சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, July 19, 2013

அலைந்து திரிந்து மரியான் பார்த்த கதை

எப்பொழுதும் ஒரு நாள் நன்றாக இருந்தால் ஒரு நாள் கவிழ்த்து விடும். இன்றைய நாள் சரியில்லை என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது போல. எப்பொழுதும் AGSல் படம் பார்க்கும் நேற்று காலை மரியான் படம் பார்க்க முன்பதிவு செய்ய இணையத்திற்கு வந்த போது முதல் காட்சி 10.30 தான் என போட்டிருந்தது.


ஆனால் அம்பத்தூரில் 9 மணிக் காட்சிக்கான முன்பதிவுகள் தொடங்கியிருந்தன. காலையிலேயே படத்தினை பார்த்து முடித்து விட்டால் இன்று சில வேலைகளை கூடுதலாக பார்க்கலாம் என்று முடிவு செய்ததால் நண்பனிடம் கூறி அம்பத்தூர் முருகன் திரையரங்கில் டிக்கெட்டை எடுக்கச் சொல்லியிருந்தேன்.

அவனும் டிக்கெட்டை எடுத்து விட்டான். மாலை 6 மணிக்கு AGS வெப்சைட்டுக்கு போனால் 9 மணிக்காட்சிக்கு முன்பதிவு இருந்தது. அடடா தேவையில்லாமல் நண்பனை வேறு சொறிந்து விட்டோமே என்று யோசனையாக இருந்தது.

அவனிடம் சொல்லி டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். கேன்சல் செய்யச் சொன்னால் அவன் திட்டுவான். ஒரு படம் பார்க்க பெரம்பூரிலிருந்து அம்பத்தூர் போக வேண்டுமா எனவும் யோசனை.

சொல்லியாகி விட்டது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆகவேண்டுமென்று காலையில் இங்கிருந்து 8 மணிக்கு கிளம்பினேன். எப்படியும் AGS வழியாகத்தான் போக வேண்டும். பார்த்தால் திரையரங்கு காலியாக இருந்தது. எரிச்சலும் கடுப்புமாக கிளம்பினேன். நாதமுனி தாண்டியதும் மழை தொடங்கியது.

மழையில் நனையும் ஆசையில்லை, ஒதுங்கவும் மனமில்லை. நண்பன் வேறு காத்திருப்பானே என நனைந்து கொண்டே கிளம்பினேன். தியேட்டருக்கு சென்று பார்த்தால் எங்களுடன் சேர்த்து மொத்தமே இருவது பேர் தான் திரையரங்கில் இருந்தனர்.

----------------------------------------

மரியான் படத்தில் பார்வதி கதாபாத்திரம் முழுவதும் இயல்பிலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் எந்த கடலோர கிராமங்களிலும் இது போல் உடையணிந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை.

இருபது வயதை கடந்த பெண் குட்டை பாவாடை, சட்டை போட்டு எந்த கிராமங்களிலும் வெளியே நடமாட மாட்டார். மிகவும் சாதாரணமாக குனிந்தாலே மார்பு பகுதி தெரியும் அளவுக்கு இறக்கித் தைக்கப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு கிராமம் முழுக்க நடமாடுகிறார்.

அப்புக்குட்டி முன்னால் குனிந்து குனிந்து பேசுகிறார். குனிந்து கொண்டே லாலிபாப்பை ஒரு மார்க்கமாக சுவைக்கிறார். கவர்ச்சியாக இருக்கிறது, ஜொள்ளு கூட விடுகிறோம் சரி. ஆனால் நீங்கள் கிளாஸ் படம் என்று நினைத்து எடுத்த படத்தில் அல்லவா இந்த காட்சிகள் இருக்கிறது. ரூம் போட்டு யோசிங்கப்பா.

----------------------------------------

படம் முடிந்து வெளியில் வந்ததும் நல்ல வெயில் அடித்தது. சரி வீட்டுக்கு போய் விடலாம் என்று நினைத்த போது நண்பன் ஒரு ஆட்டோகேட் பைலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு போ என்றான். அவனுக்காக அவன் வீட்டுக்கு சென்று பைலை கரெக்ட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு மணியாகி விட்டதே என்று அங்கிருந்தே விமர்சனத்தை தட்டச்சு செய்தேன்.

முடித்து விட்டு வெளியில் வந்தால் வெளியில் நல்ல மழை, பயங்கர கடுப்பாகிப் போனது. எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னு திட்டிக்கிட்டே வீட்டுக்குள் போய் விட்டேன். அரைமணிநேரம் வரை காத்திருந்தேன். மழை விடுவது போல் தெரியவில்லை. பாலிதீன் கவர் வாங்கி போனையும் பர்ஸையும் பத்திரப்படுத்திக் கொண்டு மழையில் நனைந்த படியே வீடு வந்து சேர்ந்தேன்.

சிங்கம் 2 படத்திற்கு டிக்கெட் எடுத்தது போல் இந்த படத்திற்கும் அவரசப்படாமல் டிக்கெட் எடுத்திருந்தால் அவ்வளவு தூரம் அலைச்சலும் இருந்திருக்காது. மழையில் நனைந்திருக்கவும் மாட்டேன். உடனடியாக வீடு வந்தும் சேர்ந்திருப்பேன். எல்லாம் என் கெரகம். ஒன்னியும் பண்ண முடியாது.

ஆரூர் மூனா செந்தில்

17 comments:

 1. ராஜகுரு அறிவுரையை (?) மீறி விட்டீர்களே...! ஒன்னியும் பண்ண முடியாது.... ஹிஹி... உங்கள் (ப)பாணியை தொடர்க...

  ReplyDelete
  Replies
  1. எங்க அண்ணன் தப்பா எடுத்துக்க மாட்டாரு, நன்றி தனபாலன்

   Delete
 2. படத்த விட....படம் பார்த்தக் கத சூப்பரு...கொஞ்சம் பரத்பாலா பராக்கப் பார்த்திருந்தா....படம் அவலக்கொடி ஆகியிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க பரிதி நீங்க சொன்னது சரி. நன்றி

   Delete
 3. 20 பேர் தான அப்போ படம் அவுட் டா

  ReplyDelete
  Replies
  1. அம்பத்தூர்ல மட்டும் நாலு தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் இப்படித்தான் ஆகும். படத்திற்கு விளம்பரம் வேறு கம்மி.

   Delete
 4. உங்களுக்கும் நம்ம ராசி தலீவா......

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   Delete
 5. சரி படம் எப்டிபா கீது...

  ReplyDelete
  Replies
  1. ஒரு தபா பாக்கலாம் தோஸ்து

   Delete
 6. சூது கவ்வும்ல டாக்டர் தாதா சொல்ற மாதிரி கிளி ஜோசியன் எல்லாம் ரியல் எஸ்டேட் பண்ற மாதிரி கீரை விக்கறவன் எல்லாம் விமர்சனம் எழுதுனா இப்படி தான் இருக்கும்.( 4 வில்லு , 5 வேட்டைக்காரன், 6 குருவி, 7 ஜி , 8 வேலாயுதம் பார்க்க வைக்கணும் )ஒரு நல்ல படம் எடுத்த புடிக்காதா உனக்கு ....கமர்சியால் படமே இன்னும் எத்தன நாள் தான் பார்பிங்க... இந்த மாதிரி நல்ல படமும் பாருங்க.......

  ReplyDelete
  Replies
  1. நன்றி அந்தோணி, வாழ்க வளர்க.

   Delete
 7. Nalla interesting erunthathu ungal kathai.... Valthukkal Senthil

  ReplyDelete
  Replies
  1. நன்றி மணிகண்டன்

   Delete
 8. பிரபலங்களின் கடைசி நாட்கள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் !!! நேரம் கிடைத்தால் எழுதவும் .... வாழ்த்துக்கள் செந்தில் !!!

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்கிறேன் மணிகண்டன்

   Delete
 9. Heard Oscar (Aascar) Ravichandran has locked all his money in Shankar's I production thats why no money to promote this movie.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...