சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, August 20, 2013

பதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் அசத்தப் போகும் பதிவர்கள்

நம்ம நாய்நக்ஸ் நக்கீரன் அவர்கள் ஒரு ப்ளே ஏற்பாடு செய்து வைத்துள்ளார். அது என்னவென்றால் நக்கீரன் ஒரு கால்சென்டர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கிருந்து இன்சூரன்ஸ் போடுவதற்காக பல பதிவர்களிடம் போனில் மார்க்கெட்டிங் செய்கிறார். அவரிடம் மாட்டி மற்ற பதிவர்கள் என்னபாடு படுகிறார்கள் என்பதே ப்ளேவின் சாராம்சம்.


அடுத்ததாக ஸ்கூல் பையன் பாடுகிறார். ஐந்து நிமிடம் கொடுத்துள்ள இடத்தில் சினிமா பாடல்களை பாடுவதற்கு பதிலாக வித்தியாசமாக இருக்கட்டுமே என நம்ம குபீர் கவிஞரின் பாடலை எடுத்து மெட்டமைத்து பாடுகிறார். இரண்டு நிமிடத்தில் அரங்கில் குறட்டையொலி எழும்புகிறது.


யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்தும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அரங்கமே உறங்குகிறது. இதில் குறட்டையை மட்டும் எங்கிருந்து வருகிறது என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். அவசரஅவசரமாக பாடலை முடித்து மேடையை விட்டு இறங்கி விடுகிறார்.

கவிஞர் சங்கவி என்று மேடையேறுகிறார். முதல் கவிதையை வாசித்ததும் பின்னால் இருந்து அய்யோ என ஒரு குரல் கேட்கிறது. ஒரு பதிவர் மயங்கி விழுந்து இருக்கிறார். மருத்துவர் மயிலன் மயங்கியவரின் நிலையை கண்டறிந்து கவிதையை நிறுத்தச் சொல்கிறார். மேடை காலியாகிறது.


காலியான மேடையை புதிதாக உதயமாகி இருக்கும் மாகவிஞர் பட்டிக்ஸ்ஜி நிரப்புகிறார்.  கவிதை வெளி வருகிறது. அய்யய்யோ என பெருங்குரல் திரும்பிப் பார்த்தால் மயிலனே மயக்கமடைந்து கிடக்கிறார்.
---------------------------------


நாங்கள் ஏற்கனவே இந்த பதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் நாடகம் போடுவதாக முடிவு செய்து ஓரளவுக்கு நாடகத்தின் காட்சிகளை ரெடி செய்து வைத்திருக்கும் போது பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் நாடகத்திலிருந்து சில காட்சிகளை லேசாக எடுத்து விட நாடகத்தின் கதை லீக் அவுட் ஆகி விட்டதே என சக நண்பர்கள் என்னைப் போட்டு வெளு வெளுவென வெளுத்து விட்டனர்.

ரெண்டு நாளைக்கு கிர்ராகி திரிஞ்சேன். முக்கியமாக நொங்கியவர்கள் அஞ்சாசிங்கம் வீடு சுரேஷ் அப்புறம் கேஆர்பி செந்தில். நான் அப்படி செய்ததற்கு காரணம் இதனைப் பார்த்து மற்றவர்கள் இது போல் நாடகம் அல்லது நிகழ்ச்சிகள் செய்வார்கள் என்று யோசித்து தான். கடைசியில் அது எனக்கே திரும்பி ஆப்பு ஆக அமைந்து நானே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

அதனால் இது நடந்தால் எப்படியிருக்கும் என்று நான் தனியாக ரூம் போட்டு யோசிச்சி தான் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன். இதைப் பற்றி யாரும் என்னிடம் டிஸ்கஸ் பண்ணவில்லை என்று பாடிகார்டு முனீஸ்வரன் மீது சத்தியம் செய்கிறேன். யப்பா விடுங்கடா சாமீ.


ஆரூர் மூனா செந்தில்

26 comments:

 1. நக்க்ஸ் மார்கெட்டிங்லாம் பண்ண தேவையில்லை,நக்ஸ் பேசுறேன்னு சொன்னாலே போதும் அனைவரும் டரியல் ஆகிப்போவர்.

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ கரெக்ட்டு தான்.

   Delete
 2. //யப்பா விடுங்கடா சாமீ.//

  ம்,,,

  ReplyDelete
  Replies
  1. ஏதோ திட்டம் போடுறாப்ல தெரியுதே.

   Delete
  2. //யப்பா விடுங்கடா சாமீ.//

   என்ன பாஸ் ? பொதுவா சொல்றா மாதிரி அண்ணனை டா போட்டு பேசிட்டீங்க ?

   Delete
  3. இதுவேறயா பிரபா இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுய்யா

   Delete
 3. //இதைப் பற்றி யாரும் என்னிடம் டிஸ்கஸ் பண்ணவில்லை//

  இதுக்கு நக்ஸ் மாமாகிட்ட இருந்து எத்தணை போன் வருமோ.. சூதனமா இருங்க மச்சி...

  ReplyDelete
  Replies
  1. ஏன் மச்சி பயமுறுத்துற

   Delete
 4. தனியாக ரூம் போட்டு யோசிச்சி... இதற்கேவா...? ...ம்... கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. இல்லைனா என்னை ரூம் போடு அடிப்பாங்களே

   Delete
 5. //வித்தியாசமாக இருக்கட்டுமே என நம்ம குபீர் கவிஞரின் பாடலை //

  யாரந்த குபீர் கவிஞர்?

  ReplyDelete
  Replies
  1. கபீம் குபாம், அந்த கூபம் போன்ற பாசுரங்களை இயற்றிய மகான் அவர்

   Delete
 6. இதுல என் பாட்டையும், உன் டான்ஸையும் சேக்க மறந்துட்ட போல இருக்கே...! ஹா... ஹா...!

  ReplyDelete
  Replies
  1. நம்மளை பத்தி நாமளே புகழ்ந்துக்க கூடாதுண்ணே, நம்ம பெர்பார்மன்ஸ் பார்த்து உலகமே புகழனும்.

   Delete
 7. காலியான மேடையை புதிதாக உதயமாகி இருக்கும் மாகவிஞர் பட்டிக்ஸ்ஜி நிரப்புகிறார்.///

  நான் என்னவோ அவர் காலியான பாட்டிலில் சர்க்கு ஊற்றி நிரப்புவாரோ என்ரு நினைத்துவிட்டேன்//

  ReplyDelete
  Replies
  1. விட்டா அதையும் செய்வாரு

   Delete
 8. அன்பின் செந்தில் - பாவம் நாய் நக்ஸ் - எல்லோருமே அவரை மட்டுமே கலாய்க்கிறீங்களே - விட்டுடங்கபா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அய்யா அவர் எங்கள் செல்லம், கொஞ்சி கொஞ்சி கலாய்த்தால் தான் நன்றாக இருக்கும்.

   Delete
 9. மயங்கினவுங்க மயக்கத்தை தெளிய வைக்க மருத்துவ பதிவர் யாரேனும் வராங்களா? இல்லை கைவைத்தியம் தானா??

  ReplyDelete
  Replies
  1. மயிலன் மருத்துவராச்சே

   Delete
 10. இந்த வருடமும் போன வருடம் போல் ஏதாவது பிரச்சினை வருமா ?

  ReplyDelete
  Replies
  1. ஏன் இப்படி, இப்ப வரைக்கும் நல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.

   Delete
 11. கொஞ்ச பேர் என்ன காரணத்தை சொல்லி பிரச்சினையை கிளப்பலாம் என்று இல்லாத மூளையை கசக்கி கொண்டிருப்பதாக தகவல்

  ReplyDelete
  Replies
  1. இந்த வருடம் எந்த பிரச்சனைக்கும் காது கொடுத்து பதில் சொல்லி உணர்ச்சிவசப்படும் நிலையில் இல்லை.

   Delete
 12. யோவ்... கவிதை கேட்ட உங்களுக்கு மயக்கம் வருமா.....

  மகனே...
  அப்ப இருங்க அன்னிக்கு நான் 50 பக்க கவிதையை வாசிக்க போகிறேன்...

  நிகழ்ச்சியில சேர்த்துக்கங்க...

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா நான் அன்னிக்கி லீவு. விஷப்பரிட்சை நமக்கு ஆகாது சாமீ....

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...