சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, July 31, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு

tamilbloggers.info வலைத்தளம் தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் பதிவு செய்யப்பட்டும் இன்னும் இணைக்கப்படவில்லை. அதனால் இந்த செய்திகள் பெரும்பாலான பதிவர்களை போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தளத்திலிருந்து பகிரப்படுகிறது.


பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை
இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க தமிழ்பிளாக்கர்ஸ் இன்ஃபோ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

நன்றி

ஆரூர் மூனா செந்தில்
வரவேற்புக்குழு


13 comments:

 1. ஆலோசிப்பது சென்னையை தவிர கலந்து கொள்பவர்களின் ஆலோசனையையும் கேட்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளதா...?

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா எத்தனை ஆலோசனை

   Delete
  2. அனைத்தும் இந்த தளத்தில் இருந்தால் (http://www.tamilbloggers.info/) பகிர்ந்து கொள்ள எளிதாக இருக்கும்... பிறகு மகுடத்தில் ஏற்றுவது....(!) சொல்லவா வேண்டும்...? நன்றி...

   முதலில் குழுமத்தை தமிழ்மணத்தில் சேர்க்கவும்...

   Delete
 2. பதிவர் திருவிழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 3. Replies
  1. நன்றி அஜீம்

   Delete
 4. ரைட்டு....
  என்னன்ன செய்யனுமோ அம்புட்டும் செய்யுங்க...

  இங்க அங்கே வேற போய் பார்க்கனுமா....
  பார்க்கிறேன்....

  கலக்குங்க..

  நான் அதிகம் ஆசப்படல...
  ஒரே ஒரு ஆள் உயர கட்அவுட் வைச்சாமட்டும் போதும்....

  நமளுக்கு இந்த விளம்பரமே பிடிக்காது...

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆள் உயரதுக்குன்னு சொன்னிங்க ஆனா ஆள் யாருன்னு சொல்லவில்லை செந்திலுக்கு கட் அவுட் வச்சு பார்க்க ஆசைபடுகிரிர்களா ,என்ன நல்ல மனசு உங்களுக்கு . புல்லரிக்குது

   Delete
  2. உங்களை மட்டும் வச்சா போதுமா உங்களுக்கு சோடியா எதுனா ஹீரோயினி போட்டோவையும் சேர்த்து போடனுமா.

   Delete
 5. பதிவராக இல்லை எனில் அனுமதி கிடையாதா? நான் பதிவுகளை வாசிப்பவன்..... பதிவுகளை படிக்கும்போது , மனிதம் இன்றும் மக்களிடையே வாழ்கி றது என்பதை உணர முடிகிறது ....இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொண்டு நல்ல உள்ளங்களின் நட்பை பெற மனம் விரும்புகிறது .....ஆனாலும் , இந்த முறை முடியாது . திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் இன்று கொண்டு தொலைபேசியில் உரையாடினேன் .......அவரும் மனமுவந்து அழைப்பு விடுத்தார் ....ஒருவேளை இறைவன் அருளால் கலந்து கொள்ள முயற்சிக்கலாம் .......சந்திப்பு வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இருக்கும்... வருகையை உறுதி செய்யவும்... (dindiguldhanabalan@yahoo.com) நன்றி...

   Delete
 6. பதிவுலக கொண்டாட்டம்...!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...