சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, July 16, 2013

கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்தா கைப்புள்ளயோட கதி...

 17 வயது வரை என்னைப் பொறுத்த வரை சென்னை என்பது மேற்கு மாம்பலம் மட்டும் தான். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் மெரினா பீச்சும் காந்தி மண்டபமும் தான். புறநகரில் என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவும், கோல்டன் பீச்சும் தான். அதைத் தாண்டி வேறு இடங்கள் தெரியாது.


ஒவ்வோரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு சென்னைக்கு வருவது மேற்கு மாம்பலத்தில் உள்ள மாமா வீட்டுக்கு தான். இந்த காலகட்டங்களில் எனக்கு தெரிந்த திரையரங்குகள் உதயம், காசி, ஜெயராஜ், நூர்ஜகான், ஸ்ரீநிவாசா மட்டும் தான்.

பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னைக்கு அனுப்பி விட நினைத்த அப்பா பல இடங்களில் விசாரித்து ரயில்வே அப்ரெண்டிஸ்ஸில் சேர்த்து விட முடிவு செய்தார். அதன்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து போட்டு நுழைவுத் தேர்வுக்கு அழைப்பு வந்த போது அழுது கொண்டே ரயிலேறினேன்.


எந்த இடம் என்று கூட தெரியாமல் அண்ணாநகர் கிழக்கில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதி விட்டு திருவாரூருக்கு திரும்பி விட்டேன். பிறகு தேர்வானது வந்து சேர்ந்தது எல்லாம் இந்த கட்டுரைக்கு முக்கியமில்லை.

தங்குவதற்காக நான் வந்து சேர்ந்த இடம் பெரம்பூர். அதுவரை சற்று அமைதியான பகுதிகளையே சென்னை என்று நினைத்திருந்த நான் வந்த அன்று கண்முன்னே ஒருவன் வெட்டிக் கொல்லப்படுவதை கண்டேன். ஆட்டோவில் வந்தார்கள் வெல்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவனை வெட்டி சாய்த்து விட்டு போய் விட்டார்கள்.                              


சர்வமும் ஒடுங்கி விட்டது. திருவாரூரில் பிரச்சனையென்றால் கைகளால் அடித்துக் கொண்டு இருந்த நான் என்னை பெரிய முரடன் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு நிமிடத்தில் என் நினைப்பை அடித்து நொறுக்கி மரண பயத்தை காட்டி விட்டார்கள்.

அதன் பிறகு சில மாதம் வரை வகுப்பு நண்பர்களுடன் கலக்காமல் நான் மட்டும் தனியே இருந்தேன். அவர்களுடன் சகஜமாக பழகிய பிறகு தான் பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், வியாசர்பாடி என என்னை சுற்றிய பகுதிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் சாதாரணம் என்று தெரிய வந்தது.


ஒரு முறை எங்கள் ஏரியாவில் ரோட்டில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு ஆட்டோவில் வந்த வேறு சில நண்பர்கள் என்னுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்தவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள். வா மச்சான் அடுத்த ஏரியாவில் போய் கிரிக்கெட் பெட் மேட்ச் ஆடலாம் என்று அழைத்தார்கள்.

சரி என்று ஆட்டோவில் ஏறினேன். நேரே கொளத்தூர் மூகாம்பிகா தியேட்டர் அருகே சென்றது. சரசரவென இறங்கியவர்கள் ஆட்டோவின் பின்புறமிருந்து உருட்டுக் கட்டைகளையும் இரண்டு பட்டாக் கத்திகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்று அடித்து உடைத்து ஷட்டரை மூடி விட்டு வந்து ஆட்டோவில் ஏறி வாடா மச்சான் நம்ம தெருவுக்கே போகலாம் என்றார்கள்.

ஒரு மாசம் அவனுங்க பக்கமே போகவில்லை. பிறகு தான் புரிந்தது. இது சாதாரண ஏரியா கிடையாது, நம்ம கூட சுத்துறவனும் சாதாரணமானவன் கிடையாது என்று. ஒரு வருடத்தில் இவர்களுடன் சகஜமாகி நானும் சில பல கோதாக்களில் இறங்கி உள்ளேன். ஆனால் எங்காவது நம்ம பக்கம் வலு குறைவாக இருப்பது போல் தெரிந்தால் முதலில் எஸ்ஸாவது நானாகத்தான் இருக்கும்.

ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு கபடிப் போட்டியில் வேறொரு குழுவுடன் மோதும் போது சண்டையாகி எங்கள் நண்பர்களில் ஒருவன் அவர்களின் அணித் தலைவனை அடித்து விட்டான். எங்கே அவனுங்க ஸ்கெட்ச் போட்டுறுவானுங்களோன்னு பயந்து இரண்டு நாள் நாங்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே சென்று வந்தோம்.

பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு பிரச்சனை அடங்கி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் தனியாக அயனாவரம் பக்கம் போக அவர்கள் துரத்த ஆரம்பித்தனர். ஓடினேன் ஓடினேன் நூர் ஓட்டல் ஸ்டாப்பிங் வரைக்கும் ஓடினேன். வந்த பஸ்ஸில் ஏறி தப்பித்தேன்.

இரண்டு நாள் கழித்து தான் தெரிந்தது. அவர்கள் என்னை துரத்தியது அடிப்பதற்காக அல்ல, எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் அடிப்பார்களோ என்று பயந்து சமாதானத்திற்கு தூது விடத்தான் என்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல நாட்கள் எங்க ஆளுங்க ரன்னர் ரன்னர் என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அந்த சமயத்தி்ல் மாட்டியிருந்தால் கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்த கைப்புள்ளயாகியிருப்பேன் என்று என் உள்ளுணர்வு சொன்னதை அவர்களிடம் சொல்ல முடியுமா என்ன.

ஆரூர் மூனா செந்தில்

15 comments:

 1. இன்னும் எம்புட்டு கதைதான் வச்சிருக்கீர்....

  முடியலையா.....

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் தானே.

   Delete
 2. இருந்தாலும் சமாளிக்க வேண்டியதுதானே! நாந்தான் சண்டை வராம சமாதானம் பண்ணி விட்டேன்னு

  ReplyDelete
  Replies
  1. எதிராளிங்க நான் ஓடினதும் வேறொரு நண்பனை பிடித்து சமாதானம் பேசி இணைந்து விட்டு இந்த மேட்டரை வெளியில் சொன்னது தான் நான் பல்பு வாங்க காரணம்.

   Delete
 3. அட... எங்க ஏரியா....! (பெரம்பூர்-Binny Mills)

  முதலில் எஸ்ஸாவது... தற்போது மற்றவர்கள்...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அப்படி கூட வச்சிக்கலாம்

   Delete
 4. Replies
  1. நன்றி நண்பா

   Delete
 5. தோத்தவன்டா - இப்படித்தானே இருக்க வேண்டும்?

  ReplyDelete
 6. உண்மை உரக்க சொன்னீர்கள்.ஆங்காங்கே சிரிப்பு வந்தாலும் இது வே நிஜம்.

  ReplyDelete
 7. மச்சி... கதை களைகட்டுது...

  ReplyDelete
 8. யோவ்... கதையில அப்பப்ப ரெண்டு மூணு ஹீரோயினை நொழச்சு விடு...

  ReplyDelete
 9. பேசின்பிரிட்ஜ், வியாசார்பாடி, மகா கவி பாரதி (MKB) நகர், இந்த பக்கமெல்லாம் போயிராதீங்க. நீங்க சொன்ன எடத்த விட பயங்கரமான எடங்க இவை. சூளை, பெருமாள்பேட்டை, கொசப்பேட்டை,மூலக்கடை அப்படீன்னு நிறைய எடம் இருக்கு. சென்னை ஒரு கொலை நகரமா மாறிக்கிட்டிருக்குங்க.. பார்த்து..

  ReplyDelete
 10. இப்ப வருகிற சினிமா மாதிரி நல்ல அதிரடிக் கதையாகத்தான் இருக்கிறது...எனது சென்னை வாழ்க்கை அடைபட்ட சொகுசு சிறை வாழ்க்கை இன்றுவரை அப்படித்தான் இருக்கு...வெளிஉலகம் எதுவும் தெரிய மாட்டேன் எங்கிறது...எங்கேயாவது உறவினர் வீட்டு திருமணங்களுக்கு மண்டபம் தேடி மனைவியுடன் பைக்கில் போனால்..வீட்டில் திட்டி தீர்த்துவிடுவார்கள்..ஹி..ஹி கல்யாணம் முடிந்து...பந்தி முடிந்து...பிறகுதான் மண்டபம் போய் சேருவோம்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...