இன்று பிரபாவின் கஜூரா பதிவைப் படித்தேன். இது வரை நான் படித்த பிரபாவின் பதிவுகளிலேயே மிகப் பிரமாதமான உவமையுடன் கூட எழுத்து நடையை இதில் தான் கண்டேன். என்ன ஒரு வாசிப்பனுபவம் (நன்றி : லக்கி). நான் உன்னிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது பிரபா.
அந்த பதிவின் லிங்க் : ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்
எல்லோரும் ஆசைகள் உண்டு. அதை நோக்கிய பயணம் எப்படி அமைகிறதோ அதற்கேற்றாற் போல் தான் வெற்றியும் அமைவதுண்டு. எனக்கு கட்டுரைகள், கதைகளை படிக்க ஆசை இருந்தாலும் சிறு வயதுகளில் இது போல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை.
எழுத்து என்பதோ இணையம் என்பதோ எனக்கான துறை இல்லை. நான் பதிவின் பக்கம் வருவதற்கு முன்பு யாரும் என்னிடம் இதைப் பற்றி சொல்லியதுமில்லை, வழிகாட்டியதுமில்லை. ஒரு நாள் தற்செயலாக ஒரு தமிழ்ப் பதிவை படிக்க நேர்ந்து அதன் மூலம் நூல் பிடித்து பல பதிவுகளுக்கு சென்று பிறகு படிப்படியாகத்தான் என் பக்கத்தை துவக்கினேன்.
அப்படியும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதும் இல்லை. எதாவது போட்டோ அல்லது அரசியல் கார்டூன்களை போட்டு எனக்கும் ஒரு இணையப் பக்கம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்வேன். ஆனால் அதை படிக்கச் சொல்ல எனக்கு இணையம் தெரிந்த நண்பர்களே கிடையாது.
இன்று வரை என் கல்லூரி நண்பர்கள் யாருக்குமே இணையம் பக்கம் வரும் பழக்கம் கிடையாது. ரொம்ப சிரமப்பட்டுத்தான் நண்பர்களுக்கு புரியவைக்க வேண்டும். அவ்வளவு சிரமப்பட்டு சொன்னதும் அடப்போடா ஒன்னும் விளங்கலை என்று எழுந்து போய் விடுவார்கள்.
பிறகு ஒரு நாள் பிரபாவின் நட்பு கிடைத்து அதன் மூலம் மற்றவர்கள் நட்பும் கிடைத்தது தான் எனக்கான கதவை திறந்து விட்டது. எப்படி எழுத வேண்டும், எதை செய்யக் கூடாது என்றெல்லாம் கூட அதன் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
முக்கியமாக மற்றொரு பக்கத்தில் இருந்து கட்டுரைகளை சுட்டு நமது பதிவில் போடக் கூடாது என்பதே அதன் பிறகு தான் புரிந்தது. படிப்படியாக ஒரு பாரா, இரண்டு பாரா என எழுத கற்றுக் கொண்டேன். இன்று சரளமாக ஒரு பக்கத்திற்கும் மேலாக பதிவெழுத முடியும்.
என்னுடைய எழுத்தில் இருக்கும் குறை என நான் நினைப்பது எழுத்து நடை படுராவாக இருக்கும். எழுத்தாளருக்குரிய ஒழுங்கு அதில் இருக்காது. அதை சரி செய்ய முயற்சிக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் இப்ப வரை அது எனக்கு கை கூடவே இல்லை.
நாவல்கள் கட்டுரைகள் எழுதும் பதிவர்களோ, பத்திரிக்கைத் துறையில் இருக்கும் பதிவர்களோ, சினிமாவில் இருக்கும் பதிவர்களோ இந்த மாதிரி பதிவை எழுதியிருந்தால் படித்து விட்டு எழுத்தாளர்கள் எழுதியது இது என்று பெருமூச்சு விட்டு சென்றிருப்பேன்.
ஆனால் என் நண்பன் மிக இயல்பாக மிகச்சிறந்த எழுத்தாளருக்கு உரிய உவமை நடையுடன் எழுதியிருந்த இந்த கட்டுரை என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. பிரபாவிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என புரிந்து கொண்டேன். நானும் காப்பியடிப்பேன். அப்படியே கட்டுரையை அல்ல. இது போன்ற எழுத்து நடையை.
பல மாதங்கள் என்னால் இப்படி எழுதப்படும் கட்டுரைகள் படு மொக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பழகப் பழக ஒரு நாள் எழுத்தும் வசப்படும் என்று நம்புகிறேன். அதற்கான பயிற்சியை துவங்கவும் போகிறேன். படிக்கிறவங்க தான் பாவம்.
ஒவ்வொரு பதிவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
வாழ்த்துக்கள் பிரபா
ஆரூர் மூனா செந்தில்

// கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. //
ReplyDeleteஉண்மைதான் மச்சி... இன்னும் கத்துக்கனும் அப்பதான் நிறைவா எழுத இயலும்..
கண்டிப்பா மச்சி
Deleteஒண்ணுமே புரியலே உலகத்திலே
ReplyDeleteஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே !
அதிமேதாவி பதிவர்களுக்கான குறியீடு இதில் ஒளிந்திருக்கிறது. தெரிந்தவர்களுக்கு புரியும்ணே.
Deleteநானும் பேஸ் புக்குல இதைப் பற்றி ஒரு ஸ்டேடஸ் போட்டு இருக்கேன் மச்சி...
ReplyDeleteபிரபாவிற்கும், உனக்கும் வாழ்த்துக்கள்..
நன்றி மச்சி
Deleteவார்த்தைகளை வளவளக்காமல் சுருக்க அதாவது எடிட் செய்யக் கற்றுக் கொண்டாலே உன் எழுத்துக்கள் ரசிக்கப்படும் செந்தில். குரைவான வார்த்தைகளில் உன் கருத்துக்களையும், வர்ணனை, உவமை எல்லாவற்றையும் கொண்டுவர வேண்டும் என்னும் போது முதலிரண்டு படைப்புகளுக்கு சவாலாக கடினமாக இருந்தாலும் அதன்பின் உன் எழுத்துகளுக்கு அனைவரும் கைதட்டுவார்கள். ஏதோ எனக்குத் தெரிஞ்சது அவ்ளவ்தான் தம்பி! உனக்கும் உன் முன்னோடியாக இருக்கும் பி.பிரபாகருக்கும் மனம் நிறைய நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅடடா, எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக சொல்லி விட்டீர்கள். நீங்க பெரிய மனுசன்ணே.
Delete//குரைவான வார்த்தைகளில்// இது எழுத்துப் பிழை இல்ல.. நீங்க ரொம்ப ராவா எழுதறீங்கன்னு வாத்தியார் பீல் பண்றாப்ல ஹா ஹா ஹா
Deleteபிரபா பதிவு படிக்கும் போதே சூப்பர்.... எழுத எழுத நிச்சயம் ஒருநாள் எழுத்து வசப்படும்ன்னு சும்மாவா சொன்னாங்க.. நிச்சயமா வசப்படும்னே
ReplyDeleteசெந்தில் அவர்களுக்கு,
ReplyDeleteஒரு காலத்தில் பத்திரிகைகளில் (80-90 களில்)வரும் எல்லா எழுத்துக்களும் சுஜாதாவின் எழுத்தைப் போன்றே இருக்கும்.இன்றைக்கு இணையம் மற்றும் பத்திரிகைகளில் எழுதும் பலர் அவர்களின் சொந்த பாணியிலேயே எழுதுகிறார்கள். நீங்கள் உங்கள் பாணியில் எழுதுவதே உங்களின் சிறப்பு.எதற்காக இன்னொருவரைப் போல எழுதவேண்டும்? Be proud of what is ours is ours.
//பல மாதங்கள் என்னால் இப்படி எழுதப்படும் கட்டுரைகள் படு மொக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ///
ReplyDeleteவெளங்கிடும்.
கற்றது கைமண் அளவு! கற்றுக் கொண்டே இருப்போம்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteunnaal mudiyum gopal... unnaal mudiyum :-))))
ReplyDeletePraba ezhuthurathu ellam oru ezhhuthunu athukku oru mokki paaraattu vera... thoooo...!
ReplyDeleteippdikki
Anjaasingam.
This comment has been removed by the author.
ReplyDeleteVery Nice Senthil !!
ReplyDeleteஇருவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete