சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, July 2, 2013

பஞ்சேந்திரியா - ஸ்டார் ப்ளஸ்ஸில் அசத்தும் தமிழ் மாணவர்கள்

சென்ற வாரம் ஸ்டார் ப்ளஸ்ஸில் இந்தியா டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். இந்தப் போட்டியில் சென்னையிலிருந்து லயோலா ட்ரீம் டீம் என்ற அணி கலந்து கொண்டு உள்ளது. இருப்பதிலேயே மிகுந்த திறமையை கொண்டுள்ளது இந்த அணி தான்.

தமிழ் பசங்க என்று தெரிந்ததும் யூடியூபில் அவர்களின் பழைய நடனங்களையும் பார்த்தேன். பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சியோ இந்தியில் நடப்பது, நம்ம ஊர் பசங்க இந்தி தெரியாததால் நடுவர்களிடம் முழு மதிப்பெண் எடுத்தாலும் வாசகர்களிடம் ஓட்டு எடுக்க சிரமப்படுகிறார்கள்.

சுமாராக நடனமாடுபவர்கள் கூட இந்திக்காரர்கள் என்பதால் முதல் இடத்திற்கு சாதாரணமாக வருகிறார்கள். நேற்று நிகழ்ச்சியில் இவர்கள் நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம். நாங்களும் இந்தியர்களே, எங்களுக்கு ஓட்டு போடுங்க என்று கேட்கும் போது மிகுந்த வருத்தமாக இருந்தது.

தமிழ் நண்பர்களே, ஒரு முறை India Dancing Superstar Loyola Dream Team என்று கூகிளில் தேடி அவர்களின் நடனங்களை பாருங்கள். நான் சொல்வது சரியாக இருந்தால் அவர்களுக்கு ஒட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்கள். போட்டிக்காக வடக்கே சென்று மொழி தெரியாமல் சிரமப்படும் திறமை உள்ள நம் சகோதரர்களை ஜெயிக்க வையுங்கள்.

---------------------------------------------------

நம்ம மதுரை நா. மணிவண்ணன் தான்


----------------------------------------

நேற்று மாலை நான்கு மணியளவில் ஒரு அவசர தேவையாக பணம் தேவைப்பட்டது. திருவாரூரிலிருந்து பணம் அனுப்பச் சொன்னால் 5 மணி வரை திருவாரூரில் திறந்திருக்கும் ஒரே வங்கி ஐசிஐசிஐ தான்.

என்னிடமோ எஸ்பிஐ, இந்தியன் வங்கி மற்றும் யுபிஐயில் மட்டுமே அக்கவுண்ட் இருந்தது. சென்னையில் யாரிடமாவது அதில் அக்கவுண்ட் இருந்தால் அக்கவுண்ட் நம்பர் கொடு. அனுப்பி வைக்கிறேன் என தம்பி சொன்னான். நானும் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உடன்பணிபுரிபவர்கள், பதிவுலக நண்பர்கள், தெரிந்த வங்கி அதிகாரிகள், ஆடிட்டர்கள் என குறைந்தது 100 பேருக்கு மேல் போன் பண்ணி கேட்டிருப்பேன்.

அவர்கள் எல்லோருமே தன்னிடம் ஐசிஐசிஐயில் அக்கவுண்ட் இல்லையென்றும் அவர்களின் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வதாகவும் சொன்னார்கள். அவர்கள் பங்குக்கு பலரிடமும் கேட்டுப் பார்த்தார்கள். சொல்லி வைத்தார் போல யாருமே ஐசிஐசிஐயில் அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை, வைத்திருந்தவர்களும் மூடி விட்டார்களாம். என்ன நடக்குது இங்க.

------------------------------------------------------

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை


-------------------------------------------

என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களில் இருவர் ராஜேந்திரன் மற்றும் செல்வராஜ். ராஜேந்திரன் மே மாதம் ஒய்வு பெற இருந்தவர், செல்வராஜ் அடுத்த மாதம். நான் வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு வருட காலங்களில் இருவரின் நட்பு கலாட்டாக்கள் பயங்கர சிரிப்பாக இருக்கும்.

இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வேலை செய்து கொண்டு இருப்பவர்கள். செக்ஸைப் பற்றி பச்சைப் பச்சையாக இருவரும் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இவர்களின் காமெடியினால் சிரித்துக் கொண்டே வேலைப் பார்ப்பார்கள்.

வேலைப்பளுவே தெரியாது. யாருக்காவது உடல்நலம் சரியில்லாமல் போனால் அடிக்கடி நீ எப்படியும் சாகப் போற உன் வேலை உன் புள்ளைக்குத்தான் என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொள்வார்கள்.

மே மாதம் ராஜேந்திரன் ஒய்வு பெற இருந்ததால் 28ம்தேதி அன்று பிரிவு உபசார விழாவுக்காக பிரியாணி ஏற்பாடு செய்து இருந்தார். சரக்கு கூட வந்து இறங்கி விட்டது. 28ம் தேதி காலை வேலைக்கு வரும் போது சென்ட்ரலில் நடந்த ரயில் விபத்தில் இறந்து விட்டார்.

ராஜேந்திரன் இறந்த நாள் முதல் செல்வராஜ் மிகவும் சோகமடைந்து விட்டார். ஜூன் 22ல் செல்வராஜூம் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். ஒரு மாதத்திற்குள் எங்கள் குழுவில் இருவர் மரணமடைந்தது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்.

அவர்கள் கிண்டல் செய்தது போல் அவர்கள் பிள்ளைகளுக்கு ரயில்வே வேலை கிடைத்து விடும். அதனை பார்க்கத்தான் அவர்கள் இல்லை.

ஆரூர் மூனா செந்தில்

7 comments:

 1. நம்ம தலையை சுத்து ஒரு தேவதை பறாந்துக்கிட்டே இருக்குமாம்.அது நாம எதாவது சொன்னா உடனே அப்படியே பலிக்கட்டும்ன்னு வாழ்த்துமாம். அதனால கூடிய வரைக்கும் கெட்ட சொல் சொல்லாம இருக்கனும். அதனால, தான் நடிக்கும் படங்கள்ல நாசமா போ, செத்துப்போன்னு வார்த்தை வந்தா “ நீ நல்லா இருடா”ன்னு கோவமா சொல்ற மாதிரி சீன் வைக்க சொல்லுவேன்னு ரொம்ப நாளைக்கு முன்னே டிடி டிவி ல சொன்னது எனக்கு நல்லா நினைவிருக்கு. அது நிஜம்தான் போல?!

  ReplyDelete
  Replies
  1. //நம்ம தலையை சுத்து ஒரு தேவதை பறாந்துக்கிட்டே இருக்குமாம்.அது நாம எதாவது சொன்னா உடனே அப்படியே பலிக்கட்டும்ன்னு வாழ்த்துமாம்.//

   அட அந்த தேவதையை என் தலையை சுத்த சொல்லுங்கம்மா

   Delete
 2. இருவர் மரணமடைந்தது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்தான்

  ReplyDelete
 3. இந்தியா டான்சிங் இணைப்பை தேடுகிறேன்... நன்றி...

  திரு. ராஜேந்திரன் & திரு. செல்வராஜ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தப்பட வைத்தது...

  ReplyDelete
 4. மரணம் மனதை நெருடவைக்கிறது...

  ReplyDelete
 5. அவர்கள் இருவரின் மனமும் அமைதியடையட்டும்...

  இந்தியா டான்சிங் இணைப்பை தேடுகிறேன்... நன்றி...

  ReplyDelete
 6. Looks like deliberately planned death like in movie "Kedi Ranga Killadi Billa".

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...