சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, May 30, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

மற்ற எதிர்ப்பார்ப்புகளுடைய படங்களைப் போல் இந்தப் படத்திற்கும் காலை 9 மணிக்காட்சி என ஏஜிஎஸ்ஸில் போட்டிருந்ததால் காலையிலேயே கிளம்ப முடிவு செய்து நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். சீக்கிரம் என்பதால் ஒருத்தனும் வரவில்லை.


ஆனால் எதிர்ப்பார்ப்புக்குரிய அளவுக்கு டிக்கெட் விற்பனை இல்லாததால் காலையில் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டு முதல் காட்சி 10.30க்கு தான் துவங்கியது. கூட்டமும் அவ்வளவாக இல்லாததால் சிறிய திரையரங்கில் படத்தை போட்டிருந்தார்கள்.

பொதுவாக சுப்ரமணியபுரம் படத்திலிருந்து இன்று வரை சசிக்குமாரின் ஒரு படத்தையும் முதல் காட்சி தவற விட்டதில்லை. பல படங்கள் முதல் காட்சிக்குரிய எதிர்பார்ப்பை சரியாகவே செய்திருந்தன. ஆனால் இந்த படம்?

படத்தின் கதை, ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.


தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது சாதி பாசமா, இல்லை வெறியா?

நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் கடைசியாக இந்த படம் வரை எல்லாவற்றிலுமே கதாநாயகன் தேவர் சமூகத்தை சேர்ந்தவராகவே வருவதன் ரகசியம் தான் புரியவில்லை. கொஞ்சம் மற்ற சாதியினரையும் காட்டுங்கப்பா.

படம் கதையாக சொல்லும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் பாதி படத்தை சொதப்பி இருக்கிறார்கள். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது.


சசிகுமார் படத்திற்கு படம் நடிப்பில் நன்கு மெருகேறி வருகிறார். படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு திரியும் சண்டியர்த்தனம் பொருந்துகிறது. காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.

படம் முழுக்க லுங்கியில் வந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்துகிறார். தாய்ப்பாசத்தில் மருகும் போது சற்று கலங்க வைக்கிறார்.

லட்சுமி மேனன் வருகிறார் செல்கிறார் அவ்வளவே, முந்தைய படங்களைப் போல் இந்த படத்தில் பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மேக்கப்பும் ஓவராக போட்டு கலங்கடிக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


படத்தில் மொத்த பலமும் சரண்யா மட்டும் தான். அம்மா வேடத்திற்கு வழக்கம் போலவே பாந்தமாக பொருந்திப் போகிறார். மகனுக்காக கொலையே செய்யும் கேரக்டர். மகனின் எதிரிகள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது.

சிலம்பாட்டம் என்பது சரியாக இருக்க வேண்டும், சுமாரான அளவில் இருந்தாலும் சொதப்பி விடும். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் சிலம்பாட்டம் ஆடியிருப்பது இப்ப வரைக்கும் கண்ணில் நிற்கிறது. தேவர்மகன் படத்தில் கமல் கூட சற்று சிரமப்பட்டு முயற்சித்து இருப்பார்.

மற்ற நடிகர்கள் எல்லாம் கட் ஷாட்களில் மாயாஜாலம் காட்டியிருப்பார்கள். இதிலும் சரியான டெம்போவில் வந்திருக்க வேண்டிய சிலம்பாட்ட சண்டையில் கட் ஷாட் வைத்தே சமாளித்திருக்கிறார்கள்.

படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. அடுத்த ஆக்சன் ஹீரோவாக முயற்சி என்றால் பார்த்து சாரே, விஷாலை பார்த்து சற்று கவனமுடன் இருக்கவும்.


படத்தின் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் சென்றிருக்க வேண்டும். ஒரு சில கிளைக் காட்சிகள் இருந்தாலும் எந்த இடத்திலாவது படத்தின் திரைக்கதையில் வந்து இணைய வேண்டும்.

ஆனால் இந்த படத்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் இருக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸில் ஏதோ நடக்கப் போகிறது என்று முன்பே தெரிந்து விடுவதால் இது போன்ற சம்பந்தமில்லா காட்சிகள் அந்த டெம்ப்போவை குறைக்கின்றன.

பாலா மற்றும் சில கனா காணும் காலங்கள் நடிகர்கள் படத்திற்கு எந்த வித தேவையுமில்லாமல் வந்து செல்கிறார்கள். அவை எல்லாமே நகைச்சுவை என்ற பெயரில் கடியாகத்தான் உள்ளது.


சுந்தரபாண்டியனின் அதிரடி வெற்றியும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தான் இந்த படத்தின் வசூலை பாதிக்கப் போகிறது. இரண்டாம் பாதி மெதுவாக செல்தல், பாடல்கள் உட்பட இன்னும் சில குறைகள் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தினை ஒரு முறை கண்டு வரலாம்.

ஆரூர் மூனா செந்தில்
 

31 comments:


  1. "படத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது. "


    என்ன தம்பி . . .

    புலி கடிச்சி வச்சிடுச்சோ . .

    முதல் விமர்சனம் நீங்கள் தான் போல

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிண்ணோவ்.

      Delete
  2. புலி பாயல..பதுங்கிடுச்சு போல..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமா, நன்றி ஜீவா.

      Delete
  3. சிலம்பாட்டம் - புரட்சித் தலைவர் போல வருமா..? குட்டிப் புலி தானே... ஆனாலும் சசிக்காக பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தான் சரி. நன்றி தனபாலன்

      Delete
  4. சமீபகாலமாக ஓவர் பில்ட் அப் கொடுக்கும் படங்கள் அவ்வளவாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை என்று நினைக்கிறேன்.

    திருவாரூர்ல நடேஷ் தியேட்டர்லதான் வந்திருக்கு. 40 அடி உயர பேனர், வாழைமரம், பட்டாசு என்று தியேட்டர் அமர்க்களப்பட்டது. மதியம் என அலுவலகத்தில் இருந்து சாப்பிட கிளம்பும்போது படம் விட்டு வெளியே வந்த கூட்டத்தைப் பார்த்தேன். திருவாரூரைப் பொறுத்தவரை நல்ல ஓப்பனிங் என்று தோன்றுகிறது.


    ReplyDelete
    Replies
    1. பி அண்ட் சி சென்ட்டர்களில் படம் கண்டிப்பாக ஓடும்.

      Delete
  5. என்ன சசி ஆக்ஷன்ன்னுக்கு மாற போறார கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete
    Replies
    1. குருவி விஜய் மாதிரி ஆகாம இருந்தா சரிதான்

      Delete
  6. இவர எங்க ஊர்ல யாதவ சமுதாயம்னு பேனர் வைக்கிறாங்க இவர் தேவர் சமுதாய நடிகர வாறாரு ஒரு வேளை ரெண்டு சமுதயத்த இணைக்க போறாரோ . இணைச்சி என்ன பண்ண போறாரோ

    ReplyDelete
    Replies
    1. இது என்ன கணக்குன்னு தான் புரியலையே

      Delete
    2. anna ithu enga oorla nadantha unmai kathai , kuttipuli thevar samuthayatha sernthavan ,

      Delete
    3. கரெக்ட்டு தாங்க. ஆனால் சசிகுமாரின் படங்களில் தொடர்ச்சியாக தேவர் சமுதாயத்தினர் ஹீரோவாக காட்டப்படுகிறார்களே அதைத்தான் குறிப்பிட்டேன்.

      Delete
  7. ரொம்ப கஷ்டமா இருக்கு சசி படம் இப்டி ஆகிடுச்சே என்று

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ எல்லாம் மனுஷனாடா?

      Delete
    2. தம்பி, உனக்கு அடையாளம் தான் இல்லை. கொஞ்சம் நாகரீகமாவது பேசப் பழகு. சூப்பரா பேசி சூட்ட கிளப்பலாம்னு நினைப்பா. போப்பா அங்கிட்டு.

      Delete
    3. அந்த நாய்க்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதே இல்ல. விட்டு தள்ளுங்க.

      Delete
  9. ரொம்ப கஷ்டமா இருக்கு சசி படம் இப்டி ஆகிடுச்சே என்று

    ReplyDelete
    Replies
    1. நான் கூட சசி ரசிகன் தான், ஆர்வமுடன் தான் போனேன். கடைசியில் இப்படி ஆகிடுச்சே.

      Delete
  10. அண்ணே ஒங்ககிட்ட கேக்காம பதிவுக்கு இணைப்பு கொடுத்துட்டேன்.கோவிச்சுக்காதீங்க.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை விடுங்க தம்பி.

      Delete
  11. சுசிடமார் ஏமாத்திட்டாரா? குட்டிப் புலி கொஞ்சமா கடிச்சிருச்சு போல செந்திலை! ஆனா டி.வி. டீஸர்ல பாக்கறப்ப ல.மேனன் அழகாவே தெரிஞ்சாங்க. அதனால படம் பாக்கலாமான்னு ஒரு சபலம். ஹி.. ஹி...!

    ReplyDelete
    Replies
    1. என்னண்ணே பண்றது, லட்சு உங்க கண்ணுக்கு அழகா தெரியிறது. என் கண்ணுக்கு சுந்தரபாண்டியன் அளவுக்கு தெரியல.

      Delete
  12. டைட்டில்ல லெஃப்ட் சைடு உன் மூஞ்சி வெச்சிருக்கே. ரைட்டு...! ரைட் ஸைடு யார்யா அது பூச்சாண்டி?

    ReplyDelete
    Replies
    1. வீட்ல திருஷ்டி பொம்மை மாட்டுறது இல்லையா, அப்படித்தான்ணே.

      Delete
  13. நாங்களெல்லாம் சுந்தரபாண்டியிலேயே முழிச்சிகிட்டோம்.
    http://www.tamilanveethi.blogspot.in/2012/10/blog-post.html

    ReplyDelete
  14. குட்டிப் புலி -நொண்டிப் புலி - பாய தெரியல

    இசை ஜிப்ரன் or இல்லைராஜா ன்னு தெரியல்ல

    லயோலா கல்லூரி மற்றும் கல்லுரி மாணவர்கள் காங்கிரஸ் மண்டைல கல்லடி மாற்றி ஸ்கூல் பசங்க கொலைன்னு காமிச்சு இருகண்க எதுக்கு வம்புன்னு. அரசியல் பேசும் ஒரு சிறுவனை கழுத்தில் குத்திக் கொல்கிற காட்சி அதிர வைத்தாலும் இப்போதிருக்கிற அரசியல் சூழலையும் அதன் மேல் இருக்கும் பயத்தையும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம்.

    சசிகுமாரோட அப்பாரு ஊருக்காக செத்ததினால சாமியாகி அவரு குடும்பத்துக்கு தலைவரி கிடையாதுன்னு சொல்லுதாக. பொறவு தலகட்டு வரி தரலைன்னு ஊர் திருவிழாவுக்கு சேதி சொல்லாம போறது எதுக்கு?. ---தலை வலிக்குது ஊரு பெருசுங்க கால்ல விழும்போது `

    எப்ப வெட்டும் போதும் ஒருலிட்டர் ரத்ததை ஓடும்புல ஊத் திகிரங்க -ஆடு வெட்டும் போடும் மனிசனை வெட்டும் போடும்...குறிப்பா சரண்யா அம்மா மேல- ரெத்த வெறி புடிச்ச படம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...