சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 31, 2013

இத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்

ஒரு மாதத்திற்கு முன்பு மா டிவியில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பார்க்க நேர்ந்தது. ஒரு சில பாடல் பிடித்திருந்ததால் படம் வெளியாகும் தினத்தன்றே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.


இன்று பார்க்கலாம் என்று முடிவு செய்த போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த நண்பன் சத்யநாராயணா நினைவுக்கு வந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு அபிராமி மாலுக்கு போனேன்.

ரீக்கிளைனர் டிக்கெட் எடுத்து அமர்ந்தால் இரண்டு பக்கமும் காதல் ஜோடிகள், எல்லாம் தெலுகில் மாட்லாடிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குலாவிக் கொண்டு இருந்தார்கள். நமக்குத்தான் வயிற்றில் கொஞ்சம் சுர்ரென எரிந்தது.

தெலுகு படத்தில் மகேஷ் பாபு, என்டிஆர், அல்லு அர்ஜூன் வகையறா ஹீரோக்களின் படங்களுக்கென ஒரு பார்முலா இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு மாபியா கும்பல் தலைவன் இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருப்பான். முக்கியமாக தெலுகை கடித்து கடித்து பேசுவான்.


ஹீரோ அவனை வீழ்த்தி ஜெயிப்பார். இது தான் கதை. பேஸ் கதை. அதற்கு சிங்காரிப்பது மட்டும் படத்திற்கு படம் மாறுபடும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இந்த படத்தின் ஸ்பெஷல் முழுக்க முழுக்க ப்ரான்ஸிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தரம்மாயிலத்தோ என்றால் இரண்டு பெண்களுடன் என்று அர்த்தம்.

படத்தின் கதை. கதாநாயகி காத்ரினா தெரசா (அன்னை தெரசாவுக்கு வந்த சோதனை) மத்திய அமைச்சரின் மகள். மேற்படிப்புக்காக பாரீஸ் வருகிறார். அவர் தங்கியிருக்கும் வீட்டில் ஏற்கனவே தங்கியிருந்த அமலா பாலின் டைரி கிடைக்கிறது. அதில் அல்லு அர்ஜூன் உடனான காதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.


காதல் கல்யாணத்தில் போய் நிற்கிறது. ஒரு நாள் காத்ரீனா அல்லுவை மட்டும் சந்திக்கிறார். கல்யாணம் என்னவானது என்று டைரியில் எழுதப்பட வில்லை. அல்லுவிடம் விவரங்கள் கேட்கிறார்.

ப்ளாஷ்பேக் தொடர்கிறது. கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்பு வில்லன்களால் அல்லு கண் முன்பு அமலா பால் குத்தப்படுகிறார். அதற்கு காரணமானவர்களை அல்லு கொன்று விடுகிறார். காரணம் ஒரு நாட்டின் தூதரை வில்லன் கொல்லும் போது எதார்த்தமாக அமலா பால் வீடியோ எடுத்தது தான் என்று தெரிய வருகிறது.

அல்லு மேல் காத்ரினா காதல் வயப்படுகிறார். அல்லுவோ மெயின் வில்லனை தேடி அலைகிறார். இதற்கிடையில் ஒரு நாள் அமலா பாலை உயிருடன் காத்ரினா சந்திக்கிறார். பின்பு என்னவானது என்பது தான் படத்தின் கதை.


ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அல்லு அர்ஜூனுக்கு பெயர் போடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் கொலையை கூட தலைவர் ஸ்டைலாகத்தான் செய்கிறார். சண்டை காட்சிகள் முதல் பாடல் காட்சிகள் வரை ஸ்டைல் மன்னன் தான் அல்லு.

அமலா பால் அய்யர் வீட்டு பொண்ணாக பாவாடை தாவணியுடன் பாரீஸில் வந்து இறங்குகிறார். சில காட்சிகளில் முடி ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணி பக்கா நவநாகரீக பெண்ணாகி விடுகிறார். படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு துணையாக வில்லனை பழி வாங்குகிறார்.

காத்ரீனா தெரசா அமைச்சரின் மகளாக பல பெட்டிகள் டெடி பியர் துணையுடன் பாரீஸ் வருகிறார். அல்லு அமலா காதலின் பால் ஈர்க்கப்பட்டு அல்லுவை காதலித்து படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சல்மான் கான் போல் தொடை வரை ஏறிய ஜீன்ஸ் டவுசருடன் தான் சுற்றுகிறார்.

ப்ரம்மானந்தமும் ஆலியும் காமெடி என்ற பெயரில் மொக்கைப் போட்டு கொல்கிறார்கள். ஆனால் கூட்டம் அதற்கும் கை தட்டுவது தான் ஆச்சரியம். நாசர், தணிகலபரணி, சுப்பாராஜூ, ராவ் ரமேஷ் என கூட்டமே இருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள் தான். தேவிஸ்ரீபிரசாத் போட்ட மூன்று பாடல்கள் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டாகி விட்டது. டாப் லேசிப் போயிந்தி என்ற பாட்டு ஏற்கனவே ரிங்க ரிங்கா பாடல் அளவுக்கு ஹிட். வேறென்ன வேண்டும் டிஎஸ்பிக்கு.

வேறோன்றும் படத்தினை பற்றி சொல்வதற்கு இல்லை. அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மட்டும் படத்தினை கொண்டாடுவார்கள். பக்கா தெலுகு பார்முலா படம். தமிழில் வர வாய்ப்பே இல்லை. அதனால் நீங்கள் தப்பித்தீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்
 

10 comments:

  1. ஆனா நீங்க போயி மாட்டிகிடின்களே அண்ணே

    ReplyDelete
    Replies
    1. நாம லவ் பண்ண காலத்துலேர்ந்து இந்த சத்திய சோதனைகள் பழகிடுச்சி தம்பி.

      Delete
  2. ethirparthalavu illa padam. paravala oru murai parkkalam.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கோ அதே பீலிங் தான்.

      Delete
  3. இந்த மாதிரி படங்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? ஒண்ணு பண்ணுங்க. தமிழ் படங்களை வீடியோ விமரிசனம் செய்து Google+ மற்றும் youtube - இல் போடுங்கள். நன்றாக இருக்கும். நிறைய மக்கள் பார்க்கும் போது Google advertisement மூலமா வருமானமும் வரும். சீக்கிரமா செய்ங்க.

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் செய்கிறேனே தவிர எனக்கு தெலுகு சினிமா மசாலா பிடிக்கும். மொழியும் தெரியும், பத்து வருடமாக முக்கிய நாயகர்களின் படங்களை முதல் காட்சி வருகிறேன். அதனால் தான் இன்றும் சென்றேன். அது கடைசியில் பல்ப்பை கொடுத்து விட்டது.

      Delete
  4. " தமிழில் வர வாய்ப்பே இல்லை "


    டப்பிங் ஆகி வர வாய்ப்பு இருக்கு தம்பி . . .

    படம் பேரு . . .

    " கத்திக்குத்து கபாலி "

    ReplyDelete
    Replies
    1. குத்துங்க எசமான் குத்துங்க
      இந்த தமிழனுங்களே இப்படித்தான், எதையும் தாங்குவானுங்க
      குத்துங்க எசமான் குத்துங்க.

      Delete
  5. சொல்ல முடியாது, ஜெயம் ரவி இப்போ ப்ரீயாதான் இருக்காரு..

    ReplyDelete
    Replies
    1. அவரு அங்கே ஹிட்டு ஆன படங்களை மட்டும் தானே ரீமேக் பண்ணுவாரு, இது அங்கேயே டவுட்டு தான்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...