சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, July 22, 2013

பஞ்சேந்திரியா - சென்னையில் டப்பாவாலாக்கள், எ மா ச வாழ்கிறோம்

கரடு முரடான உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் எனக்கு எதற்கு உதவுகிறதோ இல்லையோ சாலையில் நடக்கும் தகராறுகளுக்கு மற்றவர்களை யோசிக்காமல் ஒரடி பின்வாங்கச் செய்கிறது.

இரண்டு வருடத்திற்கு முன்பு திருவாரூரில் இரண்டு பேருந்துகள் ஒரே நிறுத்தத்தில் நிற்கையில் பின்வரும் வாகனங்கள் செல்ல வழியில்லை. இருந்த கேப்பில் நான் புகுந்து செல்ல முற்பட எதிரில் வந்த ஆட்டோக்காரன் "டேய் மயிராண்டி" என்று சவுண்டு விட்டான். அப்படியே நின்று வண்டியை கீழே போட்டு திரும்பினேன். சற்றும் யோசிக்காமல் "அண்ணே நீங்க போங்கண்ணே, நான் ஆளை மாத்தி கூப்பிட்டேன் ஸாரிண்ணே" என்றான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள ஒரு நாற்சந்திப்பில் நான் கடக்கும் போது குறுக்கே மோதுவது போல் வந்த ஆட்டோவின் பின்னே அமர்ந்திருந்தவன் பயத்தில் என்னைப் பார்த்து "அடப்பாவி" என கத்தினான். சைடு ஸ்டாண்டு போட்டு இறங்கி "என்ன" என்றேன். "சார் நான் டிரைவரை திட்டினேன் நீங்க போங்க" என்றான்.

# வில்லன் பொன்னம்பலம் மாதிரி ஆகிட்டேன் போல. கண்ணாடியில் எப்படிப் பார்த்தாலும் ரொமாண்டிக் லுக் வர மாட்டேங்குதே - கவுண்டமணிகிட்ட கிளாஸூக்கு போகனும் போல # ஏ அக்கா மகளே இந்து.

----------------------------------------

Factu Factu Factu



-----------------------------------------------

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் தலைப்பில் முகநூலில் பகிர்ந்தவை

என் நண்பன் வெளிநாடு செல்வதற்காக சென்னை வந்தான் அவனுடன் இன்று முழுக்க சுற்றி இரவு அவனை வழியனுப்பி வந்து முகநூலை பார்த்தால் எல்லோரும் ஸ்டாம்ப் அடித்து உலவ விட்டு இருக்கின்றனர். நான் தான் லேட்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நைட்டு ஓவர் மப்பு, காலைல எழுந்ததில் இருந்து தலைய வலிக்குது. கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு சொல்றான் ப்ரெண்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நக்கீரன் இன்னைக்கி 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருக்காராம். எவன் எவன்லாம் சிக்கி சின்னாபின்னமாகப் போறானோ, எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது # என்ன மாதிரியாக சமூகத்தில் வாழ்கிறோம்

5000 கிலோமீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணையை கூட கண்டுபிடித்து விட்டான். ஆனால் இன்னும் ஆப்பாயிலை பார்சல் செய்யும் முறையை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

கையேந்திபவனில் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மூன்றாம் முறையாக சாம்பார் கேட்டால் தரமாட்டேங்கிறேன் # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

-----------------------------------------------

எங்க குலசாமி


-----------------------------------------------

மும்பையில் உலகப் புகழ்ப்பெற்ற டப்பாவாலாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போல் சென்னையில் கூட பல வருடங்களுக்கு முன்பு டப்பாவாலாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா.

டப்பாவாலாக்கள் சரியான நேரத்தில் டிபன்பாக்ஸ் எடுத்து வருவதற்காக அரக்கோணத்தில் இருந்தும் கும்மிடிப்பூண்டியில் இருந்தும் மின்சார ரயில்கள் கிளம்பி சரியாக 11.30 மணிக்கு பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த உணவை சாப்பிடுவதற்காக மூன்று வகையான டிபன் ஷெட்டுகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஒன்று இந்தியர்களுக்கு சற்று வசதிக் குறைவானது. இரண்டாவது ஆங்கிலோ இந்தியர்களுக்கானது சற்று வசதியானது. மூன்றாவது வெள்ளைக்காரர் களுக்கான டிபன் ஷெட், இதில் வசதி சற்று கூடுதலானது.

காலப்போக்கில் டப்பாவாலாக்கள் மதிய உணவு எடுத்து வருவது நின்று போனாலும் அதற்கு சாட்சியாக இன்றும் அந்த ரயில்வே ஸ்டேசன் அருகில் மூன்று ஷெட்டுகளும் இருக்கின்றன. ஒன்று பாழடைந்து கிடக்கிறது. மற்ற இரண்டும் யூனியன் ஆபீஸ்கள் ஆகி விட்டன. மேலும் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.


ஆரூர் மூனா செந்தில்

19 comments:

  1. டப்பாவாலாக்கள் பற்றிய பதிவு அருமை !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்

      Delete
  2. மனம் "வெள்ளை" யாரும் புரிந்து கொள்வதில்லை...! ஹிஹி..

    டப்பாவாலாக்கள் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  3. இனிமே நான் எந்த பிரச்சனைக்கு போனாலும் உங்களையும் கூட்டிட்டுப் போகணும்....

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட அடியாள் ரேஞ்சுக்கு ஆகிட்டேன் போல.

      Delete
  4. அந்த ஷெட் லாம் ஒரு போட்டோ எடுத்து போடுறது.. நாங்களும் பாப்போம் இல்ல

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போடுறேன். கொஞ்சம் நேரம் எடுக்கும்.

      Delete
  5. எ மா ச வா //

    பேஸ்புக் ஒனரையே அலற வச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் ஹி ஹி...

    மும்பை டப்பா வாலாக்கள் சென்னையிலுமா ? ஆச்சர்யமாக இருக்கிறதே...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க மனோ, இரண்டு நாளில் போட்டோவுடன் பதிவிடுகிறேன்

      Delete
  6. சென்னையில் ரவுடி பதிவர்....

    அண்ணே, வாழ்க சொல்லிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அத ஒரு மதுர பதிவர் சொல்லக்கூடாது, மதுரக்காரய்ங்க கக்கத்துல அருவாவ வச்சிக்கிட்டு சுத்துறத எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்

      Delete
  7. in puplic, at home மிக அருமையான படங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  8. அப்படி ஒன்னும் தாங்கள் அழகாக இல்லாமல் இல்லையே?
    களையான முகம்.லட்சனமாகத்தான் இருக்கிறீர்கள்.
    என்ன கொஞ்சம் டயட்டில் இருந்தால் ரஜினி மாதிரி ஆகிவிடலாம்.
    அப்போது இன்னும் அழகாக மிளிருவீர்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. அட அட அடடா கேட்கும் போதே காதில் தேன் வந்து பாயுதே, நன்றி தேவதாஸ் சார்

      Delete
  9. டப்பா வாலாக்கள் திருச்சியில் இப்போதும் இருக்கிறார்கள் என்று நினைக்கறேன் , ஏனென்றால் என் மாமனார் பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை செய்த போது தினமும் அவருக்கு மதிய உணவு கொண்டு செல்ல ஒருவர் வருவார் என்று என் மனைவி சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நண்பா உண்மை தான். ஆனால் இப்பொழுது வழக்கொழிந்து விட்டது.

      Delete
  10. Dabbawala - even now exist in Chennai.
    They carry food from State Govt employee quarters like Tod Hunter Nagar Saidapet, Peters Colony Royapettah, Collectors Colony Anna Nagar to Secretariat.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...