நேற்று இரவு மா மூவிஸ்ஸில் ஆனந்த் என்ற தெலுகு படத்தை திரும்பவும் பார்த்தேன். தெலுகில் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைத்த படம். படம் வெளியான போதே பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அதன் பிறகு கூட டிவிடி வாங்கி வைத்து தோன்றும் போதெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
பொதுவாக தெலுகு படங்களின் இலக்கணங்களையெல்லாம் அடித்து நொறுக்கி எடுக்கப்பட்ட படம் இது. இலக்கணம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
நம்மூரில் வந்த பூவிழி வாசலிலே படம் தெலுகில் ரீமேக்கானது கதாநாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக விஜயசாந்தி. தமிழில் டூயட் பாடலே கிடையாது. அதற்கு தேவையும் கிடையாது. ஆனால் தெலுகி்ல் ஜிகினா ட்ரெஸ் போட்டு பின்னணியில் கலர்பொடிகள் வெடித்து குலுக்கலாய் டான்ஸூடன் ரெண்டு பாடல்கள் உண்டு.
ரமணா படத்தில் க்ளைமாக்ஸில் சண்டை வருவதற்கு தேவையே கிடையாது. ஆனால் தெலுகு பதிப்பில் க்ளைமாக்ஸில் சிறைச்சாலையில் ஒரு மரண சண்டைக்காட்சி உண்டு. மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை நாயகன் கீழிருந்து ஏர்கலப்பையை தூக்கியடித்து வீழ்த்திய கொடூரமும் உண்டு.
இதையெல்லாம் வீழ்த்தி சண்டைக்காட்சிகளோ அதிரடி திருப்பங்களோ இல்லாத படம் தான் ஆனந்த். படத்தின் ப்ரோமோவே அதிகாலையில் டிகிரி காப்பி குடிப்பது போல் ரசனையை தரும் படம் இது என்று தான் செய்தார்கள். அது கொஞ்சம் கூட அதிகம் கிடையாது.
இந்த படத்தில் தான் கொஞ்ச நாட்கள் தமிழ்இளைஞர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட வேட்டையாடு விளையாடு புகழ் கமாலினி முகர்ஜி அறிமுகமானார். படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா.
அம்மா அப்பாவை விபத்தில் பலிகொடுத்த நாயகிக்கும் அவரது காதலனுக்குமான திருமணம் ஒரு புடவை பிரச்சனையால் நின்று போகிறது. அந்த விபத்திற்கு காரணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான நாயகன் பெரும் கோடீஸ்வரன்.
நாயகன் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள பார்வையாளராக வந்த போது விவரங்கள் தெரிந்து நாயகி குடியிருக்கும் காலனிக்கு சாதாரண நபர் என்று பொய் சொல்லி தங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக நாயகியின் வாழ்க்கைக்கு வசந்தத்தை ஏற்படுத்தி இறுதியில் நாயகியை திருமணம் செய்து கொள்கிறார்.
இதில் எந்த அதிரடி திருப்பங்களோ, வயிறு வலிக்கும் காமெடியோ, அதிரடி சண்டைக்காட்சியோ கிடையாது. படம் கதையின் போக்கிலேயே அமைதியாக செல்லும். நமக்கு தமிழில் இது போன்ற கதையோட்டத்தில் நிறைய படங்கள் பார்த்து இருக்கிறோம். தெலுகிற்கு இது புதுசு.
இந்த படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று வைஜெயந்தி மாலாவின் மகனை வைத்து முயற்சித்து பாக்கிறவனை எல்லாம் கொலையாய் கொன்று இருப்பார்கள்.
இதே போல் தான் ஹிந்தியில் வந்த மெய்ன் ஹூ நா படமும். ஃபாரா கானின் இயக்கத்தில் முதல் படம். ஷாருக்கான் ஹீரோ, சுஷ்மிதா சென் ஹீரோயின். 2004ல் இந்த படம் வெளிவந்தது.
அந்த காலகட்டத்தில் நான் ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரகுதாத்தா லெவலுக்கு ஒரு டப்பா ஹிந்தி பேசிக் கொண்டு இருப்பேன். இந்த சமயம் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மராத்தி பொது மேலாளர் ஒருவர் இருந்தார். அவரை வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சென்னைக்கு வந்திருந்தார்
அவரது குடும்பத்தினர் கோடை விடுமுறைக்காக சென்னை வந்திருந்தனர். அவருக்கு மூன்று வயது வந்த பெண்கள். அவரது பெண்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா சென்று வர அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். அவரால் வேலைப்பளு காரணமாக கிளம்ப முடியவில்லை.
உடனே ஒரு பயணத்தி்ட்டம் தயாரானது. நான் அவரது பெண்கள் மற்றும் மனைவியை இன்னோவா காரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் காட்டி அழைத்து வர வேண்டுமென. நான் என்பதால் தான் அனுப்பி வைத்தார். அந்த அளவுக்கு நல்லவன் நான் (நம்பித்தானே ஆகணும் வேற வழி)
இன்னோவாவில் டிவிடி பிளேயர் இருந்தது. கிளம்பும் முதல் நாள் நான் அந்த பெண்களை அழைத்துக் கொண்டு பர்மா பஜார் வந்து ஓரு லாட் ஹந்தி டிவிடிக்கள் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு பயணத்தை தொடங்கினோம்.
பயணத்தில் பெரும்பாலும் இந்த படம் மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது. படத்தை படத்தில் ஷாருக்கான் சைக்கிள் ரி்க்சாவில் போய் வில்லன்கள் போய்க் கொண்டிருக்கும் ஸ்கார்ப்பியோவை முந்தி வீழ்த்துவார். அவர்கள் படத்தை சவுத் பிலிம் போல் இருக்கிறது என்று கலாய்த்துக் கொண்டு இருப்பார்கள்.
கதை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். எனவே அது வேண்டாம். ஷாருக்கானின் சொந்த தயாரிப்பில் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் இந்த படம் தான். படம் தொடங்கியதிலிருந்து நம்மை படத்துடனே பயணிக்க வைத்து இருப்பார்கள். எனக்கு ரொம்ப பிடித்த இந்த படத்தை கூட தமிழில் எடுக்கிறேன் என்று அஜித்தின் மார்க்கெட்டை காலி பண்ணியிருப்பார்கள். அந்த படம் ஏகன்.
அந்த பயணத்தில் ஒரு கொசுறு, பயணம் முழுக்க இவர்களால் ஹிந்தி படம் மட்டுமே பார்த்து கடுப்பாகிய நான் சென்னை திரும்பும் போது எங்கள் ஊர் படம் பார்க்கிறீர்களா என்று கேட்டு மதுரையில் மதுர படத்தின் சிடி வாங்கி அவர்களை பார்க்க வைத்து பழிக்கு பழி வாங்கினேன் யாருகிட்ட.
ஆரூர் மூனா செந்தில்

மகுடம் சூட வாழ்த்துக்கள்... வேறென்ன வேலை...?
ReplyDeleteகுத்தகை தலைவருக்கு வாழ்த்துக்கள்...
ஏன் ஏன் இப்படி, இருந்தாலும் நீங்க தானே ஓகே.
Deleteபலர் புலம்பியதால்...! வேறு ஒன்றுமில்லை...! புரிந்து கொண்டால் நன்றி...
Deleteபல்லு இருக்கிறவன் பக்கோடா துன்றான், வேற என்ன சொல்ல, யாருகிட்டயேயும் போய் எனக்கு போடு எனக்கு போடுன்னு தொங்குறதில்லை. எனக்கு நானே ராஜா, இது தற்காலிக ஆசை தான். இப்பவே போரடிச்சிடுச்சி. சந்திப்பு செய்திகள் நிறைய பேரை போய் சேர வேண்டும் என்று தான் இப்போது இருக்கிறேன். சந்திப்புடன் மணத்தை விட்டே விலகிடுவேன். பிறகு மற்றவர்கள் என்ஜாய் பண்ண வேண்டியது தானே.
Deleteமதுர படத்தின் சிடி வாங்கி ///////
ReplyDeleteஇது எச்சரிக்கை இல்லை கட்டளை,கட்டளை கட்டளைன்னு தளபதி கத்தும் போது எல்லாம் பயந்து இருப்பாங்களே
பயப்பட வச்சோம்ல.
Deleteநேற்று இரவு மா மூவிஸ்ஸில் ஆனந்த் என்ற தெலுகு படம் பார்த்தேன் //////
ReplyDeleteமீண்டும் பார்த்தேன் என்று வரணும்....
நம்மூரில் வந்த பூவிழி வாசலிலே படம் தெலுகில் டப்பானது///////////
ரீ மேக் செய்யப்பட்டது....
அம்மா அப்பாவை விபத்தில் பலிகொடுத்த நாயகிக்கும் அவரது காதலனுக்குமான திருமணம் ஒரு புடவை பிரச்சனையால் நின்று போகிறது.....
நாயகன் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்த போது விவரங்கள் தெரிந்து நாயகி குடியிருக்கும் காலனிக்கு சாதாரண நபர் என்று பொய் சொல்லி தங்குகிறார். //////////////////////
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....பதிவு எழுதும்போது கொஞ்சமாவது தெளிவா இருக்காதேன்னு சொன்னேனே....கேட்டியா...இறங்க விடாதையா.....முண்டம்.....
சரி நீ எல்லாம் பிரபல பதிவர்...இனி இருக்குடி...என் அடுத்த பதிவரை பொறுக்கவும்...
கண்டிப்பா சண்டை வரும்...பார்ப்போம்....
அண்ணா சரிங்கண்ணா இப்ப திருத்திடுறேன் அண்ணா. தங்களின் ஆலோசனைக்கு நன்றிங்ணா.
Delete//// என் அடுத்த பதிவரை பொறுக்கவும்... ////
இந்த இடத்தில் என் அடுத்த பதிவு வரை பொறுக்கவும். என்று இருக்க வேண்டும். முதலில் நீ ஒழுங்கா பின்னூட்டம் போடுய்யா. பக்கி மாதிரியே இருக்கியே.
யோவ்வ்வ்வ்....எனக்கேவா....நம்ம பிரபா சொல்லுர மாதிரி வேண்டும் என்றே செய்யப்பட்டது....
ReplyDeleteMA...PHILOSOPHY..MA...
நுண் அரசியல்.....
ஆனா கண்டிப்பா கலாய்த்தல் பதிவு இருக்கு...அதுக்காக...கொடுக்க வேண்டியதை கட் பண்ணிராத....
யோவ் பெரிய மனுசா, குப்புற விழுந்துட்டு என்ன மீசைல மண்ணு ஒட்டலைன்னு சமாளிப்பு வேண்டிக் கிடக்கு. இதுல கூட றனவுக்கு பதிலா ரனா போட்டிருக்க. நீ ஒரு கபட நாடக வேஷதாரி. நுண் அரசியல் வேறயா, உனக்கு நாட்டு நடப்பு கூட தெரியாது போய்யா யோவ்.
Deleteமீண்டும்...அடிச்சி தெளிவாகிட்டல்ல...மச்சி,,,இதுதான் வேணும்....
ReplyDeleteஆனால் கலாய்த்தல் நிக்காது,....சிக்கிரம் மலை ஏறவும்....
யோவ்வ்வ்வ்வ்வ்வ் நெட் பாடா படுத்துதுயா...
மொய்...நான் கடுமையா வச்சிட்டேன்...நான் DD,றநி ....இல்லை...
சரியில்லை, சரியில்லை. இதுல கூட தப்பு இருக்கு. செல்லாது செல்லாது.
Deleteஎங்கயோ மச்சம்யா உனக்கு.. அப்போ ஸ்பானிஷ் பொண்ணு,, இப்போ மூணு பொண்ணுங்க... நல்லா இருந்தா சரி...
ReplyDeleteஉங்கள் விமர்சனத்திற்கு பிறகு "ஆனந்த்" படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.... !!! ஒரு நாள்
ReplyDeleteமெய்ன் ஹூ நா (நான் இருக்கேன்ல்ல) என்ற ஹிந்தி படம் என் நண்பனின் கட்டாயத்தில் பார்க்க நேர்ந்தது... முதல் சில நிமிடங்கள் சலிப்பு ஏற்பட்டாலும்..... ஷாருக்கான் கல்லூரியில் நுழைந்தவுடன் படம் அமர்களமாய் இருந்தது !!!.... இந்த படத்தின் தாக்கத்தில்... மறுபடியும் பாராக்கான், ஷாருக்கான் கூட்டணியில் அமைந்த "ஓம் சாந்தி ஓம்" பார்க்க நேரிட்டது !!!... காமெடி மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது !!!.... இரு படங்களிலும் ஒளிப்பதிவாளர் தமிழ்நாட்டை சேர்ந்த "மணிகண்டன்" மறந்த ஒளிப்பதிவாளர் "ஜீவா"வின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது...
ஆமாம் ஆமாம் நன்றி மணிகண்டன்
Deleteதெலுங்கு சினிமா இலக்கணம் மிக அருமை....
ReplyDeleteஆனாலும் உண்மை தானுங்கோ
Deleteசுறா சிடியும் வாங்கி கொடுத்து இருக்கலாம்.அப்ப சுறா வரலையோ..
ReplyDeleteஆமாங்க, சுறா சிடியை கொடுத்திருந்தேன்னா குடும்பத்தோட சூசைடு பண்ணியிருப்பாங்கோ
Delete