத்தை பார்த்து விட்டு படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.
மதியம் 12 மணி வரை எல்லாம் சுபமாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. பிரச்சனை அங்கு தான் ஆரம்பித்தது. எனக்கு ஒரு பிரச்சனை உண்டு. சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் சிறுநீர் கழித்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு யூரினல் பிளாடர் மற்றும் கிட்னியில் வலி வந்து விடும். வலி என்றால் கடுமையான வலி. தாங்கவே முடியாது.
இந்த பிரச்சனையை தவிர்க்க முடிந்த வரை பொதுக் கழி்ப்பிடத்தை தவிர்ப்பேன். தவிர்க்க முடியாத சமயங்களில் மாட்டிக் கொள்வேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை எப்படியும் இந்த பிரச்சனை வந்து விடும்.
நேற்று மதியம் அது போல் வலிக்க ஆரம்பித்தது. நானும் அதற்கேற்ற மருந்தை எடுத்துக் கொண்டு படுத்தேன், ஆனால் நேரம் ஆக ஆக வலி படுத்தி எடுக்க ஆரம்பித்தது. பொறுக்க முடியவில்லை. 5 மணிக்கு மேல் வலி தாங்க முடியாமல் நண்பன் அசோக்குடன் மருத்துவமனைக்கு கிளம்பினேன்.
பல இடங்களிலும் தேடி மருத்தவர் கிடைக்காததால் கொளத்தூர் பக்கமாக போகும் போது யூராலஜிஸ்ட் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் ஒன்று இருந்தது. போய் மருத்துவரை சந்தித்து அவரிடம் இன்ஜெக்சன் எடுத்துக் கொண்ட பிறகு வலி குறைய ஆரம்பித்தது.
ஆறரை மணிக்கு வலி நின்றதும் சினிமாவுக்கு புறப்படலாம் என்று தோன்றியது. காலையில் நண்பர் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சினிமாவுக்கு போறேன் என்று சொன்னால் தோசை திருப்பி என்னை நோக்கும் வாய்ப்பு இருந்ததால் வீட்டம்மிணியிடம் பொய் சொல்லி விட்டு சினிமாவுக்கு புறப்பட்டேன்.
தியேட்டருக்கு சென்றதும் கவுண்ட்டரில் நான் கேட்ட முதல் கேள்வியே "தலைவா படம் ரிலீஸ் இல்லைனா டிக்கெட் எடுத்தவங்களுக்கு எப்பங்க ரீபண்ட் தருவீங்க" தான். அவர்கள் சொன்னதோ "நாளை காலை 6 மணிக்கு வாங்க படம் இல்லையென்றால் ரீபண்ட் தருவார்கள்" என்பது தான்.
உள்ளே சென்று அமர்ந்து சுற்றிப் பார்த்தால் பாதிக்கும் மேல் ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாத தமிழ் இளைஞர்கள் தான். பல வசனங்களுக்கு அவர்களாகவே ஒரு அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள். பத்து வருடங்களுக்கு முன் நான் இருந்ததை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
படத்தில் ஒரு காட்சி ஒரு மலையாளியிடம் ஷாருக் லிப்ட் கேட்பார். அதற்கு அந்த மலையாளி "எந்தானு ஜோலி" என்பார். அதற்கு ஷாருக் "ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி" என்பார், சட்டென்று அர்த்தம் புரிந்து ஒருவர் வெடிச்சிரிப்பு சிரிக்க மற்றவர்களையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது. திரையரங்கத்தின் சிரிப்பு சத்தம் அடங்க 5 நிமிடம் ஆனது.
இது தான் படத்தின் பலம், நீங்கள் தனியாகப் பார்த்தால் பல காட்சிகள் சிரிப்பு வராது. ஆனால் திரையரங்கில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்கள். அதுதான் இதுபோன்ற ஆவரேஜ் சிரிப்பு படங்களை ஹிட் ஆக்குகிறது.
குறை சொல்லலாம் என்றால் நிறைய தமிழ்ப்படங்களில் இருந்து காட்சிகள் சுடப்பட்டு இருக்கிறது. அது நமக்கு தெரிகிறது. ஆனால் ஹிந்திக்காரர்களுக்கு புதுசா இருக்கும். இந்த படத்தின் வெற்றி இன்னும் பல படங்களை தென்னிந்தியாவின் களத்தில் எடுக்க வைக்கும் என்பது தான் நமக்கு சந்தோசம்.
ஆரூர் மூனா செந்தில்

இந்தப்படம் தமிழர்களின் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருக்கிறது... நான் கூட இன்று மதியக்காட்சிக்கு குடும்பத்துடன் செல்கிறேன்...
ReplyDeleteகுடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்
Deleteநமக்கு ஹிந்தி தெரியாது பட கதையை கொஞ்சம் சொல்லி இருக்கலாமே?
ReplyDeleteபாஸூ இதுக்கு பேரு தான் கலாய்க்கிறதா, அதான் விமர்சனத்தை தனிப்பதிவாவே போட்டுருக்கேனே.
DeleteDear Friend,
ReplyDeleteIf possible try to get cranberry juice.. its very good for Urinary infections and kidney functions...am not sure where you get in chennai, but if you have any friend in USA ask them to buy it for you.
ஆலோசனைக்கு நன்றி நண்பா, முயற்சிக்கிறேன்
Deleteஆனால் திரையரங்கில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்கள். அதுதான் இதுபோன்ற ஆவரேஜ் சிரிப்பு படங்களை ஹிட் ஆக்குகிறது
ReplyDelete-- Well said - most of the so called comedy movie are pretty average and Santhanam jokes are lame. Still when people watch in theatres they laugh because others are laughing.
Is it infection?,You should get it checked properly. To me it seems you could be suffering from renal calculi. Have you done a scan at any time?
ReplyDelete