சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, August 8, 2012

பஞ்சேந்திரியா - கோயம்பேட்டில் நடக்கும் பார்க்கிங் டிக்கெட் மோசடி

சில நாட்களுக்கு முன் காலையில் வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அம்பத்தூரிலிருந்து எஸ்டேட், பாடி வழியாக லூகாஸ் செல்லும் சாலை காலையிலும் மாலையிலும் எப்படி டிராபிக்கில் மாட்டி விழிபிதுங்கும் என்று சொல்ல தேவையில்லை. ஒரு முறை மாட்டியவர்களுக்கே நன்கு தெரியும்.

எஸ்டேட் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிக்னலில் நிற்கும் போது ஒரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் சர்ரென்று வந்து நின்றது. சிக்னல் விழுந்த அடுத்த வினாடி ஸ்கூட்டி பறந்தது. அந்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. எப்படி ஒரு பெண்மணி நம்மை முந்திச் செல்லலாம் என்று.

நானும் பைக்கை எடுத்துக் கொண்டு பின்னாடி விரைந்தேன். பிரிட்டானியா வரை துரத்தி சென்றேன். ம் ஹூம். வண்டியை நெருங்கக் கூட முடியவில்லை. பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் ஏற்பட்ட டிராபிக்கில் ஸ்கூட்டி நின்றது. நானும் நின்றேன். ஒரு நிமிடம் தான் கிடைத்த கேப்புக்குள் ஸ்கூட்டி சர் சர்ரென்று நுழைந்து போய்க் கொண்டே இருந்தது.

நானும் விடாமல் பின்னாடி துரத்தி சென்றேன். நான் லூகாஸ்ஸில் நேரே செல்ல வேண்டும். ஆனால் ஸ்கூட்டி வலப்புறம் அண்ணாநகர் நோக்கி திரும்பியது. நான் எப்படியாவது அவரை முந்திச் செல்ல வேண்டும் என்று எண்ணி நான் சாலையிலிருந்து பிரியும் இடம் வரை நெருங்க முடியாததால் ஸ்கூட்டியை முந்திச் சென்ற பின்பே மீண்டும் வேலைக்கு செல்வது என்று முடிவு செய்து வலப்புறம் வண்டியை திருப்பினேன்.

கொஞ்ச தூரத்திற்கு டிராபிக் இல்லாததால் வேகமாக சென்று ஸ்கூட்டியை அண்ணா நகர் 6வது மெயின் ரோட்டில் முந்தினேன். ஸ்கூட்டியில் வந்த ஆண்ட்டியை வென்று விட்ட திருப்தி. பிறகு அங்கிருந்து திருமங்கலம் சாலை வழியாக சென்று நாதமுனியில் திரும்பி வழக்கமான சாலையை அடைந்து வேலைக்கு சென்றேன்.

அன்று முழுவதும் திமிருடன் தான் திரிந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு நான் செய்தது தப்போ என்று மனம் சிந்திக்க ஆரம்பித்தது. பிறகு தான் என்ன ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தோம் என்று புரிந்தது. அதன் பிறகு இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். பாடியில் மற்றுமொரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் என்னை முந்தி சென்றது. அடுத்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. என் வண்டியை முடுக்கினேன். அய்யோ யாராவது சொல்லுங்களேன், நான் நல்லவனா? கெட்டவனா?

-------------------------------

தமிழகத்தை நெருங்குகிறது தண்ணீர் பஞ்சம்


-----------------------------------------

பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு ஏதாவது வேலையாக சென்றால் ஊழியர்கள் அலட்சியப்படுத்துவது தாமதப்படுத்துவது தமிழகமெங்கும் சகஜமாக நடப்பதொன்றாக ஆகிவிட்டது. நமக்கும் பழகிப் போய் அது போல் அவர்கள் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்றாகி விட்டது.

இந்த மாதம் என் சம்பளத்தில் D.A விடுபட்டு போய்விட்டது. அதனை சரிசெய்து பணத்தை வாங்க வேண்டுமென்றால் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸீல் உள்ள வேஜஸ் செக்சனுக்கு சென்று அதற்கென்று உள்ள அதிகாரியைப் பார்த்து தான் செய்ய வேண்டும். சென்ற வாரம் வியாழக்கிழமை சென்றால் அந்த அதிகாரி லீவு என்றும் அடுத்த வாரம் வாருங்கள் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் வரவில்லையென்றால் அத்துடன் அந்த பணிகள் நின்று விடுமா என்று கடுப்படித்துக் கொண்டே வந்தேன். ஆனால் பதில் தான் கிடைக்கவி்ல்லை. நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் சென்றேன். அந்த அதிகாரி அதுவரை வேலைக்கு வரவில்லை.

நான் சென்று அரைமணிநேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். வந்தவுடன் கேட்டால் இப்பத்தானே வந்திருக்கிறேன் என்று கடுப்படித்தார். பிறகு அரைமணி நேரம் கழித்து மீண்டும் சென்று என் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள பிழையை சொன்னேன். சம்பள பில்லை வாங்கிப் பார்த்தவர் அப்படி உக்காரு கூப்பிடுறேன் என்றார்.

மணி 12.30 ஆகியது. என்னை அழைத்து கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை. மெக்கானிக் வரவேண்டும். நீ போயிட்டு லஞ்ச் டைமுக்கு அப்பறம் வா என்று சொன்னார். நாள் தள்ளிக் கொண்டு போகிறதே என்று கடுப்பாகி நான் உட்கார்ந்து முடித்து கொண்டு தான் போவேன் என்றேன். பிறகு முனகிக் கொண்டே கம்ப்யூட்டரை ஆன் செய்து செய்து கொடுத்தார்.

அடப்பாவி்ங்களா நானும் ரயில்வே ஊழியன், அவனும் ரயில்வே ஊழியன். என்னைப் போல் தான் சம்பளம் வாங்குகிறான். ஆனால் இந்த HR மற்றும் அக்கவுண்டஸ் ஊழியர்கள் மட்டும் எந்த ஏரியாவில் வேலை செய்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் போல. இவனுங்களை திருத்தவே முடியாதா?

---------------------------------

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் பதிவர்கள்


-----------------------------------------

இன்று என் அப்பா அவசர வேலையாக சென்னை வந்திருந்தார். வந்தவர் அவரது வேலைக்காக வெளியில் சென்று விட்டு மதியம் போன் செய்து வேலை முடிந்து விட்டது. எனக்கு இன்றிரவு திருவாரூர் செல்வதற்கு டிக்கெட் எடுத்து விடு என்றார். கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

நுழைவாயிலில் ஒருவர் அதிகாரமாக நிப்பாட்டி 5ரூபாய் கொடு என்று சீட்டு கொடுத்தார். எப்பொழுதுமே கேள்வி கேட்காமல் காசை எடுத்து கொடுக்கும் நான் இன்று யதார்த்தமாக சீட்டைப் பார்த்தேன். அதில் எந்த இடத்திலும் இரு சக்கர வாகனத்திற்கு என்று அச்சிடப்படவில்லை. கார்களுக்கு மட்டும் என்று போட்டிருந்தது.

அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் இது தான் டிக்கெட்டு காசை எடு என்றார். ஐயா நான் பணம் கொடுக்க தயங்கவில்லை. பைக்கிற்குரிய சீட்டை கொடுத்து விட்டு காசை பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். சிறிது நேரம் என்னை முறைத்துப் பார்த்தவர் சத்தம் போடாமல் சென்றார். அப்பொழுது தான் புரிந்தது. இத்தனை ஆண்டுகளாக பல நூறு முறை அவர்களிடம் நான் காசை கொடுத்து ஏமாந்திருக்கிறேன் என்று.

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். யாரும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்ல நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. யாராவது உங்களிடம் கேட்டால் டிக்கெட்டை கேளுங்கள். அதில் இருசக்கர வாகனத்திற்குரிய சீட்டு என்று அச்சிடப்பட்டு இருக்காது.

அதனை அவர்களிடம் கூறினால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டாயிரம் பைக்குகள் உள்ளே சென்று திரும்புகின்றன. ஒரு பைக்கிற்கு 5ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தினம் பத்தாயிரம் வீதம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். உஷார்.

ஆரூர் மூனா செந்தில்


Monday, August 6, 2012

விபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம்.

நேற்று ஐசிஎப் அருகில் வண்டியில் போய் கொண்டு இருக்கும் போது ஸ்கூட்டி ஒன்று விர்ர்ரென்று சென்றது. சற்று தூரத்தில் சென்று விபத்துக்குள்ளானது அந்த வண்டி. அவசர அவசரமாக சென்று பார்த்தால் ஓட்டிச் சென்றவன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். கை கால்களில் நல்ல அடி.

எல்லோரும் அவனை திட்டி விட்டு சென்றார்கள். நான் அங்கேயே இருந்து அவன் அப்பாவின் போன் நம்பரை வாங்கி போன் செய்து விவரம் சொல்லி விட்டு நன்றாக திட்டியும் விட்டு வந்தேன். வரும் வழியில் எனக்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது.

சிறுவயதில் நான் புதிதாக டூவீலரை ஓட்டக் கற்றுக் கொண்டது, அதன் பிறகு எந்த டூவீலர் வீட்டிற்கு வந்தாலும் எடுத்துக் கொண்டு ரெண்டு சுற்று சுற்றிய பிறகு தான் தாகம் அடங்கும். வண்டி ஓட்டும் வேகம் சரியான வயதிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். நானும் அதனை தெரிந்து கொண்டேன் நான்கைந்து விபத்துகளை சந்தித்த பிறகு.

முதல் முதலாக என் அப்பா வாங்கியது TVS 50 வண்டி. திருவாரூருக்குள் அந்த வண்டியை வைத்துக் கொண்டு சுற்றாத தெருவே கிடையாது. அப்பொழுது நாங்கள் திருவாரூர், தியாகராஜ நகரில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்தோம். என் அம்மா ஒரு உதவிக்காக ரேவதி அக்காவை வடக்கு வீதியிலிருந்து அழைத்து வர சொல்லியிருந்தார்கள். நான் TVS 50யை அப்பாவுக்கு தெரியாமல் எடுத்துக் சென்று ரேவதி அக்காவை அமர வைத்து படுவேகமாக துர்காலயா ரோட்டில் வந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று எதிரில் லாரி வந்ததும் உடனே பிரேக்கை அழுத்திப் பிடித்தேன். அடுத்த வினாடி வண்டி நிலை தடுமாறி நான் கீழே வண்டி என் மேலே கிடந்தது. ரேவதி அக்காவை காணவில்லை. எழுந்து பார்த்தால் சாலையோரம் இருந்த வேலியின் மீது விழுந்து கிடந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் காயத்துடன் வீட்டிற்கு சென்றோம். பிறகென்ன வீட்டில் எங்க அப்பா கட்டி வைத்து சோத்துக்கத்தாழை செடியாலேயே அடித்து என் தோலை உரித்து விட்டார்.

அடுத்ததாக நான் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கம்பெனிக்கு சொந்தமான ஸ்கூட்டர் ஒன்று திருவாரூரில் உள்ள சர்வீஸ் சென்டரில் விடப்பட்டிருந்தது. வண்டி ரெடியானதும் நான் சென்று வண்டியை எடுத்துக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்.

ஆலத்தம்பாடி என்ற ஊரின் அருகே வந்த போது வண்டி ஆடியது. சரி வண்டி பஞ்சாகி கொண்டிருக்கிறது போல. வேகமாக சென்றால் திருத்துறைப்பூண்டிக்கு சென்று விடலாம் என்று வண்டியை முடுக்கினேன். சிறிது தூரம் சென்ற பிறகு தடாலென்று சத்தம் மட்டும் கேட்டது. நான் ரோட்டின் எதிர்ப்புறம் கிடந்தேன். வண்டியைப் பார்த்தால் முன் சக்கரத்தை காணவில்லை.

தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் ஒடி வந்தனர். என்னை தூக்கி விட்டு வயலின் நடுவில் கிடந்த சக்கரத்தை கொண்டு வந்து கொடுத்தனர். எனக்கு கை முறிந்திருந்தது. வண்டியை அங்கேயே சைடு லாக் செய்து விட்டு வழியில் வந்த வண்டியில் ஏறி அலுவலகம் சென்றேன்.

பிறகு என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் சேர்ந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மருத்துமனைக்கு என்னை அழைத்து சென்றனர். எனக்கு எக்ஸ்ரே எடுத்து முறிந்த இடத்தை அறிந்து கட்டு கட்டி விட்டார் ஒரு நர்ஸ். மற்றவர்கள் அலுவலகம் சென்று விட சந்துரு மட்டும் என்னுடன் இருந்தான்.

சிறிது நேரத்தில் அவனை காணவில்லை. கைவலி அதிகமாகவே நர்ஸை அழைத்தேன். அவரையும் காணவில்லை. கத்தி கத்திப் பார்த்து தூங்கி விட்டேன். நடுஇரவில் இயற்கை உபாதைக்காக எழுந்து பார்த்தால் கட்டிலின் கீழே தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பி எங்கேடா போன என்றேன். அவன் வெட்கப்பட்டுக் கொண்டே நர்ஸை காதல் பார்வை விட்டு கவிழ்த்த கதையை சொன்னான். கருமம் என்று திட்டினேன். சில மாதங்களுக்கு பிறகு சந்துரு நர்ஸை திருமணம் செய்து கொண்டது தனிக்கதை.

அதற்கடுத்தாக சென்னைக்கு வந்து விட்டிருந்தேன். என் அலுவலகத்திலிருந்து புதிதாக என் கம்பெனிக்காக தாம்பரத்தில் எடுக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்காக சில பொருட்களை எடுத்துக் கொண்டு என்னுடன் சக நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.

ஆலந்தூர் ஆசர்கானாவை அடுத்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வேகமாக சென்று கொண்டிருந்த நான் வண்டியை திருப்பினேன். அங்கே ரோட்டில் கொட்டியிருந்த மணலில் சறுக்கி தேய்ந்து கொண்டே போய் விழுந்தோம். எழுந்து பார்த்தால் நெஞ்சு முழுக்க சிராய்ப்பு. தலை மற்றும் இடதுகையில் சிராய்ப்பு. உடல்நலம் சரியாக பதினைந்து நாட்கள் ஆனது. அதன் பிறகு படிப்படியாக வேகமாக செல்வது 80kmphலிருந்து 60kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

பிறகு கேரளாவில் ஒரு கட்டுமானத்திற்காக பணிபுரிந்து கொண்டிருந்த போது பஜாஜ்M80யில் சென்று கொடிருந்தேன். எதிரில் படுவேகமாக வந்த நாதேரி ஒருத்தன் சட்டென்று பிரேக் பிடிக்க முயன்று முடியாமல் சாதுவாக வந்து கொண்டிருந்த என் மீது மோதி விட்டான். இடது கையில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு வேகமாக செல்வது 60kmphலிருந்து 40kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

எல்லோருக்கும் அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு வந்து விட்டால் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளலாம். கண்டிப்பாக அதிக வேகம் என்பது விபத்து நடப்பதற்கான சாத்தியக்கூறை அதிகமாக்குகிறது. அதுவும் சரக்கடித்து விட்டால் அது இரட்டிப்பாகிறது.

அடுத்ததாக ஒரு விபத்து ஏற்பட்டால் வண்டியின் வேகத்தை நான் 10kmph ஆக குறைக்க வாய்ப்பிருப்பதால் இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது என்று கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 30, 2012

பஞ்சேந்திரியா - ககன் நரங் உடன் செத்தக்கிளி

லண்டன் ஒலிம்பிக் 2012ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இறுதிப் போட்டி துவங்கியதிலிருந்தே முன்னணியில் இருந்த ககன் 7வது சுற்றில் சட்டென்று 4ம் இடத்திற்கு இறங்கிப் போய் அதிர்ச்சியளித்தார்.

அடுத்த சுற்றில் சுதாரித்துக் கொண்டு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்து இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்துள்ளார். சாமானியனாக நடக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாட்டில் ஏகப்பட்ட கோபம் இருந்தாலும் இந்த வெண்கலப் பதக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ககன் நரங்கிற்கு தோத்தவன்டா வலைப்பதிவின் வாழ்த்துக்கள். இந்தியாவின் பதக்க வேட்டை தொடரவும் வாழ்த்துகிறது.

--------------------------------

ரயில்வேயில் சக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பது பலப்பல புதிய தகவல்களை சுவாரஸ்யத்துடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் 55வயதை கடந்தவர்கள் ஆனால் கடந்த 35 வருடங்களாக ஒரே குழுவாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் வாடா போடா என்று தான் அழைத்துப் பழகி கலாய்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் ராஜேந்திரன். வயது 59. மற்றவர்கள் அவரை செத்தக்கிளி, செத்தக்கிளி என்று கலாய்ப்பார்கள் (காரணம் கூறவும் வேண்டுமோ). நேற்று பயங்கர கடுப்பாகி ஒரு கதையை எடுத்து விட்டார் பாருங்கள் நான் சிரித்து முடிக்க மட்டும் கால் மணிநேரமாகியிருக்கிறது.

கதை இதுதான். நம்ம கதாநாயகர் ராஜேந்திரன், சில வருடங்களுக்கு முன்பாக ராஜமுந்திரியின் அருகில் இருக்கும் பெத்தாபுரம் சென்றாராம். பெத்தாபுரம் என்ற ஊர் எதற்கு புகழ்பெற்றது என்பது வாலிப வயோதிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நம்ம ஹீரோ ஒரு விடுதிக்கு சென்று ஒனரம்மாவிடம் (ஹீரோயின்) கில்மாவிற்கு புகழ்பெற்ற சரசம்மா (துணை ஹீரோயின்) வேண்டும் என்று கேட்டாராம்.

அந்த விடுதி என்பது முழு அறையாக இருக்காது. ஒரு பெரிய வராண்டாவில் தட்டி வைத்து சிறுசிறு தடுப்புகளாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.சரசம்மாவை ஒரு தடுப்புக்குள் நம்ம ஹீரோ அழைத்துச் சென்று கில்மாவை ஆரம்பித்தாராம். சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டிருக்கிறது. பயந்து போன ஓனரம்மா என்ன ஏது என்று விசாரிக்க தடுப்புக்குள் நுழைந்து 'ஏன் சத்தம் போடுகிறாய்' என்று கேட்டாராம்.

சரசம்மா 'இவர் பயங்கர அப்பாடக்கரா இருக்கிறார் என்னால் சமாளிக்க முடியாது' என்றாராம். அதற்கு சிரித்த ஓனரம்மா அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ. அந்த காலத்தில் பெரிய கில்மாவான என்னை சமாளி என்று சவால் விட்டு களத்தில் இறங்கினாராம். மீண்டும் சிறிது நேரத்தில் 'ஆ' 'ஐயோ' 'அம்மா' என்று அலறல் ஒலி வெளியில் கேட்டதாம். எல்லாம் முடிந்ததும் வெளியில் வந்த ஹீரோ ஓனரம்மாவிடம் காசை கொடுத்தாராம். ஓனரம்மா வெட்கப்பட்டுக் கொண்டே 'உனக்கு மட்டும் ஃப்ரீ' என்றாராம்.

கதையை சொல்லிவிட்டு அடுத்து ஒரு பஞ்ச் டயலாக் அடித்தார். என்ன தெரியுமா "என்னை கலாயக்காதீங்கடா என் கிளி இப்பக்கூட கொத்தும் தெரியுமா"

----------------------------------

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பரில் நடைபெறுகிறது. அதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் நாளை. எனவே B.Sc (Physics), ITI மற்றும் அப்ரெண்டிஸ் முடித்தவர்கள் நாளை மாலை 05.30க்குள் RRB அலுவலகத்தில் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். நேரமில்லை என்று நினைப்பவர்கள் நேரடியாக RRB, Chemmai அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விடலாம். அலுவலகம் அமைந்துள்ள இடம் எழும்பூரில் எத்திராஜ் காலேஜின் பின்புறம்.

மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள். நாளை கடைசி.

-----------------------------------

சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு DEEE மற்றும் BE(EEE) முடித்தவர்களுக்கான இன்டர்வியூ சென்னையில் வரும் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

------------------------------------

இனிதே பிறந்த நாள் காணும் பிறந்ததிலிருந்து இன்று வரை யூத்தாக மட்டுமே இருக்கும் எங்கள் அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள் பல்லாண்டு காலம் பூத்துக்குலுங்கும் இளமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அதே போல் அதே நாள் பிறந்த நாள் காணும் வாழும் வரலாறு, கழக போர்வாள், புதுக்கோட்டையின் சங்கம், எங்கள் தங்கம் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு புதுகை அப்துல்லா பாசறையின் சார்பாக பிறந்தநாள் வாழத்துக்கள்.

ஆரூர் மூனா செந்தில்


Wednesday, July 25, 2012

பஞ்சேந்திரியா - வெறும் காலு வைக்கக் காலு

சில நாட்களுக்கு முன்பாக என் நண்பனின் தாத்தாவை சந்திக்க நேர்ந்தது. அவர் வெள்ளைக்காரன் காலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தவர். நமது அறிவு குறித்த பேச்சு வந்த போது அவர் சொன்ன விஷயம் என்னை ரொம்பவே கவர்ந்தது. அது என்னவென்றால் சுதந்திரத்திற்கு முன்பு படிக்காதவர்களையும் ராணுவத்தில் சேர்த்தார்களாம். அவர்களை மார்ச்ஃபாஸ்ட் செய்வதற்கு லெப்ட் ரைட்டு என்று சொன்னால் நம்மவர்களுக்கு தெரியாதாம்.

அவர்களுக்கு புரிவ வைப்பதற்காக ரொம்ப நாள் தலையைப்பிச்சிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் ஒரு நாள் திடீரென்று ஒரு யோசனையை கண்டுபிடித்தானாம். அது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அது என்னவெனில் அனைவரின் இடது காலிலும் சிறிது வைக்கோலை கட்டிவிட்டானாம். பிறகு லெப்ட்டு ரைட்டு என்பதற்கு பதிலாக அவன் என்ன கூறினானாம் தெரியுமா?

வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.

எப்பூடி.

-------------------------------

இந்த ஆண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு


-------------------------------------

நேற்று ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்லும் போது யதேச்சையாக என் அப்ரெண்டிஸ் காலத்து தோழியை சந்திக் நேர்ந்தது. அதிர்ந்து விட்டேன். படிக்கும் போது சிக்கென்று இருந்த காலேஜ் குயின் இப்போது என்னை விட குண்டாக பீப்பாய் போன்று இருக்கிறாள். எனக்கும் அது தான் புரியமாட்டேன் என்கிறது.

படிக்கும் போது அவள் முகத்தில் இருந்த ஒரு பருவைப் போற்றி செய்யுள் இயற்றிய கவிஞர்களெல்லாம் இப்போது பார்த்தால் என்ன நினைப்பார்கள். அவளை காதலிக்க நடந்த போட்டியில் ஏழெட்டு பேர் இருந்தார்கள். வெட்டு குத்து வரை போயும் அவள் யாரையும் காதலிக்கவில்லை.

வீட்டில் இருந்தவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையையே திருமணம் செய்திருக்கிறாள். அதன் பிறகு ரெண்டு பிள்ளைகளை பெற்றுக் கொண்டு உடல் நலம் பற்றிய சிரத்தையை விட்டு இப்படியாகி விட்டிருக்கிறாள். பெண்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இரண்டு விதமாக அமைகிறது.

பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள். அது போலவே இளம்வயதில் மிகச்சுமாராக ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெருகேறி ஏரியா போற்றும் ஆண்ட்டியாகி விடுகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். என்ன உலகமடா இது.

--------------------------------------

நிகரில்லா தமிழினத் தலைவன்


--------------------------------------

முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்றம் செய்து விட்டதாகவே மனதை உறுத்தும். இப்பொழுது வாரம் ஒருமுறை பதிவெழுதவே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது. தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிலர் மிக முன்யோசனையாக பத்து இருபது பதிவுகளை முன்பே தட்டச்சு செய்து வைத்து விட்டு தினம் வெளியிட்டு அசத்துகிறார்கள். நமக்கு எல்லாம் ஒரு பதிவை தட்டி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். பதிவெழுதும் புதிதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தினமும் பதிவெழுதுவது பிடிக்கிறது. பிறகு மோகம் குறைந்து வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் எழுத முடிகிறது. சத்தியமா டபுள் மீனிங்ல பேசலண்ணா.

ஆரூர் மூனா செந்தில்

Sunday, July 22, 2012

கத்தார் மற்றும் சி்ங்கப்பூரில் டிப்ளமோ மற்றும் ITI முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

கத்தார் நாட்டில் உள்ள கம்பெனிக்கு ஆட்கள் தேவை. கீழ்கண்ட பணியிடங்களுக்கு வரும் 25ம் தேதி சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது பயோடேட்டாவை அனுப்பவும் அல்லது 8883072993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

HVAC Engineer - DME or BE Mech

AC Technician - ITI (AC Technician)

Chiller Plant Operator

Electrical Engineer - DEEE

Electrical Technician - ITI Electrician

Instrumental Engineer - Diploma in Instrumentation

Instrumental Technician - ITI Instrumentation

Mechanical Technician - DME or ITI MMV

Plumber - ITI Plumber

------------------------

சிங்கப்பூரில் உள்ள கம்பெனிக்கு ஆட்கள் தேவை. கீழ்கண்ட பணியிடங்களுக்கு வரும் 24ம் தேதி சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது பயோடேட்டாவை அனுப்பவும் அல்லது 8883072993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

General Worker

Shipyard u turn Spray Painter

Sandplaster


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, July 17, 2012

பஞ்சேந்திரியா - பில்லா 2 தோல்விக்காக பார்ட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்

பில்லா 2 டிரைலரிலேயே என்னைக் கவரவில்லை. அதனால் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று தோணவில்லை. படம் வெளிவந்த பிறகு தான் தெரிகிறது. அது கடவுளின் அனுக்கிரகம் என்று. ஆத்தா மகமாயி என் மனச மாத்தி பாக்க விடாம பண்ணிட்டா. பாக்க விடாம பண்ண ஆத்தாவுக்கு தீமிதிக்கலாம்னு இருக்கேன்.

பயபுள்ள என்னமா கொன்னுருக்காய்ங்க. பாவம் முதல் காட்சிக்கு போன நண்பன் ஒருவன் இந்த படம் வந்த காலத்துல நானெல்லாம் உயிரோட இருக்கனுமான்னு புலம்பிக்கிட்டு இருக்கான். படம் ரீலீசான அன்னைக்கு சிறப்பு காட்சி 9 மணிக்குன்னு சொன்னானுங்க, அது ஹவுஸ்புல்லானதும், 7.30 மணிக்காட்சி தான் முதல் காட்சின்னு சொன்னானுங்க. அதுவும் புல்லானதும் காலையில 4.00மணிக்காட்சி உண்டுன்னு சொன்னானுங்க பாருங்க. முதல்ல அவனத்தான் குண்டு வச்சிக் கொல்லணும்னு ஒரு கும்பல் இங்க தேடிக்கிட்டு இருக்கு.

பில்லா 2 படத்தின் முன்பதிவு செய்திகளை பார்த்து விஜய் ரசிகனான நம்ம நண்பர் ஒருவர் காண்டாகி கடுப்பில் இருந்தார். திங்கள்கிழமையன்று அம்பத்தூர் ராக்கி தியேட்டரும் முருகன் தியேட்டரும் காலியாக இருப்பதை பார்த்து நண்பர் சரக்கடித்து கொண்டாடினார். நமக்கும் கட்டிங் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

-----------------------------------

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

---------------------------------------------

நான் பெரிய அளவில் எழுதும் பதிவர் எல்லாம் கிடையாது. இலக்கியத்தரத்துடன் எழுதவும் வராது. நான் எழுதுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் என் நண்பர்களுடன் உரையாடுவது போல. என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் எழுத்தின் மூலம் அவ்வளவு தான். ஆனாலும் சில சமயம் நமக்கு கிடைக்கும் பாராட்டுகள் நம்மை சற்று உயரத்தூக்கிச் செல்லும் பாருங்கள். அந்த சுகத்துக்காகவே இன்னும் நன்றாக எழுதலாம் என்று தோணும்.

நேற்று வேலையில் பரபரப்பாக இருக்கும் போது மதுரையிலிருந்து சிவக்குமார் என்பவர் போன் செய்தார். தோத்தவன்டா வலைத்தளத்தின் வாசகர் என்றும் என்னுடன் பேச வேண்டும் என்றும் கூறினார். நான் தயங்கிக் கொண்டே 12 மணிக்கு பிறகு பேச முடியுமா, நான் பணியில் இருக்கிறேன் என்றும் கேட்டேன். சரி என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.

மீண்டும் சரியாக 12.10க்கு போன் செய்தார். நமது தோத்தவன்டா வலைத்தளத்தை ஆரம்பகாலங்களில் இருந்து வாசிப்பதாகவும், இன்னும் பல பாராட்டுகளை சொல்லி விட்டு என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் சென்னை வந்தால் சந்திக்க முடியுமா என்றும் கேட்டார். வந்து போன் செய்யுங்கள், நான் வந்து பார்க்கிறேன் என்றும் சொன்னேன். ஆனால் அதற்கு அவர் நான் தான் உங்களை சந்திக்க விரும்புகிறேன், அதனால் நான் வந்து பார்ப்பது தான் முறை என்று சொன்னார். நன்றி சிவக்குமார். இது போன்று எப்பவாவது கிடைக்கும் பாராட்டுகள் தான் என்னை சந்தோஷப்படுத்துகிறது.

-------------------------------------


ஒரிஜினல் தமிழினத் தலைவன்


-------------------------------------------

எனக்கு ஒரு பதிவுலக நண்பர் இருக்கிறார். என்ஊர்காரரோ அல்லது உறவினரோ கிடையாது. நாங்கள் தினமும் பேசிக் கொள்வதும் கிடையாது. என் வலைப்பக்கத்தில் அவர் வழக்கமாக பின்னூட்டமிடுவது கிடையாது. நான் அவர் வலைப்பக்கத்துக்கு செல்வதே கிடையாது. ஆனால் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். எப்பொழுது நேரில் பார்த்தாலும் அன்பு உடனடியாக பூக்கும் இளகிய மனமுடையவர் அவர்.

நான் நேரில் வருகிறேன் என்றால் அதற்காக கருவாடு சமைத்து எடுத்து வந்து ஊட்டி விடும் வெள்ளந்தி மனதுக்காரர் அவர். மாதம் ஒரு பதிவு மட்டுமே போடும் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தால் அனைத்து பதிவர்களும் சகலநாடியும் அடங்கிப் போய் பேசுவார்கள்.

இத்தனை அருமைக்கும் பெருமைக்கும் உரிய நண்பர் யார் தெரியுமா?

அண்ணன் யார் தெரியுமா?

அவர் தான்

அவர் தான் நாய் நக்ஸ் நக்கீரன்.


ஆரூர் மூனா செந்தில்


Friday, July 13, 2012

பில்லா 2 - இது விமர்சனமல்ல


பில்லா 2 காலையில் 04.00 மணியிலிருந்தே காட்சிகள் அம்பத்தூர் ராக்கி மற்றும் முருகன் தியேட்டரில் ஆரம்பமாகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை. படத்தின் டிரைலர் என்னை கவரவேயில்லை. படம் பார்க்கும் ஆவலை தூண்டவில்லை.

அதனால் அறிவிப்பது என்னவென்றால் கண்டிப்பாக தோத்தவன்டா வலைப்பூவில் பில்லா 2 விமர்சனம் வரும் என்று எதிர்பார்ப்போரே மன்னிக்கவும். ரசிகர்களுக்கு வேண்டுமானால் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் எனக்கு எதிர்பார்ப்பை தூண்ட தவறியதால் இந்த படத்திற்கு செல்லவில்லை. மற்றவர்களின் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் வாரஇறுதியில் ஏதேனும் மல்ட்டிப்ளக்ஸ் சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன். இல்லையென்றால் விடுஜுட் தான்.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...