சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, July 8, 2013

ஓவராக உணர்ச்சி வசப்படுதல் பொறுப்பானவனுக்கான இலக்கணமா

எந்த ஒரு செயலுக்கும் நம்முடைய ரியாக்சனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் போல. இல்லாவிட்டால் நாம் அந்த இடத்தில் கோமாளியாகி விடுகிறோம். சினிமாவில் கூட இது போல் ஓவர் ரியாக்சன் கொடுத்தால் தான் மக்கள் மதிக்கிறார்கள்.


வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அவர்களை பார்க்க நாம் மருத்துவமனைக்கு போனதும் சென்ற வாகனத்தை அது சைக்கினாக இருந்தாலும் சரி பைக்காக இருந்தாலும் சரி நிறுத்தாமல் அப்படியே கீழே போட்டு விட்டுத்தான் போக வேண்டும்.

நிதானமாக பைக்கை ஸ்டாண்டில் விட்டு சென்றால் பொறுப்பில்லாதவன் என்று சொல்கிறார்கள். நானும் நிஜ வாழ்க்கையில் பார்த்து விட்டேன், யாருமே இது போல் செய்வதே இல்லை. பின்னே ஏன் இப்படி.

ஏதாவது பாத்திரத்தை கையில் வைத்திருக்கும் போது அதிர்ச்சியான விஷயத்தை சொன்னால் உடனடியாக அதனை கீழே போட்டு உடைக்க வேண்டும். என் வீட்டில் பார்த்து விட்டேன், இது போல் நான் சொன்னால் பாத்திரங்கள் என் தலையில் தான் விழுகிறது. தவறிக்கூட கீழே விழ மாட்டேங்கிறது.


நானெல்லாம் பைக்கில் செல்லும் போது விழுந்து பெரும் சிராய்ப்புகள் ஏற்பட்டால் கூட எழுந்து சத்தம் போடாமல் கீழே கிடந்த பைக்கை எடுத்து சென்று விடுவேன். வீட்டம்மாவுக்கு காய்கறி வெட்டும் போது கையில் சிறுகாயம் ஏற்பட்டால் உடனடியாக நான் கடைக்கு சென்று பேண்ட்எய்டு வாங்கி வந்து கையில் போட்டு விட்டு ஆறுதல் சொல்ல வேண்டும்.

கையில் ஏற்பட்டது சிறுகாயம் தான் போல என்று சற்று அசால்ட்டாக கம்ப்யூட்டரில் உட்கார்ந்து இருந்தால் ரெண்டு நாளைக்கு சோறு கிடைக்க மாட்டேங்கிறது. நமக்கு போலியாக வருத்தப்படுவது போல் நடிப்பது வரமாட்டேங்குது என்ன செய்ய.

டிவியில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ அமர்ந்து நகைச்சுவை காட்சிகள் பார்க்கும் போது அந்த காட்சி ஏற்கனவே பார்த்திருந்தால் மறுமுறை பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வராது. அதை கவனித்தவர்கள் நம்மளை பார்த்து உம்மனாம்மூஞ்சி என்கிறார்கள். இதற்காகவே பார்மாலிட்டிக்கு பழைய ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியிருக்கிறது.


சரக்கடிக்கும் போது கூட சலம்பும் பழக்கம் எல்லாம் நமக்கு கிடையாது. எவ்வளவு அடிச்சாலும் நார்மலாகத்தான் பேசிக் கொண்டு இருப்பேன். இதை கவனித்த நண்பர்கள் இவன் மொடாக் குடிகாரன் அதனால் தான் இவ்வளவு குடித்தும் ஏறவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களுக்காகவே கொஞ்சம் குடித்தவுடனே பார்மாலிட்டிக்கு சலம்புவது போல் நடிக்க வேண்டியிருக்கிறது.

அதற்காக உணர்வே கிடையாது என்று அர்த்தமல்ல. பெரிய காயம் பட்டிருந்தால் உண்மையில் துடிக்கத் தான் செய்வேன். ஒரு ஜோக்கை முதல் முறை பார்த்தால் வாய் விட்டு சிரிக்கத் தான் செய்வேன். அளவுக்கு மீறி குடித்தால் சலம்பவே செய்வேன். ஆனால் அது இயல்பாக நடக்க வேண்டும்.

மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வராத சிரிப்பை வா வா என்று சொன்னால் அதுவும் என்ன தான் செய்யும். உலகமே ஒரு நாடக மேடை என்று அண்ணா சும்மாவா சொன்னார்.

ப்ளஸ் டூ பரிட்சை ரிசல்ட் வந்த போது எல்லோரும் நம்பரை பார்த்து விட்டு ஓவராக ரியாக்சன் செய்து கொண்டு இருந்தார்கள். நான் பெயில். ரிசல்ட் பார்த்ததும் எதுவும் ரியாக்சன் காட்டாமல் கிரவுண்டுக்கு போய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தேன்.

தனியாக பேப்பரை வாங்கிப் பார்த்த என் அப்பா நான் வீட்டில் காணவில்லை என்றதும் ஏதோ தவறாக செய்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டு அம்மா மற்றும் பாட்டியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஊர் முழுக்கச் சுற்றி என்னை சமாதானப்படுத்த தேடிக் கொண்டு இருந்தார்.

சில மணிநேரம் கழித்து கவலையுடன் கிரவுண்டுக்கு வந்து பார்த்தால் நானோ கூலாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் கோவம் வந்து ஸ்டம்ப்பை புடுங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார்.

ரிசல்ட் வந்ததும் பேசாம வீட்டுக்கு போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தா வீட்ல இருக்கிறவங்க பயந்து நம்மளை எதுவும் கேக்காம இருந்திருப்பாங்க போல, அட விடுன்னு அசால்ட்டா எடுத்துக்கிட்டு கிரிக்கெட் விளையாடியது எனக்கு பெரிய ஆப்பா அமைஞ்சது.

எங்கப்பா இனி இவன் திருவாரூர்ல இருந்தா வெளங்கமாட்டான்னு சென்னைக்கு பேக் பண்ணிட்டாரு. இல்லைன்னா இந்நேரம் நான் திருவாரூர்ல ஏதாவது அரசியல் கட்சில கவுன்சிலரா இருந்து மக்கள்கிட்ட வசூல் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்.

ஆரூர் மூனா செந்தில்
 

31 comments:

 1. திருவாரூர்ல ஏதாவது அரசியல் கட்சில கவுன்சிலரா இருந்து மக்கள்கிட்ட வசூல் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்.
  >>
  நல்லதொரு முதலமைச்சரை உங்க திருவாரூர் நாடு மிஸ் பண்ணிட்டு.

  ReplyDelete
  Replies
  1. திருவாரூர்லேர்ந்து ஒரு முதலமைச்சர் வந்ததுக்கே நாடு இந்த அளவுக்கு சீரழிஞ்சி போயிருச்சி. இன்னொரு முதல்வர் வந்தா சுத்தம்.

   Delete
  2. அக்கா எதோ உள்குத்தோட சொல்றாங்க...

   Delete
  3. அந்த உள்குத்தை ஞான் அறியும்

   Delete
 2. கடைசி பஞ்ச் கலக்கல்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணர்ர்ர்ர்ரு

   Delete
 3. இந்தக் காலத்திற்கு பல இடங்களிலும் நடிப்பு மிகவும் தேவை தான்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 4. திருவாரூர் தப்பிச்சது.,
  சென்னை இனி டவுட்டு தான்.,

  ReplyDelete
  Replies
  1. தப்பிச்சது திருவாரூர் மட்டும்தானா.

   Delete
 5. கவுன்சிலர் வட்டம் மாவட்டம் கொபசெ,பொருளாளர் இப்படி பல பதவிகள் போச்சே.

  ReplyDelete
  Replies
  1. வட போச்சே

   Delete
 6. இந்நேரம் பெரிய கோடீஸ்வரராக இருக்க வேண்டியதை அப்பா கெடுத்துடாருனு சொல்லுங்க :-)

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை சிறைப் பறவையா கூட இருந்திருக்கலாம்ல.

   Delete
 7. take it easy policy ! valkkaaiyay adhan pokkil vittu rasikkireerkal ! ENJOOY !!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுகந்த்

   Delete
 8. வில்லன்லாம் வேண்டாம் சார்...ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான், அப்புறம் சி.எம். அடுத்து ப்ரைம் மினிஸ்ட்டர். -- ஓ மை காட்.

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடுமை சரவணன் இது.

   Delete
 9. நல்ல வேளை! தாங்கள் அரசியல் வாதி ஆகாமல் தப்பித்தீர்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா நன்றி ஐயா

   Delete
 10. "திருவாரூர்லேர்ந்து ஒரு முதலமைச்சர் வந்ததுக்கே நாடு இந்த அளவுக்கு சீரழிஞ்சி போயிருச்சி. இன்னொரு முதல்வர் வந்தா சுத்தம்."


  கல்வெட்டில் பதிக்க வேண்டிய வாசகங்கள் . . .


  நல்ல பதிவு

  தம்பி


  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி நன்றி அண்ணா

   Delete
 11. // திருவாரூர்ல ஏதாவது அரசியல் கட்சில கவுன்சிலரா இருந்து மக்கள்கிட்ட வசூல் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன். //

  மச்சி அப்படியே வசூல் செய்தாலும் நீங்க வெச்சிக்கமாட்டீங்க.. நிறைய நல்லது செய்யத்தான் தோணும் உங்களுக்கு...

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ, அவ்வளவு நல்லவனில்லையே நானு.

   Delete
 12. ரெம்ப நல்லவரா இருப்பீங்க போல .....

  ReplyDelete
  Replies
  1. போங்க பாஸூ ரொம்ப பாராட்டாதீங்க, வெக்க வெக்கா வருது

   Delete
 13. வருத்த படுவது போல் நடிக்கத் தெரியாத நீங்க கட்சில கவுன்சிலரா இருந்து வசூல் பண்ணிகிட்டு இருப்பேன் னு சொல்லி சிரிப்பு காட்டாதீங்க.

  ReplyDelete
  Replies
  1. நோ, நான் சிரிப்பு போலீசு கிடையாது.

   Delete
 14. சரக்கடிக்கும் போது கூட சலம்பும் பழக்கம் எல்லாம் நமக்கு கிடையாது. எவ்வளவு அடிச்சாலும் நார்மலாகத்தான் பேசிக் கொண்டு இருப்பேன். இதை கவனித்த நண்பர்கள் இவன் மொடாக் குடிகாரன் அதனால் தான் இவ்வளவு குடித்தும் ஏறவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களுக்காகவே கொஞ்சம் குடித்தவுடனே பார்மாலிட்டிக்கு சலம்புவது போல் நடிக்க வேண்டியிருக்கிறது.//

  அப்படியா தல...?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தளபதி

   Delete
 15. vanakkam thozhar.pathivu nallarukku.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...